


























Updated on
:
1 min read
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் மாளவிகா மோகனன் இப்போது ‘பாக்கெட் நாவல்’ படத்தில் நடித்து வருகிறார். இதை தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார்.
விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இளையராஜா இசையமைக்கும் இப்படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படம் பற்றி மாளவிகா மோகனன் கூறும்போது, “பாக்கெட் நாவல் படப்பிடிப்பு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இந்தக் கதையை நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உருவாக்கி வருகிறோம்.
உண்மையிலேயே ஒரு சிறந்த படக்குழுவுடன் பணியாற்றுவது பெருமையாக இருக்கிறது. இந்தப் படத்தை மிகவும் உற்சாகமாக எதிர்பார்க்கிறேன் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகிறது” என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。