惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
云风的 BLOG
云风的 BLOG
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
罗磊的独立博客
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Jina AI
Jina AI
B
Blog RSS Feed
腾讯CDC
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
காலநிலை மாற்றத்துக்கு ஆணாதிக்கமும் காரணமா? - தியா மிர்சா ...
சு.சி.வீரகுந்தவை · 2026-06-18 · via hindutamil

Updated on: 

“காலநிலை மாற்றத்துக்கு ஆணாதிக்கமும் ஒரு காரணம்” - பாலிவுட் நடிகை தியா மிர்சாவின் இந்தக் கருத்து சமூக ஊடகங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிலர் அதை முற்போக்கான பார்வை எனக் கூற, மற்றவர்கள் அறிவியல் ஆதாரமற்ற வாதம் என விமர்சித்தனர். ஒரு பாட்காஸ்ட் உரையாடலில் பகிரப்பட்ட இந்தக் கருத்து, காலநிலை மாற்றத்தை நாம் எந்தக் கோணத்தில் புரிந்துகொள்கிறோம் என்ற கேள்வியையும் மீண்டும் முன்வைத்துள்ளது.

சர்ச்சையின் பின்னணி

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக செயல்பட்டு வரும் தியா மிர்சா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்த வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளில் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை சோஹா அலி கானுடன் நடைபெற்ற பாட்காஸ்ட் உரையாடலில், “சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க அமைப்புகள், இயற்கை வளங்களின் சுரண்டலுடனும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுடனும் தொடர்புடையவை” என்று அவர் கூறினார். “வளங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் ஆதிக்க மனப்பான்மை, இயற்கையை வெறும் பயன்பாட்டுப் பொருளாகக் காணும் அணுகுமுறையை உருவாக்குகிறது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்து வெளியானதும் சமூக ஊடகங்களில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. காலநிலை மாற்றத்தை சமூக மற்றும் அரசியல் அமைப்புகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தை தியா மிர்சா நினைவூட்டியுள்ளதாக ஆதரவாளர்கள் கூறினர். மறுபுறம், காலநிலை மாற்றத்துக்கான காரணங்கள் அறிவியல் ரீதியாக ஏற்கெனவே விளக்கப்பட்டுள்ள நிலையில், ஆணாதிக்கத்தை அதனுடன் இணைப்பது பொருத்தமற்றது என்று விமர்சகர்கள் வாதிட்டனர்.

விமர்சனங்கள் எழுந்த பிறகும், தியா மிர்சா தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை. மாறாக, ஈக்கோஃபெமினிசம் (Ecofeminism) தொடர்பான விளக்க வீடியோவைப் பகிர்ந்து தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

ஈக்கோஃபெமினிசம் (Ecofeminism) என்ன சொல்கிறது?

தியா மிர்சாவின் கருத்து, ‘ஈக்கோஃபெமினிசம்’ எனப்படும் பெண்ணியம் சார்ந்த சுற்றுச்சூழல் சிந்தனைக் கோட்பாட்டுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறையும், இயற்கை வளங்களின் சுரண்டலும் ஒரே ஆதிக்க மனப்பான்மையில் இருந்து உருவாகின்றன என்பதே இந்தக் கோட்பாட்டின் மையக் கருத்து.

இது தொடர்புடைய ஆய்வாளர்களின் பார்வையில், ‘சுற்றுச்சூழல் பாதிப்புகளையும் சமூக சமத்துவமின்மையையும் தனித்தனியாகப் பார்க்க முடியாது. வளங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன, யார் முடிவெடுக்கிறார்கள், அதன் தாக்கம் யாரை அதிகம் பாதிக்கிறது போன்ற கேள்விகளையும் இந்த அணுகுமுறை முன்வைக்கிறது.

அதே நேரத்தில், காலநிலை மாற்றத்துக்கான நேரடி காரணங்கள் குறித்து அறிவியல் உலகில் பெரும்பாலும் ஒருமித்த கருத்து நிலவுகிறது. புதைப்படிவ எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு, தொழில் துறை மாசுபாடு, காடழிப்பு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் வெளியேற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கான முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.

எனவே, ஆணாதிக்கம் காலநிலை மாற்றத்துக்கான நேரடி அறிவியல் காரணம் என்று கூறப்படவில்லை. ஆனால், சமூக அதிகார அமைப்புகள் மூலம் சுற்றுச்சூழல் கொள்கைகள் மற்றும் வளங்களின் பயன்பாட்டை எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த விவாதம் இந்தியாவிலும் முக்கியத்துவம் பெறுகிறது. வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் இயற்கைப் பேரிடர்கள் போன்ற காலநிலை மாற்ற விளைவுகள் பெண்கள், குழந்தைகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய சமூகங்களை அதிகமாக பாதிக்கின்றன என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

குறிப்பாக, கிராமப்புறங்களில் குடிநீர் சேகரிப்பு மற்றும் குடும்ப பராமரிப்பு பொறுப்புகளில் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால், இந்தப் பிரச்சினையின் தாக்கத்தை அவர்கள் நேரடியாக எதிர்கொள்கின்றனர். ஐ.நா.வின் சில பிரிவுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளும், காலநிலை மாற்றத்தின் தாக்கம் பெண்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பில் அதிகமாகப் பதிவாகிறது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன’ என்கின்றனர் ஆய்வாளர்கள்.

தியா மிர்சாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அந்தச் சர்ச்சையானது காலநிலை மாற்றம் குறித்த விவாதத்தை புதிய கோணத்தில் பார்க்க வைத்துள்ளது. காலநிலை மாற்றம் என்பது வெறும் சுற்றுச்சூழல் பிரச்சினையா அல்லது சமூக அமைப்புகளுடனும் தொடர்புடையதா என்ற கேள்வியை இந்த விவாதம் மீண்டும் முன்வைத்துள்ளது.