惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
美团技术团队
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
J
Java Code Geeks
Jina AI
Jina AI
罗磊的独立博客
宝玉的分享
宝玉的分享
S
SegmentFault 最新的问题
D
DataBreaches.Net
博客园 - 叶小钗
腾讯CDC
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Last Week in AI
Last Week in AI
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Google DeepMind News
Google DeepMind News
阮一峰的网络日志
阮一峰的网络日志
B
Blog
V
Visual Studio Blog
雷峰网
雷峰网
博客园 - 【当耐特】
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Engineering at Meta
Engineering at Meta
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
128-வது மலர்க் கண்காட்சிக்கு தயாராகும் ஊட்டி தாவரவியல் பூ...
2026-04-27 · via hindutamil

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக மலர் தொட்டிகள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர். | படம்: ஆர்.டி.சிவசங்கர். |

Updated on

1 min read

ஊட்டி: ஊட்டியில் மே மாதம் நடை​பெற​விருக்​கும் 128-வது மலர்க் கண்​காட்​சிக்​காக அரசு தாவர​வியல் பூங்கா முழு வீச்​சில் தயா​ராகி வரு​கிறது. சர்​வ​தேச சுற்​றுலாத் தலமான நீல​கிரி மாவட்​டத்​துக்கு ஆண்டுதோறும் ஆயிரக்​கணக்​கான சுற்​றுலாப் பயணி​கள் வந்து செல்​கின்​றனர்.

கடந்த ஆண்டு சுமார் 25 லட்​சம் பேர் வந்த நிலை​யில், இந்த எண்​ணிக்கை இந்த ஆண்டு அதி​கரிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில், கோடைகாலத்​தில் மாவட்ட நிர்​வாகம், சுற்​றுலா மற்​றும் தோட்டக்​கலைத்துறை சார்​பில் கோடை விழா நடத்​தப்​படும்.

இதில் முக்கிய​மாக ரோஜா காட்​சி, மலர்க்கண்​காட்சி மற்றும் பழக்​கண்​காட்சி ஆகியவை அடங்கும். உலக பிரசித்தி பெற்ற இந்த கண்​காட்​சியை காண உள்​நாடு மற்​றும் வெளி​நாடுகளி​லிருந்து சுற்​றுலாப் பயணி​கள் வரு​வார்​கள்.

கண்​காட்சி தொடங்கும் முதல் இரு நாட்​களில் மட்​டும் ஒரு லட்​சத்​துக்​கும் மேற்பட்ட சுற்​றுலாப் பயணி​கள் மலர்க்காட்​சியை கண்டு ரசித்து செல்வார்​கள். கண்​காட்​சிக்​கான ஏற்​பாடு​கள் தீவிர​மாக நடை​பெற்று வரும் நிலை​யில் நீல​கிரி மாவட்​டத்​தில் உறைபனி​யின் தாக்​கம் அதிகமாக இருந்​த​தால், வனங்​கள் மற்​றும் புல்​வெளி​கள் காய்ந்து போயுள்​ளன.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா புல் மைதான​மும் காய்ந்து போய் உள்​ளது. இதனால், பராமரிப்​புப் பணிக்காக புல்​தரை மூடப்​பட்​டுள்​ளது. புல்​தரை​யில் உள்ள பள்​ளங்களை சீரமைக்கஉரம் கலந்த மண்கொட்​டப்​பட்டு, தண்​ணீர் பாய்ச்சப்​பட்டு வரு​கிறது.

மலர்க்​காட்சி மாடம், கண்​ணாடி மாளி​கை​யில் 50 ஆயிரம் வண்ண மலர்த் தொட்​டிச் செடிகள் அடுக்கி வைக்க ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன. தோட்​டக்​கலைத் துறை அதி​காரி​கள் கூறும்​போது, “இந்த ஆண்டு கோடை மழை சரிவர பெய்​யாத​தால், பூங்​கா​வில் தண்​ணீர் பற்​றாக்​குறை நிலவுகிறது.

கடும் வெயி​லால் செடிகள்வாடி வரு​கின்​றன. இதனால், வெளியி​லிருந்து தண்​ணீர் கொண்டு வந்து செடிகளுக்கு பாய்ச்சி வரு​கிறோம். கடந்த சில நாட்​களாக மழைக்​கான அறிகுறிகள் தென்​படு​கின்​றன. மழை பெய்​தால் பூங்கா பொலிவு பெறும். மழை பெய்​யா​விட்​டால் சிக்​கல் ஏற்​படும். மலர்க்​கண் காட்​சிக்​கான ஏற்​பாடு​கள் துரிதமாக நடை​பெற்று வரு​கின்​றன’’ என்​றனர்.

10 லட்​சம் மலர் நாற்​றுகள்

பொது​மக்​கள், சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் ஜெரேனி​யம், சைக்​லமன், பால்​சம் மற்​றும் பல புதிய ரக ஆர்​னமெண்​டல் கேல், ஓரியண்​டல் லில்​லி, ஆசி​யாடிக் லில்​லி, டேலி​யா, பிகோனி​யா, கேன்​டீடப்ட், பேன்சி, பெட்டுனி​யா, பிளாக்ஸ் உள்ளிட்ட 275 வகை​யான விதைகள், செடிகள் ஜப்​பான், அமெரிக்​கா, ஜெர்​மனி, நெதர்​லாந்து மற்​றும் இந்​தி​யா​வின் பல்​வேறு மாநிலங்களி​லிருந்து பெறப்​பட்டு மலர்​செடிகள் உற்​பத்தி செய்​யப்​பட்​டுள்​ளன. பூங்​கா​வின் பல்​வேறு பகு​தி​களில்​ 10 லட்​சம்​ மலர்​ நாற்​றுகள்​ நடவு செய்​யப்​பட்​டுள்​ளன.