惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
量子位
Y
Y Combinator Blog
大猫的无限游戏
大猫的无限游戏
B
Blog
U
Unit 42
C
Check Point Blog
I
InfoQ
aimingoo的专栏
aimingoo的专栏
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
The Cloudflare Blog
H
Help Net Security
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
云风的 BLOG
云风的 BLOG
宝玉的分享
宝玉的分享
爱范儿
爱范儿

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குகள் பதிவாகி​யுள்ள மின்​னணு இயந்​திரங்​கள், வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் 62 மையங்​களில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்டுள்ளன. இந்த மையங்​களில் 4 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேரவை பொதுத் தேர்​தல் வாக்​குப்​ப​திவு கடந்த 23-ம் தேதி ஒரே கட்​ட​மாக நடை​பெற்​றது. 234 தொகு​தி​களி​லும் அமைக்​கப்​பட்​டிருந்த 75,064 வாக்​குச்​சாவடிகளில் காலை 7 மணி முதலே வாக்​காளர்​கள் ஆர்​வத்​துடன் வந்து வாக்​களித்​தனர். இதனால், வரலாறு காணாத வகை​யில், 85.15 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

மாலை 6 மணிக்கு வாக்​குப்​ப​திவு முடிந்​ததும், மின்​னணு இயந்​திரங்​கள், விவி​பாட் மற்​றும் கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள் அனைத்தும் வேட்​பாளர்​களின் முகவர்​கள் முன்​னிலை​யில் சீலிடப்பட்​டன. பின்​னர், வாக்கு எண்​ணிக்​கைக்​காக தமிழகத்​தின் அனைத்து மாவட்​டங்​களி​லும் அமைக்​கப்​பட்​டுள்ள 62 மையங்​களுக்கு பலத்த போலீஸ் பாது​காப்​புடன் எடுத்​துச் செல்​லப்​பட்​டன.

வாக்கு எண்​ணும் மையங்​களுக்கு வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள் முழு​மை​யாக கொண்​டு​வரப்​பட்​டதும், பாது​காப்பு அறை​யில் (‘ஸ்​டி​ராங் ரூம்’) வைத்​து, வேட்​பாளர்​களின் முகவர்​கள் முன்​னிலை​யில் சீலிடப்​பட்​டன. இந்த அறை​களை சுற்​றிலும் 4 அடுக்கு பாது​காப்பு போடப்​பட்​டுள்ளது.

மத்​திய ஆயுதக் காவல் படை​யினர், தமிழ்நாடு சிறப்​புக் காவல் படை​யினர், சட்​டம் - ஒழுங்​கு, குற்​றப்​பிரிவு, போக்​கு​வரத்து போலீ​ஸார் 24 மணி நேர​மும் சுழற்சி முறை​யில் கண்​காணிப்பு பணியை மேற்​கொண்டு வரு​கின்​றனர். சிசிடிவி கேம​ராக்கள் மூல​மாக​வும் இந்த மையங்கள் கண்காணிக்​கப்​படுகின்றன. அரசி​யல் கட்சி​ முகவர்​களும் மையங்​களுக்கு வெளியே இருந்தபடி, கண்​காணித்து வரு​கின்​றனர்.

தமிழகம் முழு​வதும் உள்ள 62 வாக்கு எண்​ணும் மையங்​களிலும் பாது​காப்பு பணி​யில் மொத்தம் 18 ஆயிரம் போலீ​ஸார் ஈடு​பட்டுள்​ளனர். மே 4-ம் தேதி வாக்கு எண்​ணிக்கை நடை​பெறும் ​வரை இந்த பாது​காப்பு தொடரும்​ என்​று காவல்​ துறை தரப்​பில்​ தெரிவிக்கப்பட்​டுள்​ளது.