惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
WordPress大学
WordPress大学
人人都是产品经理
人人都是产品经理
Engineering at Meta
Engineering at Meta
小众软件
小众软件
I
InfoQ
有赞技术团队
有赞技术团队
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Martin Fowler
Martin Fowler
月光博客
月光博客
雷峰网
雷峰网
aimingoo的专栏
aimingoo的专栏
云风的 BLOG
云风的 BLOG
Last Week in AI
Last Week in AI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
S
SegmentFault 最新的问题
The GitHub Blog
The GitHub Blog
Y
Y Combinator Blog
V
Visual Studio Blog
博客园 - 叶小钗
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“ரொமான்​டிக் கதை​யில் பொருளாதாரம்!” - ‘லவ் ஓ லவ்’ இயக்​கு...
செ. ஏக்நாத்ராஜ் · 2026-06-18 · via hindutamil

Updated on: 

இயக்குநர் லக்ஷ்மண், சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோரிடம் பணியாற்றிய மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள ரொமான்டிக் காமெடி திரைப்படம் ‘லவ் ஓ லவ்’. ஸினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் ஜி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டீஸர் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இயக்குநரிடம் பேசினோம்.

ரொமான்​டிக் காமெடி படங்​கள் நிறைய வந்​திருக்​கே?

ஆமா. அது​ மா​திரி எத்​தனை படங்​கள் வந்​தா​லும் கண்​டிப்பா அதுக்கு வரவேற்பு உண்​டு. ரொமான்​டிக் காமெடி படங்​கள்ல பொது​வா, காதலோட எமோஷனை தான் சொல்​லி​யிருப்​பாங்க. இல்​லை​னா, பெற்​றோர்​கள், சாதி பிரச்​சினை​கள்னு இருக்​கும். ஆனா நான் இதுல பொருளா​தார பிரச்​சினையை சொல்றேன்.

உறவு​கள் மீது அதிக ஈடு​பாடு கொண்ட இளைஞனோட வாழ்க்​கைல நிகழும் எதிர்​பா​ராத திருப்​பங்​களை​யும், அதனால உரு​வாகும் நகைச்சுவை மற்​றும் உணர்ச்​சிகர​மான தருணங்​களை​யும் இப்படம் பேசும். ஒரு நடுத்தர வர்க்​கப் பையனுக்​கும் கொஞ்​சம் வசதி​யான பொண்​ணுக்​கும் காதல். அவங்க ரெண்டு பேருக்குமான உலகம் வேற வேறயா இருக்​கு. அவங்க பயணம் என்​ன​வாகுது, எங்க போயி முடி​யுதுன்னு கதை போகும்.

ரொமான்​டிக் கதை​யில பொருளா​தார விஷய​மா?

இன்னைக்கு நாம் பார்க்​கிற இந்த பொருளா​தார உலகத்​துல நாம என்​னா​வாகிட்​டிருக்​கோம் அப்​படிங்​கறதை சொல்​லி​யிருக்​கேன். பெற்​றோர்​கள் மகனை கஷ்டப்​பட்டு இன்​ஜினீயரிங் படிக்க வைக்கிறாங்க. அவன் படிப்​புக்​காக வீட்டை விற்​கிறாங்க; இல்லைனா சேர்த்து வச்ச பணத்தை மொத்​தமா செலவழிக்கிறாங்க.

படிச்சு முடிச்​சதும், ஒரு தொழில் தொடங்கலாம்னு வங்​கி​கள்ல லோன் கேட்டா தர மாட்​டாங்க. அதனால அவன் ஏதோ ஒரு கம்​பெனிக்கு வேலைக்​குப் போயி மாசம் ரூ.40 ஆயிரம் சம்​பளம் வாங்​கி​யாச் சுன்​னா, எல்லா வங்கியும் லோன் கொடுக்க ஓடி வரும். அவன் கேட்ட லோன் கிடைக்​காது, ஆனா, செலவு பண்​றதுக்​கும் காஸ்ட்​லியா வாழறதுக்​கும் வங்​கி​கள் லோன் கொடுக்​கும். இப்​படி​யான உலகத்துக்குள்​ள​தான் நாம வாழ வேண்​டி​யிருக்​கு. அதை​யும் இந்தப் படம் பேசும்.

ஹீரோ பவிஷ் நாராயண் என்ன பண்​றார்?

ஹீரோ இன்​ஜினீயரிங் முடிச்​சவர். இங்க இன்​ஜினீயரிங் முடிச்​சவங்க இரண்டு செக்​டார் இருக்​காங்க. ஒரு தரப்​பு, ஓஎம்​ஆர், சோழிங்கநல்​லூர்னு பளபளன்னு இருக்​கிற வாழ்க்​கையை வாழறாங்க.

இன்​னொரு தரப்​பு, மெக்​கானிக் இன்​ஜினீயரிங் மாதிரி படிச்​சுட்டு அம்​பத்​தூர் எஸ்​டேட் பகு​தி​யில வேலை பார்ப்​பாங்க. இவங்க ரெண்டு பேருக்கும் ஒரே சம்​பளம்​தான். ஆனா, லைஃப் ஸ்டைல்வேற. ஹீரோ​யின் அந்த சம்​பளத்தை வச்சு பறக்க நினைக்​கிறாங்க. ஹீரோ அதை வச்சு அப்​பா, அம்​மா, தங்​கச்​சியை காப்​பாத்தணும்னு நினைக்கிறார் இந்த முரண்​பாடு அவங்​களை என்ன முடி​வெடுக்க வைக்​குதுன்னு படம் போகும்.

ஹீரோ​யின் நாக துர்கா யூடியூப் பிரபல​மாமே?

தெலுங்​குல நாட்​டுப்​புறப் பாடல்​களுக்கு நடன​மாடும் பிரபல​மான யூடியூபர் அவங்க. ஏராள​மான பாடல்​களுக்கு நடன​மாடி இருக்​காங்க. அவங்​களை தமிழ்ல அறி​முகப்​படுத்தி இருக்​கோம். இந்த கேரக்டருக்கு ரொம்ப பொருத்​தமா இருந்​தாங்க. செல்​வ​ராகவன், கே.எஸ்​.ரவி​கு​மார், வனிதா விஜயகு​மார், ரம்​யா, ஆதித்யா கதிர்னு நிறைய பேர் நடிச்​சிருக்​காங்க.

செல்​வ​ராகவன் போலீஸ் அதி​காரி​யா?

வழக்​கமா இது​வரை பார்த்த செல்​வ​ராகவனா இதுல அவர் இருக்கமாட்​டார். அவர் தோற்​றத்தை மாத்​தி​யிருக்​கோம். காதல் பிரச்சினையை கேட்டுட்டு அவர் தீர்வு சொல்ற கேரக்​டர். கே.எஸ்​.ரவி​கு​மார் அப்பா கேரக்​டர் பண்​ணி​யிருக்​கார்.

அனு ஸ்ரீ வேலன் என்​கிற திருநங்கை முக்​கிய​மான ரோல் பண்​றாங்க. ஆணும் பெண்​ணும் என்​ன​வாக இருக்​கணும்னு அவங்க பேசற விஷ​யம் ரொம்ப நல்லா இருக்​கும். படம் முடிஞ்​சிருச்சி. பிரதீப் பி.ஜே. வேய்ன் பேவி இசை அமைச்சிருக்​காங்க. பி.ஜி.​முத்​தையா ஒளிப்​ப​திவு பண்​ணி​யிருக் கார். ஜூலை​யில வெளி​யிட திட்​ட​மிட்​டிருக்​கோம்.