惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园_首页
C
Check Point Blog
B
Blog RSS Feed
G
Google Developers Blog
H
Help Net Security
博客园 - Franky
Blog — PlanetScale
Blog — PlanetScale
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
量子位
Recent Announcements
Recent Announcements
B
Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
D
DataBreaches.Net
小众软件
小众软件
T
The Blog of Author Tim Ferriss
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
MongoDB | Blog
MongoDB | Blog
Y
Y Combinator Blog
T
Tailwind CSS Blog
J
Java Code Geeks
MyScale Blog
MyScale Blog
雷峰网
雷峰网
有赞技术团队
有赞技术团队
博客园 - 聂微东

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பெங்களூருவில் ஆலங்கட்டி மழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 ...
2026-05-01 · via hindutamil

Updated on

1 min read

பெங்களூரு: பெங்களூருவில் பெய்த ஆலங்கட்டி மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் புதன்கிழமை (ஏப்.29) மாலை பலத்த இடி மின்னலுடன் ஆலங்கட்டி மழை கொட்டி தீர்த்தது. இதனால் சிவாஜி நகர், கம்மனஹள்ளி, கிருஷ்ணராஜபுரம், ராஜாஜி நகர், மெஜஸ்டிக், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட மரங்களும் மின் கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன.

சிவாஜிநகரில் உள்ள பழமையான‌ பவுரிங் மருத்துவமனையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சாலையோர கடைக்காரர்களும், மழைக்கு ஒதுங்கியவர்களும் சிக்கிக் கொண்டனர். இடிபாடுகளில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாந்தி நகரில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஆலங்கட்டி மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

சர்ச் தெருவில் உள்ள புக்வார்ம் புத்தக கடைக்குள் மழை நீர் புகுந்ததில் சுமார் 7 ஆயிரம் புத்தகங்கள் நனைந்தன. இதனால் சுமார் ரூ.20 லட்சம் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த கடையின் நிர்வாகி கிருஷ்ணா தெரிவித்தார். மழை நீரில் நனைந்த புத்தகங்களை வெயிலில் காய வைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.