






















Updated on
:
1 min read
அட்லி – பிரியா தம்பதியினருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லி. தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ படத்தினை இயக்கி வருகிறார். அட்லி – பிரியா தம்பதியினருக்கு முதலாவதாக மகன் மீர் இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு பிரியா இரண்டாவது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தனர்.
தற்போது அட்லி – பிரியா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் நெகிழ்ச்சியான முறையில் தனது பெற்றோரின் சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தனக்கு ஒரு தங்கை பிறந்திருப்பதாகவும் தான் இப்போது ஒரு ‘அண்ணன்’ ஆகிவிட்டதாகவும் அதில் அவர் அறிவித்துள்ளார். அட்லி – பிரியா தம்பதியினருக்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。