惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
F
Fortinet All Blogs
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
Vercel News
Vercel News
Recent Announcements
Recent Announcements
博客园 - Franky
小众软件
小众软件
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
The Cloudflare Blog
宝玉的分享
宝玉的分享
I
InfoQ
博客园 - 聂微东
Jina AI
Jina AI
J
Java Code Geeks
V
V2EX
U
Unit 42
Stack Overflow Blog
Stack Overflow Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
T
The Blog of Author Tim Ferriss
量子位

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
ஈரான் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ ம...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

வாஷிங்டன்: ஈரான் தாக்குதலில் 7 வளைகுடா நாடுகளில் சேதம் அடைந்த ராணுவ முகாம்களைச் சரி செய்ய பல ஆயிரம் கோடி செலவாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அணு ஆயுத தடை ஒப்​பந்​தத்​தில் கையெழுத்​திட மறுத்ததால், ஈரான் மீது அமெரிக்க - இஸ்​ரேலிய படைகள் கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி தாக்​குதல் நடத்​தின. ஈரானும் பதிலடி​யாக 7 வளை​குடா நாடு​களில் உள்ள அமெ ரிக்க ராணுவ முகாம்​களைக் குறி வைத்து ஏவு​கணை, மற்​றும் ட்ரோன் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் அமெரிக்க வீரர்​கள் சிலர் இறந்​தனர். அமெரிக்க ராணுவ முகாம்​களில் உள்ள ரேடார், தகவல் தொடர்பு மையங்​கள், போர் விமானங்​கள், ஓடு தளங்​கள் ஆகியவை பலத்த சேதமடைந்​தன.

அமெரிக்​கா​வின் வான் பாதுகாப்​பை​யும் மீறி ஈரானின் பழமை​யான எப்-5 ரக போர் விமானம், அமெரிக்க ராணுவ முகா​முக்​குள் தாக்​குதல் நடத்​தி​யது. ஈரான் தாக்​குதலில் அமெரிக்க ராணுவ முகாம்​களில் ஏற்பட்ட சேத விவரங்களை பென்​டகன் முழு​மையாக பகிர​வில்​லை. இந்த விஷ​யத்​தில் வெளிப்​படைத்​தன்மை இல்​லாத​தால், அமெரிக்​கா​வில் ஆளும் குடியரசுக் கட்சி எம்​.பி.க்​களே கோபம் அடைந்​துள்​ளனர்.

சேத விவரங்​களைத் தெரிவிக்க வேண்​டும் என அமெரிக்க எம்​.பி.க்​கள் கோரிக்கை விடுத்து பல வாரங்​கள் ஆகி​யும், அது பற்றி எதை​யும் கூறாமல் கூடு​தலாக 200 பில்​லியன் டாலர் நிதி ஒதுக்க வேண்​டும் என பென்​டகன் கோரிக்கை விடுத்​துள்​ளது. இந்​தாண்டு ராணுவ பட்​ஜெட்​டுக்கு ஏற்கெனவே அமெரிக்க நாடாளு​மன்​றம் 838.5 பில்​லியன் டாலர் அனு​மதி அளித்​திருந்​தது.

ஈரான் போர் தொடங்​கிய ஒரு வாரத்​துக்​குள் 11 பில்​லியன் டாலர் செல​வான​தாக அமெரிக்கா தெரி​வித்​திருந்​தது. இந்நிலை​யில் அமெரிக்க அதி​காரி​கள் சிலர் கூறுகை​யில், ‘‘ஈ​ரான் தாக்​குதலால் வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​களில் ஏற்​பட்ட சேதம் ஏற்கெனவே தெரிவிக்​கப்​பட்​டதை​விட மிக அதி​க​மாக உள்ளது. இவற்றை சரிசெய்​ய பல ஆயிரம் கோடி​ செலவாகும்’’ என்​றனர்​.