惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
A
About on SuperTechFans
J
Java Code Geeks
G
Google Developers Blog
L
LangChain Blog
小众软件
小众软件
宝玉的分享
宝玉的分享
云风的 BLOG
云风的 BLOG
P
Proofpoint News Feed
博客园 - 【当耐特】
IT之家
IT之家
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
阮一峰的网络日志
阮一峰的网络日志
V
V2EX
博客园 - Franky
博客园_首页
雷峰网
雷峰网
Microsoft Security Blog
Microsoft Security Blog
Vercel News
Vercel News
B
Blog
月光博客
月光博客
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
15 கோடி பயனர்களின் உரிமைகளை எப்படி தடுக்க முடியும்? - டெல...
செய்திப்பிரிவு · 2026-06-19 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: நீட் மறு​தேர்வு வரை டெலிகி​ராம் செயலிக்கு தடை விதிக்​கப்​பட்​டதன் மூலம், 15 கோடி பயனாளர்​களின் உரிமைகளை எப்​படி தடுக்க முடி​யும்? என டெல்லி உயர்​நீதிமன்றம் மத்​திய அரசுக்கு கேள்வி எழுப்​பி​யுள்​ளது.

நீட் வினாத்​தாள் டெலிகி​ராம் செயலி மூலம் கசிந்​தது விசாரணையில் தெரிய​வந்​த​தால், நீட் மறு​தேர்வு வரும் 22ம் தேதி முடி​யும் வரை டெலிகி​ராம் செயலிக்கு மத்​திய அரசுத் தடை விதித்​தது. இதை எதிர்த்து டெல்லி உயர்​ நீ​தி​மன்​றத்​தில் டெலிகிராம் செயலி நிறு​வனத்​தில் சார்​பில் மனு தாக்​கல் செய்யப்பட்​டது. இந்த மனுவை நீதிபதி தேஜஸ் கரியா விசாரித்தார்.

மத்​திய அரசின் சொலிசிட்​டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகை​யில், ”டெலிகி​ராம் செயலி​யின் ஒரு பயனாளர் 40 பாட் கணக்​கு​களை உரு​வாக்க முடி​யும். ஆனால் வாட்ஸ் அப் செயலியில் ஒரு கணக்கை மட்​டுமே உரு​வாக்க முடி​யும். டெலிகிராமில் உரு​வாக்​கப்​படும் பாட் வாயி​லாகத் தகவல்​களை மொத்​த​மாகப் பகிர முடி​யும். வாட்ஸ் அப் செயலி, ஃபேஸ்​புக் போன்​றவற்​றில் இத்​தகைய பிரச்​சினை இல்​லை.

மேலும் டெலிகி​ராம் செயலி கிளவுட் தொழில் ​நுட்​பத்​தில் இயங்குவ​தால் ஒரு கணக்கை முடக்​கி​னால் கூட யாரோ ஒரு​வர் தொடர்ந்து அந்​தக் கணக்கை வேறு பெயரில் இயக்க முடி​யும். சிபிஐ, காவல்​துறை போன்ற அமைப்​பு​கள் அசல் பயனாளரைக் கண்​டு​பிடிக்க முடி​யாது. எனவேதான் டெலிகி​ராம் செயலி தற்காலிக​மாக முடக்​கப்​பட்​டுள்​ளது” என்றார்.

அப்​போது நீதிபதி தேஜஸ் கரி​யா,”குறிப்​பிட்ட மாணவர்​கள் தேர்வு எழுது​வதற்​காக 15 கோடி மக்​களின் உரிமை​களை எப்​படி தடுக்க முடி​யும் ? யாரோ ஒரு​வரின் உரிமை​களைப் பாது​காக்க யாரோ ஒரு​வரின் உரிமை​களை தடுக்க முடி​யு​மா, வினாத்​தாள் கசிவு தடுப்பு என்ற பெயரில் ஒட்​டுமொத்த செயலியை முடக்க முடியுமா, வினாத்​தாள் கசிவு வேக​மாகப் பரவும்​போது எப்​படி அதைத் தடுப்​பீர்​கள் ?” என்றார்.

இதற்​குப் பதில் அளித்த துஷார் மேத்​தா, ”அனு​ராதா பசின் வழக்கில் உச்​ச நீ​தி​மன்​றமே சமூக வலை ​தளங்​களை முடக்க அனு​ம​தித்து தீர்ப்பு அளித்​துள்​ளது. வினாத்​தாள் கசிவு விவகாரத்தில் கடுமை​யான பாதிப்பை ஏற்​படுத்​தி​ய​தால்​ தான் டெலிகி​ராம் செயலியை மத்​திய அரசு ஆழ்ந்த ஆலோ​சனைக்​குப் பிறகே முடக்​கி​யுள்​ளது. இதில் நீதி​மன்​றம் தலை​யிடக் கூடாது” என்று வாதிட்​டார்.

டெலிகி​ராம் செயலி சார்​பில் மூத்த வழக்​கறிஞர் துருவ் மேத்தா ஆஜராகி, ”அனு​ராதா பசின் வழக்​கில் உச்​ச நீ​தி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை இந்த விவ​காரத்​தில் பொருத்த முடி​யாது. டெலிகி​ராம் செயலிக்கு விதித்த தடை அடிப்​படை உரிமை​களை மீறு​வ​தாக உள்​ளது. இந்​தத் தடையை நீக்க உத்​தர​விட வேண்​டும்“ என்று வா​திட்​டார். இரு தரப்பு வாதங்​களைப் பதிவு செய்​து கொண்​ட நீதிப​தி தீர்ப்​பைத்​ தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​திவைத்​தார்​.