惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
B
Blog
V
V2EX
T
Tailwind CSS Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 【当耐特】
博客园 - 聂微东
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
The Cloudflare Blog
J
Java Code Geeks
H
Help Net Security
雷峰网
雷峰网
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
F
Fortinet All Blogs
Martin Fowler
Martin Fowler
D
Docker
L
LangChain Blog
人人都是产品经理
人人都是产品经理
爱范儿
爱范儿
WordPress大学
WordPress大学
V
Visual Studio Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழந்துதான் திமுகவுடன் 9 ...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

அருப்புக்கோட்டை: சுயமரி​யாதை​யையும் தன்​மானத்​தை​யும் இழந்துதான் திமுக கூட்​ட​ணி​யில் 9 ஆண்​டு​கள் பயணித்​தோம் என்று மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ கருத்து தெரி​வித்​துள்​ளார்.

விருதுநகர் மாவட்​டம் அருப்​புக்​கோட்​டை​யில் மதி​முக நிர்​வாகி இல்ல திருமண விழா​வில் பங்​கேற்று நேற்று அவர் பேசி​ய​தாவது: தமிழத்​தின் தற்​போதைய முதல்​வர் விஜய் என் வீட்​டுக்கு வரு​வார் என்று நான் கனவிலும் எதிர்​பார்க்​க​வில்​லை. பண ஆசை என்​பது ஒரு சதவீதம்​கூட இல்​லாதவன் நான். பொது​வாழ்க்​கை​யில் நானும் என் மகன் துரை வைகோ​வும் லட்​சக்​கணக்​கான கோடிகள் சம்​பா​தித்து விட்​ட​தாக​வும், அண்ணா சாலை​யில் அடுக்​கடுக்​கான மாளி​கைகளை என் மகன் கட்டி வைத்​திருப்​ப​தாக​வும் ஒரு​வர் வீண் பழி சுமத்தி வரு​கிறார்.

மேலும் முதல்​வர் விஜய்யை பார்த்து 50 கோடி ரூபாய் நான் வாங்​கி​விட்​ட​தாக​வும், 6, 7 மாத கால​மாக என் மீது அபாண்​ட​மான பழி​களை​யும் சுமத்தி வரு​கிறார். அவரை இப்​படிப் பேச வைப்​பது யார்? 32 ஆண்டு கால அரசி​யல் வாழ்​வில் ஐந்​தரை ஆண்​டு​கள் சிறை​யில் இருந்​துள்​ளேன், என்​னால் யூகிக்க முடி​யா​தா? யார் இதைத் தூண்டி விட்​டது என்​று.

முல்லை பெரி​யாறு அணை இல்​லை​யேல் மதுரை மாநகருக்கு குடிக்​கத் தண்​ணீர் கிடைக்​காது. 85 லட்​சம் ஏக்​கர் பஞ்​சப் பிரதேச​மாகும். அப்​படிப்​பட்ட முல்லை பெரி​யாறை காக்க 11 ஆண்​டு​கள் போராடிய​வன். நான் இருக்​கும் இடத்​துக்கு விசு​வாச​மாக இருந்​திருக்​கிறேன். அவர்​களை தூக்​கிப் பிடித்​திருக்​கிறேன்.

ஆனால், எங்​களை​விட வலுகுறைந்த கட்​சிகளுக்கு அதிக இடங்​கள், கிளை​கள்​கூட இல்​லாத கட்​சிக்கு 8 இடங்​கள், காணா​மல்​போகும் நிலை​யில் இருந்த கட்​சிக்கு 10 இடங்​களும் மாநிலங்​களவை பதவி​யும் அளித்​தார்​கள். எங்​களுக்கு மாநிலங்​களவை இடமும் கிடைக்​க​வில்​லை.

வேறு வழி​யில்​லாமல்... அனைத்​துக் கட்​சிகளும் அவர​வர் சின்​னத்​தில் நின்​ற​போது எங்​களை மட்​டும் அவர்​களின் சின்​னத்​தில் நிற்க சொன்​னார்​கள். வேறு வழி​யில்​லாமல் அவர்​களின் சின்​னத்​தில் நின்​றோம். எங்​கள் சுயமரி​யாதை​யையும் தன்​மானத்​தை​யும் இழந்​து​தான் 9 ஆண்​டு​கள் பயணித்​தோம். இந்த 9 ஆண்​டு​களில் திமுகவை ஒரு சொல் தவறாக சொன்​னது உண்​டா? உங்​களோடு இருந்த கட்​சிகள் உங்​களை விமர்​சித்​தன, அது உங்​களுக்​குத் தவறாகப்​பட​வில்​லை.

பாஜக​வுடன் கூட்​டணி வைத்து அதி​முகவை அமைச்​சர​வை​யில் அமர்த்த முடிவு செய்த நீங்​கள், எங்​களிடம் என்ன எதிர்​பார்க்க முடி​யும். இப்​படிப்​பட்ட விபரீத முடிவுக்கு வரு​வீர்​கள் என நாங்​கள் எதிர்​பார்க்​க​வில்​லை. இவ்​வாறு மதி​முக பொதுச் செய​லா​ளர் வைகோ தெரி​வித்​தார்.