惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

博客园 - 叶小钗
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
雷峰网
雷峰网
GbyAI
GbyAI
Hugging Face - Blog
Hugging Face - Blog
N
Netflix TechBlog - Medium
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
罗磊的独立博客
博客园_首页
小众软件
小众软件
有赞技术团队
有赞技术团队
爱范儿
爱范儿
F
Fortinet All Blogs
C
Check Point Blog
Google DeepMind News
Google DeepMind News
云风的 BLOG
云风的 BLOG
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
M
MIT News - Artificial intelligence
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வலியுறுத்தினேன், ஆனால்....
2026-05-21 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன். ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் நடைமுறை என சொல்லிவிட்டார்கள். அடுத்து தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும்” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற விழாவில், வந்தே மாதரம் முதலாவதாகவும், தேசிய கீதம் இரண்டாவதாகவும், தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகவும் பாடப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியது. அப்போது இதுபற்றி பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இனிமேல் இதுபோல நடக்காது என்று விளக்கமளித்தார். இந்தச் சூழலில், இன்று 23 தமிழக அமைச்சர்கள் பதவியேற்ற விழாவிலும், அதேபோல மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது சலசலப்பை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன், “எந்த தலைமுறைக்கெல்லாம் கல்வி மறுக்கப்பட்டதோ, அவர்களெல்லாம் இன்று கல்வி வழங்கும் இடத்துக்கு உயர்ந்துள்ளனர்.

ஒரு ஜென்ஸீ தலைமுறை அரசியல் பழகியது, ஒரு ஜென்ஸீ தலைமுறை இன்றிலிருந்து அதிகாரம் பழகவுள்ளது. இதற்கு காரணம் முதல்வர் ஜோசப் விஜய். இந்த தலைமுறை மாற்றத்தில், அமைச்சரவையில் சமூக நீதி என்பது சரியாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது. பல பெண் அமைச்சர்கள், ஒடுக்கப்பட்டோரின் குரல் சட்டப்பேரவையிலும், அமைச்சரவையிலும் ஒலிக்கிறது.

இன்று அமைச்சரவையில் பதவியேற்க காங்கிரஸ் தோழர்கள் வரும்போது பெரும் கரவொலி எழுந்தது. இது 60 - 70 ஆண்டுகளாக காத்திருந்த வலி. வெறும் கூட்டணி மட்டும் வைத்துக்கொண்டு, அதிகாரத்தை கொடுக்காமல் இருந்த காலம் போய்விட்டது. இளைஞர்கள் பலர் அமைச்சர்களாக வந்துள்ளனர், அவர்கள் விரைவாக பழகிக் கொள்வார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாடும்படி இன்றும் நான் வலியுறுத்தினேன். ஆளுநர் மாளிகையில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் இப்படித்தான் நடைமுறை என சொல்லிவிட்டார்கள். அடுத்து தமிழக அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும்தான் முதலில் ஒலிக்கும். தமிழ்நாடு அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் தமிழுக்கே முதலிடம்” என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.