惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
B
Blog
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
MyScale Blog
MyScale Blog
A
About on SuperTechFans
雷峰网
雷峰网
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
T
The Blog of Author Tim Ferriss
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - 【当耐特】
The Cloudflare Blog
F
Fortinet All Blogs
小众软件
小众软件
博客园 - 三生石上(FineUI控件)
宝玉的分享
宝玉的分享
罗磊的独立博客
量子位
有赞技术团队
有赞技术团队
V
V2EX
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சார்ஜாவில் இருந்து சென்னை வந்த விமானத்தின் அவசரகால கதவை த...
2026-05-04 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: ​சார்​ஜா​வில் இருந்து சென்னை வந்த விமானத்​தின் அவசர​கால கதவை திறந்து பயணி ஒரு​வர் குதித்து ஓடிய​தால் பெரும் பரபரப்பு ஏற்​பட்​டது.

இதனால், அடுத்​த​தாக லண்​டனில் இருந்து வந்த விமானம் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாத​தால், பெங்​களூருக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டது.

சார்​ஜா​வில் இருந்து ஏர் அரேபியன் ஏர்​லைன்ஸ் விமானம், 217 பயணி​களு​டன் நேற்று அதி​காலை 3.25 மணிக்கு சென்னை சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் தரை​யிறங்​கி, ஓடு பாதை​யில் இருந்து டாக்ஸி வேயில் வந்து நிற்க தயா​ரானது.

அப்​போது, விமானத்​தில் இருந்த புதுக்​கோட்​டையை சேர்ந்த முகமது நிஜா​முதீன் செரீப் (30) என்ற பயணி திடீரென விமானத்​தின் அவசர​கால கதவை திறந்​து, மின்​னல் வேகத்​தில் அதன் சரக்கு பாதை வழி​யாக வெளி​யில் குதித்து ஓடி​னார். இச்​சம்​பவம் சென்னை விமான நிலை​யத்​தி​லும் பெரும் பரபரப்பை ஏற்​படுத்​தி​யது.

சென்னை விமான நிலை​யத்​தின் ஓடு​பாதை பகு​தி​யில் அவசர​கால அபாய அறி​விப்பு எச்​சரிக்கை மணி ஒளிக்​கப்​பட்​டது. உடனடி​யாக, பாது​காப்பு அதி​காரி​கள் விரைந்து வந்​து, விமானத்​தின் அவசர​கால கதவு வழி​யாக வெளி​யில் குதித்து ஓடிய பயணியை சுற்றி வளைத்து பிடித்​தனர்.

இதற்​கிடை​யில், விமானம் அது நிக்க வேண்​டிய இடத்​துக்கு பதிலாக, டாக்ஸி வேயில் நிறுத்​தப்​பட்​டது. இதனை தொடர்ந்​து, அடுத்​த​தாக லண்​டனில் இருந்து 284 பயணி​களு​டன் பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் விமானம் சென்​னை​யில் தரை​யிறங்​கு​வதற்​காக வந்​தது.

டாக்ஸி வேயில் ஏர் அரேபியன் ஏர்​லைன்ஸ் விமானம் நின்று கொண்டு இருந்​த​தால், அந்த விமானம் சென்​னை​யில் தரை​யிறங்க முடி​யாத​தால், பெங்​களூருக்கு திருப்பி அனுப்​பப்​பட்​டது.

உடனடி​யாக, மத்​திய உளவுத்​துறை அதி​காரி​கள், சென்னை விமான நிலைய உயர் அதி​காரி​கள் பாது​காப்பு அதி​காரி​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்து வந்து விசா​ரணை மேற்​கொண்​டனர்.

இதற்​கிடையே, ஓடும் விமானத்​தில் இருந்து கீழே குதித்த பயணியை தனி அறை​யில் வைத்து பாது​காப்பு அதி​காரி​கள் விசா​ரிதனர். விசா​ரணை​யில், அந்த பயணி மனநிலை பாதிக்​கப்​பட்​ட​வர் போல் பேசி​ய​தால், அவர் அவர் உண்​மை​யில் மனநிலை பாதிக்​கப்​பட்​ட​வரா என்​பது உள்​ளிட்ட பல்​வேறு கோணங்​களில் அதி​காரி​கள் தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

சென்னை வந்த ஏர் அரேபியன் ஏர்​லைன்ஸ் பயணி​கள் விமானம் சென்​னை​யில் இருந்து மீண்​டும் சார்​ஜாவுக்கு அதி​காலை 4 மணிக்கு புறப்பட வேண்​டும். ஆனால், இந்த சம்​பவம் காரண​மாக விமானம் தாமத​மாக 7.45 மணிக்கு புறப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

அதே​போல், பெங்​களூருக்கு திருப்பி அனுப்​பப்​பட்ட பிரிட்​டிஷ் ஏர்​வேஸ் பயணி​கள் விமானம், பெங்​களூரில் இருந்து சென்​னைக்கு திரும்​பியது. சென்​னை​யில் இருந்து அதி​காலை 5.35 மணிக்கு லண்​டன் புறப்பட வேண்​டிய அந்த விமானம் காலை 9 மணி அளவில் லண்​டன் புறப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது.

விமானத்​தின் அவசர​கால கதவை திறந்து விமானத்​தில் இருந்து குதித்த பயணிக்கு லேசான சிறாய்ப்பு காயங்​கள் ஏற்​பட்​ட​தால், அவருக்கு சென்னை வி​மான நிலைய மருத்​து​வ​மனை​யில் முதலுதவி சிகிச்சை அளிக்​கப்​பட்டது. சினிமா காட்சி போல் நடந்த இந்​த சம்​பவத்​தால்​, இதனால்​ சென்​னை வி​மான நிலை​யத்​தில்​ பெரும்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.