惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

J
Java Code Geeks
Martin Fowler
Martin Fowler
MongoDB | Blog
MongoDB | Blog
博客园 - Franky
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园_首页
腾讯CDC
D
Docker
The Cloudflare Blog
量子位
爱范儿
爱范儿
L
LangChain Blog
博客园 - 三生石上(FineUI控件)
博客园 - 司徒正美
aimingoo的专栏
aimingoo的专栏
Blog — PlanetScale
Blog — PlanetScale
Jina AI
Jina AI
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园 - 聂微东
Vercel News
Vercel News
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தொடரும் தோனியின் வெயிட்டிங் கேம்: சிஎஸ்கே அணிக்காக விளையா...
2026-04-24 · via hindutamil
Ellusamy Karthik

Updated on

2 min read

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறியுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி உள்ளது. இதில் தோனி ஒரு ஆட்டத்தில் கூட விளையாடவில்லை. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

கடந்த மார்ச் 28-ம் தேதி 19-வது ஐபிஎல் சீசன் தொடங்கியது. இந்த சீசனின் தொடக்கத்திலேயே காலின் பின் பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பு பாதிப்பு காரணமாக தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்தது. இதனால் இந்த சீசனில் முதல் இரண்டு வார கால ஆட்டங்களை அவர் தவறவிடக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இப்போது அது ஒரு மாத காலத்தை நெருங்கிவிட்டது.

இப்போது லீக் சுற்றில் சரியாக 7 ஆட்டங்களை சிஎஸ்கே விளையாடி முடிந்துவிட்டது. இன்னும் அந்த அணிக்கு 7 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இருப்பினும் 44 வயதான தோனி இன்னும் இந்த சீசனில் களமிறங்கவில்லை.

இதற்கிடையே, சிஎஸ்கே அணியின் ஆட்டத்துக்கு முன்னதாக தோனி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்கிறது. அதுவே ‘மேட்ச் டே’ அன்று தோனி அணியின் டக்-அவுட்டில் கூட தனது வருகையை பதிவு செய்வது இல்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகளுடனான ஆட்டத்துக்கு முன்பாகவும் இதுவே நடந்தது.

டாஸின்போது சிஎஸ்கே அணியின் ஆடும் லெவனில் தோனியின் பெயர் இடம்பெறுமா அல்லது இம்பாக்ட் வீரராக அவர் தலைக்காட்டுவாரா என ரசிகர்களின் எதிர்பார்ப்பெல்லாம் வெறும் எதிர்பார்ப்பாகவே உள்ளது. அவரோ களத்துக்கு வெளியே தனது வெயிட்டிங் கேமை தொடருகிறார்.

அணி நிர்வாகம் சொல்வது என்ன?

“ஃபிட்னஸை பொறுத்தவரையில் தோனி முன்னேற்றம் கண்டு வருகிறார். களம் திரும்ப அவரும் கடினமாக முயற்சித்து வருகிறார். அவரை காண ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். அடுத்த சில ஆட்டங்களில் அவர் நிச்சயம் விளையாடுவார் என நம்புகிறோம்.

தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நூறு சதவீத உடற்தகுதி அவசியம் என கருதுகிறார். வலைப் பயிற்சியில் சிறப்பாக பேட் செய்கிறார். நிச்சயம் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் விளையாடுவார். ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக விளையாட மாட்டார்.

கணுக்காலில்தான் அவருக்கு பாதிப்பு. அதனால் அது ரன் எடுக்க ஓடும்போது அந்த பாதிப்பு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்த கூடாது என்பதால் கவனம் இருக்கிறார். நிச்சயம் அடுத்த சில ஆட்டங்களுக்குள் அவர் களத்துக்கு திரும்புவார்” என சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.

காயம் ஏற்பட்டது எப்படி?

சிஎஸ்கே அணி வீரர்களுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தின்போது தோனி கால் பகுதியில் அசவுகரியமாக இருப்பதாக சொன்னார். அதனால் அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது மேட்ச் ஃபிட்னஸ் சார்ந்து நிலையான முன்னேற்றம் கண்டு வருகிறார். ஓட்டம் எடுப்பதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது என்பதில் உறுதி இருக்கிறார்.

தோனி அடுத்த போட்டியில் விளையாடுவாரா, அதற்கடுத்து விளையாடுவாரா என்பது தெரியாது. ஆனால், நிச்சயம் விளையாடுவார் என மும்பை இந்தியன்ஸ் அணி உடனான ஆட்டத்துக்கு முன்பு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

தோனி களம் காண்பாரா?

தோனி தனது உடற்தகுதியை உறுதி செய்தாலும் ஆடும் லெவனில் இடம்பெறாமல் இம்பாக்ட் வீரராக விளையாட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

வரும் 26-ம் தேதி சேப்பாக்கத்தில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனி விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி ‘தோனி விளையாடுவாரா?’ என்பது மட்டும்தான்.