惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
腾讯CDC
Y
Y Combinator Blog
L
LangChain Blog
B
Blog
U
Unit 42
P
Proofpoint News Feed
G
Google Developers Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 【当耐特】
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
Vercel News
Vercel News
雷峰网
雷峰网
T
The Blog of Author Tim Ferriss
MyScale Blog
MyScale Blog
大猫的无限游戏
大猫的无限游戏
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Blog — PlanetScale
Blog — PlanetScale
博客园 - 司徒正美
云风的 BLOG
云风的 BLOG
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற...
2026-05-02 · via hindutamil

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை.

Updated on

1 min read

கோவை: 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என கோவையில் செல்வப்பெருந்தகை உறுதிபட தெரிவித்தார்.

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (மே 2) சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமீபத்தில் வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்பு என்பது கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. மக்கள் முடிவு செய்து விட்டனர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டனி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம் என்பதால் அதைவிட குறைந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளதால் கருத்து திணிப்பு என்று சொல்லி வருகிறோம். தவெக குறித்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் பேசுவோம்.

திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான பணி செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்துள்ளதன் பயனாக அந்த பணி வீண் போகாது.

யார்? ஆள வேண்டும். யார்? ஆளக்கூடாது என்று மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் முடியும் போதும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் ஏற்றி விடுவார்கள். நான் காங்கிரஸ் தலைவராக இல்லாதபோது கூட்டனியில் 25 தொகுதிகள் முதலில் வாங்கினார்கள். ஆனால், தற்போது 28 தொகுதிகள் மற்றும் ஒரு எம்.பி சீட் கூடுதலாக வாங்கி உள்ளோம். இது அழிவு பாதையா? நான் கட்சியில் தலைமை பொறுப்புக்கு வருவதற்கு முன்பு 100 சதவீதம் ஸ்ட்ரைக் ரேட் நாடாளுமன்றத்தில் இல்லை. இப்போது புதுச்சேரி உட்பட 10-க்கு 10 என 100 சதவீதம் மக்களவையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவரிடம் தமிழக காங்கிரஸ் தலைமை குறித்து ஜோதிமணி எம்.பி. தெரிவித்த கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, ‘‘ஒரு சிலர் மனக்குமுரலோடு, நேர்மை இல்லாமல் போற போக்கில் பேசுவதற்கு நான் பதில் சொல்வதில்லை. ராகுல் காந்தி பிரச்சாரக் கூட்டத்தில் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசினேன். எனக்கு காதில் சரியாக விழவில்லை. மேலும், நான் அரசு பள்ளியில் படித்தவன். இந்த அளவுக்கு பேசியதற்காக அதனை பாராட்ட வேண்டும். நான் என்ன கான்வென்டில் படித்தேனா? சிபிஎஸ்இ பள்ளியில் படித்தேனா?. அரசுப் பள்ளியில் படித்த என்னை விமர்சனம் செய்வது என்றால் அவர்கள் மன நோயாளி என்று தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.