惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

D
Docker
大猫的无限游戏
大猫的无限游戏
Jina AI
Jina AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 司徒正美
美团技术团队
雷峰网
雷峰网
阮一峰的网络日志
阮一峰的网络日志
WordPress大学
WordPress大学
T
Tailwind CSS Blog
U
Unit 42
C
Check Point Blog
S
SegmentFault 最新的问题
Martin Fowler
Martin Fowler
Stack Overflow Blog
Stack Overflow Blog
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
腾讯CDC
罗磊的独立博客
小众软件
小众软件
Recent Announcements
Recent Announcements
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீட் வினாத்தாளை கசியவிட்ட வேதியியல், தாவரவியல் பேராசிரியர...
செய்திப்பிரிவு · 2026-05-17 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நீட் வினாத்​தாள் தயாரிக்​கும் குழு​வில் இடம்​பெற்றிருந்த வேதி​யியல், தாவர​வியல் பேராசிரியர்​கள் வினாத்​தாள் கசி​வின் முக்​கிய குற்​ற​வாளி​களாக அடை​யாளம் காணப்பட்டு உள்​ளனர்.

என்​டிஏ சார்​பில் நீட் நுழைவுத் தேர்​வுக்​கான வினாத்​தாளை தயாரிக்க நாடு முழு​வதும் இருந்து முன்​னணி பல்​கலைக்​கழகங்​களின் பேராசிரியர்​கள் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். ஒவ்​வொரு​வரும் தலா 3 கேள்வி​களை வரையறுக்க வேண்​டும். அனைத்து பேராசிரியர்​களும் வழங்​கும் கேள்வி​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்டு செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்​பத்​தில் நீட் வினாத்​தாள் தயாரிக்​கப்​படும்.

எஸ்​பிஐ பாது​காப்பு பெட்​டகங்​கள்: ஒவ்​வொரு நீட் தேர்​வுக்​கும் இரு வகை​யான வினாத்​தாள்​கள் தயாரிக்​கப்​படும். இதில் பிர​தான வினாத்​தாள் அந்​தந்த மாநிலங்​களின் எஸ்​பிஐ வங்​கி​களின் பாது​காப்​புப் பெட்​டகங்​களில் வைக்​கப்​படும். இந்த வினாத்​தாளே தேர்​வின் போது வழங்​கப்​படும். மற்​றொரு வினாத்​தாள் கனரா வங்​கி​களின் பாது​காப்​புப் பெட்​டகங்​களில் வைக்​கப்​படும். ஒரு​வேளை தேர்​வுக்கு முன்​பாக வினாத்​தாள் கசிவு புகார் எழுந்​தால் இந்த வினாத்​தாள்​கள் தேர்​வின் போது வழங்​கப்​படும்.

கடந்த 3-ம் தேதி நடந்த நீட் நுழைவுத் தேர்​வின் போது எஸ்​பிஐ வங்​கி​களின் பாது​காப்​புப் பெட்​டகங்​களில் வைக்​கப்​பட்​டிருந்த வினாத்​தாள்​கள் வழங்​கப்​பட்​டன. ஆனால் அன்​றைய தினம் மாலையே வினாத்​தாள் கசிவு தொடர்​பான புகார்​கள் எழுந்​தன. இதுதொடர்​பாக ராஜஸ்​தானின் சிகார் நகரில் செயல்​படும் நீட் பயிற்சி மையத்​தின் ஆசிரியர் ஒரு​வர் உள்​ளூர் போலீஸ் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) அமைப்​புக்​கும் இ-மெ​யில் வாயி​லாக அவர் புகார் மனுவை அனுப்​பி​னார்.

இதுதொடர்​பாக ராஜஸ்​தான் தனிப்​படை போலீ​ஸாரும் மத்​திய புல​னாய்வு அமைப்​பு​களும் விசா​ரணை நடத்​தின. இதில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நாடு முழு​வதும் நீட் தேர்வு ரத்து செய்​யப்​பட்​டது.

இது​வரை 9 பேர் கைது: தற்​போது நீட் வினாத்​தாள் கசிவு குறித்து சிபிஐ வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. சிபிஐ விசா​ரணை​யில் இது​வரை 9 பேர் கைது செய்​யப்​பட்டு உள்​ளனர்.

ராஜஸ்​தான் தலைநகர் ஜெய்ப்​பூரை சேர்ந்த தினேஷ் பிவால், அவரது தம்​பிகள் மங்​கிலால் பிவால், விகாஷ் பிவால் ஆகியோர் நீட் வினாத்​தாளை பல லட்​சங்​கள் விலைக்கு விற்​பனை செய்​துள்​ளனர். இவர்​கள் மூவரும் தங்​கள் குடும்​பத்​தில் எம்​பிபிஎஸ் பயிலும் உறவினர்​களுக்கு வினாத்​தாளை வழங்கி உள்​ளனர்.

மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரில் அழகு நிலை​யம் நடத்​தும் மணிஷா என்​பவர் கடந்த ஆண்டு தனது மகளை எம்​பிபிஎஸ் படிப்​பில் சேர்த்​தார். அப்​போது நீட் வினாத்​தாள் கசிவு கும்​பலுடன்

அவருக்கு தொடர்பு ஏற்​பட்​டது. இந்த ஆண்டு மணிஷாவுக்கு நீட் வினாத்​தாள் முன்​கூட்​டியே கிடைத்து அவரும் பல லட்​சங்​களுக்கு விற்​பனை செய்​திருக்​கிறார். அவர் கைது செய்​யப்பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்டு உள்​ளார்.

மகா​ராஷ்டி​ரா​வின் நாசிக் நகரை சேர்ந்த சுபம் காரி​னார் மத்​திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​யில் எம்​பிபிஎஸ் படித்து வரு​கிறார். இவர் ஹரி​யா​னாவை சேர்ந்த பலருக்கு வினாத்​தாளை விற்​பனை செய்​திருக்​கிறார்.

மகா​ராஷ்டி​ரா​வின் புனேவை சேர்ந்த எம்​பிபிஎஸ் சேர்க்​கைக்​கான ஏஜென்ட் தனஞ்​செய் லோகாண்டே என்​பவர் நூற்​றுக்​கணக்​கானோருக்கு நீட் வினாத்​தாளை விற்​பனை செய்​துள்​ளார். அவரும் கைது செய்​யப்​பட்டு உள்​ளார்.

ஹரி​யா​னா​வின் குரு​கி​ராமை சேர்ந்த ஆயுர்​வேத மருத்​துவ முதலாம் ஆண்டு மாணவர் யாஷ் யாத​வும் ஏராள​மானோருக்கு நீட் வினாத்​தாளை விற்​பனை செய்​திருக்​கிறார். இவர்​கள் மூல​மாக ராஜஸ்​தான், மகா​ராஷ்டி​ரா, ஹரி​யா​னா, ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, காஷ்மீர், பிஹார், டெல்​லி, உத்​த​ராகண்ட், கேரளா உட்பட பல்​வேறு மாநிலங்​களில் நீட் வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருக்​கிறது.

இந்த சூழலில் நீட் வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம்​பெற்​றிருந்த மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வேதி​யியல் பேராசிரியர் பி.​வி. குல்​கர்​னியை சிபிஐ அதி​காரி​கள் நேற்று முன்​தினம் கைது செய்​தனர். இதைத் தொடர்ந்து நீட் வினாத்​தாள் தயாரிப்பு குழு​வில் இடம்​பெற்​றிருந்த மகா​ராஷ்டிார​வின் புனே நகரை சேர்ந்த தாவர​வியல் பேராசிரியை மணிஷா குரு​நாத் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

இந்த இரு பேராசிரியர்​கள் மூல​மாகவே நீட் வி​னாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. இவர்​களுக்​கும் என்​டிஏ மூத்த அதி​காரி​கள் சிலருக்​கும் நெருங்கிய தொடர்​பு இருக்​கக்​ கூடும்​ என்​று சந்​தேகிக்​கப்​படு​கிறது. இதுதொடர்​பாக சிபிஐ அதி​காரி​கள்​ தீவிர வி​சாரணை நடத்​தி வருகின்​றனர்​.