惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
B
Blog
腾讯CDC
P
Proofpoint News Feed
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
F
Fortinet All Blogs
T
The Blog of Author Tim Ferriss
人人都是产品经理
人人都是产品经理
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
IT之家
IT之家
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு இந்திய தேசியக்...
செய்திப்பிரிவு · 2026-06-22 · via hindutamil

Updated on: 

புதுடெல்லி: இந்​திய தேசி​யக் கொடி​யுடன் 3 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை பாது​காப்பாக கடந்​துள்ளன. அமெரிக்கா - ஈரான் இடையி​லான போர் கடந்த பிப்​ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. அதனால், ஈரான் கடல் பகு​தி​யில் உள்ள ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கச்சா எண்​ணெய் போக்​கு​வரத்து கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்​பந்தம் சில நாட்​களுக்கு முன்னர் கையெழுத்​தானது. இதையடுத்து அடுத்த 60 நாட்​களுக்கு ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சுதந்​திரமாகக் கப்​பல்​கள் செல்​லலாம் என்று ஈரான் அறி​வித்​தது. ஆனால், லெபனான் மீது இஸ்​ரேல் தொடர்ந்து தாக்​குதல் நடத்​தி​ய​தால், அமைதி ஒப்​பந்​தத்தை மீறிய​தாகக் கூறி ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக நேற்​று​முன்​தினம் ஈரான் அறி​வித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்​நிலை​யில், இந்​திய தேசி​யக் கொடி ஏற்​றிய தேஷ் வைபவ், தேஷ் விபார், சன்​மார் ஹெரால்டு ஆகிய 3 கப்​பல்​கள் நேற்​று​முன்​தினம் ஒரே நாளில் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​தன. ஹார்​முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் நேற்​று​முன்​தினம் அறி​விப்​ப​தற்கு சில மணி நேரங்​களுக்கு முன்​னர் இந்த 3 கப்​பல்​களும் கடந்து வந்​த​தாகக் கூறப்​படு​கிறது.

அவற்​றில் மொத்​தம் 8.6 லட்​சம் டன் கச்சா எண்​ணெய் ஏற்​றிக் கொண்டு அந்​தக் கப்​பல்​கள் பாது​காப்​பாக ஜலசந்​தியை கடந்​துள்​ளன. இருதரப்​புக்​கும் இடை​யில் போர் தொடங்​கிய பிறகு, இந்​திய தேசி​யக் கொடி​யுடன் ஒரே நாளில் 3 கப்​பல்​கள் கடந்​துள்​ளது இதுவே முதல் முறை. இந்த 3 கப்​பல்​களை​யும் சேர்த்து இது​வரை 13 இந்​தி​யக் கப்​பல்​கள், 5 வெளி​நாட்டு கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்​துள்​ளன.

இதுகுறித்து மத்​திய கப்​பல் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் சர்​வானந்த சோனோவல் கூறும்​போது, ‘‘இந்​திய தேசி​யக் கொடி ஏற்​றிய அந்த 3 கப்​பல்​களி​லும் மொத்​தம் 94 இந்​தி​யர்​கள் பணிபுரி​கின்​றனர். கடல் பாது​காப்​பு, இந்​திய மாலுமிகளின் பாது​காப்​புக்கு மத்​திய அரசு அதிக முன்​னுரிமை அளித்து வரு​கிறது’’ என்​றார்.

அந்த 3 கப்​பல்​களில் சன்​மார் ஹெரால்டு கப்​பல், கடந்த ஏப்​ரல் 18-ம் தேதி ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முயன்ற போது ஈரானின் இஸ்​லாமிய புரட்​சிப் படை​யினர் தாக்​குதல் நடத்​தினர். அதனால் கப்​பல் மீண்​டும் திரும்​பிச் சென்​றது. தற்​போது அந்​தப் பகு​தி​யைப் பாது​காப்பாக கடந்து வந்​துள்​ளது.

இந்​தக் கப்​பல் ஒடிசா மாநிலம் பரதீப் துறை​முகத்​துக்கு ஜூலை 1-ம் தேதி வந்​தடை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. தேஷ் வைபவ் கப்​பல் குஜ​ராத்​தின் வடி​னார் துறை​முகத்​துக்​கும், தேஷ் விபார் கப்​பல் சிக்கா துறை​முகத்​துக்​கும் வரும் 24-ம் தேதி வந்​தடை​யும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இதற்​கிடை​யில், எஸ்​எஸ்​எல் காவேரி, தேஷ் சுரக் ஷா ஆகிய 2 இந்தி​யக் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடக்க காத்திருக்கின்றன என்று கப்​பல் போக்​கு​வரத்​தைக் கண்காணிக்கும் ‘மரைன்​டி​ராப்​பிக்’ போர்​டல் தெரி​வித்​துள்​ளது.

தற்​போது இந்​தி​யா​வுக்கு வரவேண்​டிய 31 கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் காத்​திருக்​கின்​றன. அவற்​றில் 16 கப்​பல்​களில் உரங்கள் உள்​ளன. அந்​தக் கப்​பல்​களும் ஒவ்​வொன்​றாக ஹார்முஸ்​ ஜலசந்​தி​யைக்​ கடந்​து வரும்​ என்​று எதிர்பார்க்கப்படுகிறது.