惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

腾讯CDC
aimingoo的专栏
aimingoo的专栏
S
SegmentFault 最新的问题
A
About on SuperTechFans
Engineering at Meta
Engineering at Meta
宝玉的分享
宝玉的分享
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
博客园 - 叶小钗
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
MyScale Blog
MyScale Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
F
Fortinet All Blogs
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Blog — PlanetScale
Blog — PlanetScale
T
Tailwind CSS Blog
Recent Announcements
Recent Announcements
Jina AI
Jina AI
大猫的无限游戏
大猫的无限游戏
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பன்முகத் தன்மையால் ஜொலித்த பாக்யராஜ்!
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

கே.பாக்யராஜ் மாரடைப்​பால் மறைந்த செய்தி திரை​யுல​கினரை​யும் ரசிகர்​களை​யும் அதிர்ச்​சி​யடைய வைத்​துள்​ளது. திரைக்​க​தாசிரியர், வசனகர்த்​தா, பாடலாசிரியர், இசை அமைப்​பாளர், நடிகர், இயக்​குநர் என பன்​முகத் தன்​மை​யுடன் பல்​வேறு துறை​களில் சிறப்​பாக இயங்கி வந்​தவர் கே.​பாக்​ய​ராஜ். அவர் சினி​மாவுக்கு வந்து 50 ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில் அவருடைய சாதனை​களைப் பாராட்டி சில மாதங்​களுக்கு முன் விழா கொண்​டாடப்​பட்​டது.

கோபி செட்​டிப்​பாளை​யம் அரு​கிலுள்ள வெள்​ளக்கோ​யில் என்ற ஊரைச் சேர்ந்​தவர் பாக்​ய​ராஜ். கிருஷ்ண​சாமி- அபி​ராமி தம்​ப​தி​யின் 2-வது மகனான இவர் 1953-ம் ஆண்டு பிறந்​தவர். சினிமா ஆசை​யில் சென்னை வந்த அவர், பார​தி​ராஜா​விடம் ‘16 வயதினிலே’ படத்​தில் உதவி இயக்​குந​ராக சேர்ந்​தார்.

‘சிகப்பு ரோஜாக்​கள்’ படத்​துக்கு வசனம் எழு​திய அவர், அதில் 2 காட்​சிகளில் நடித்​தார். ‘பு​திய வார்ப்​பு​கள்’ (1979) படத்​தில் பாக்​ய​ராஜை கதா​நாயக​னாக அறி​முகம் செய்​தார் பார​தி​ராஜா. இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்ற அதே ஆண்​டில், ‘சுவர் இல்​லாத சித்​திரங்​கள்’ என்ற படம் மூலம் இயக்​குந​ராக அறி​முக​மா​னார். இப்​படம் அவரை சிறந்த இயக்​குந​ராக அடை​யாளம் காட்​டியது..

அதே ஆண்​டில் ராஜேஷ் அறி​முக​மான, ‘கன்னி பரு​வத்​திலே’ படத்​துக்கு திரைக்​கதை, வசனம் எழு​திய அவர், வில்​ல​னாக நடித்​தார். அடுத்​து, ஒரு கை ஓசை, மெளனகீதங்​கள், இன்று போய் நாளை வா, விடி​யும் வரை காத்​திரு, அந்த 7 நாட்​கள், தூறல் நின்னு போச்​சு, டார்​லிங் டார்​லிங் டார்​லிங், முந்​தானை முடிச்​சு, தாவணிக் கனவு​கள், சின்ன வீடு, எங்க சின்ன ராசா, ஆராரோ ஆரி​ராரோ, அவசர போலீஸ் 100, பவுனு பவுனு​தான், சுந்​தர​காண்​டம், ராசுக்​குட்​டி, வீட்ல விசேஷங்க, ஒரு ஊர்ல ஒரு ராஜகு​மாரி, வேட்​டிய மடிச்​சுக்​கட்​டு, சொக்​கத்​தங்​கம், பாரிஜாதம், சித்து + டூ ஆகிய படங்​களை இயக்​கி​யுள்​ளார். இதில் சில படங்​கள் வெள்​ளி​விழா கண்​டன.

‘பாரிஜாதம்’ படத்​தில் தனது மகள் சரண்​யாவை நாயகி​யாக அறி​முகப்​படுத்​தி​னார். சூப்​பர் ஹிட்​டான ‘முந்​தானை முடிச்​சு’ படத்​தில் ஊர்​வசியையும் ‘சின்ன வீடு’ படத்​தில் அவர் சகோ​தரி கல்​ப​னாவை​யும் நாயகி​களாக அறி​முகப்​படுத்​தி​னார்.

இந்​தி​யில் இயக்​கிய படங்​கள்:

பாக்​ய​ராஜின் பல வெற்​றிப் படங்​கள் இந்​தி, தெலுங்​கு, கன்​னடம் உள்​ளிட்ட மொழிகளில் படமாக்​கப்​பட்​டிருந்​தா​லும் இந்​தி​யில் அவரே சில படங்​களை இயக்கி இருக்​கிறார். பார​தி​ராஜா இயக்கி கமல்​ஹாசன் 2 வேடங்​களில் நடித்து வெற்றி பெற்ற ‘ஒரு கைதி​யின் டைரி’ படத்தை ‘ஆக்ரி ராஸ்​தா’ என்ற பெயரில் இந்​தி​யில் ரீமேக் செய்​தார் பாக்​ய​ராஜ். அதில் அமி​தாப்​பச்​சன் ஹீரோ​வாக நடித்​தார்.

அவர் இயக்​கிய ‘வீட்ல விசேஷங்க’ படத்தை இந்​தி​யில் அனில் கபூர், ஸ்ரீதே​வி, நடிப்​பில் ‘மிஸ்​டர் பேச்​சா​ரா’ என்ற பெயரில் இயக்​கி​னார். ‘வேட்​டிய மடிச்​சுக் கட்​டு’ படத்தை ‘பப்பா தி கிரேட்’ என்று இந்​தி​யில் இயக்​கி​னார்.

‘இது நம்ம ஆளு’, ‘ஆராரோ ஆராரோ’, ‘பொண்ணு பார்க்க போறேன்’, ‘பவுனு பவுனு​தான்’, ‘ஞானப்​பழம்’ ஆகிய திரைப்​படங்​களுக்கு இசை அமைத்​துள்​ளார்.

அவசர போலீஸ் - 100:

எம்​.ஜி.ஆர் நடித்து பாதி​யில் நின்று போன படம் “அண்ணா நீ என் தெய்​வம்”. இந்​தப் படம் நான்​கா​யிரம் அடிகள் எடுக்​கப்​பட்டு இருந்​தது. அதில் எம்​.ஜி.ஆர். நடித்த காட்​சிகளை மட்​டும் வைத்​துக்​கொண்டு புதிய திரைக்​கதை எழுதி 1990-ம் ஆண்டு ‘அவசர போலீஸ் - 100” என்ற பெயரில் நடித்து இயக்​கி​னார்.

குணசித்​திர நடிப்பு:

‘ருத்​ரா’, ‘அம்மா வந்​தாச்​சு’, ‘ஞானப்​பழம்’ படங்​களில் நடித்​திருந்த பாக்​ய​ராஜ், ‘வேட்​டிய மடிச்சுக்கட்​டு’ படத்​துக்கு பிறகு முதன்மை வேடங்​களில் நடிக்​காமல் இருந்​தார். பின்​னர் ‘சம்​திங் சம்​திங் உனக்​கும் எனக்​கும்’ படம் மூலம் குணசித்​திர வேடத்​துக்​குத் திரும்​பிய அவர், உத்​தமப்​புத்​திரன், வாகை சூட​வா, கணிதன், துப்​பறி​வாளன், முருங்​கைக்​காய் சிப்ஸ் உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளார். சின்​னத்​திரை நிகழ்ச்​சிகளை​யும் இயக்​கி​யுள்​ளார்.

எம்​.ஜி.ஆரின் கலை​ வாரிசு:

மறைந்த முதல்​வர் எம்​.ஜி.ஆ​ரால், தனது கலை​வாரிசு என்று அறிவிக்​கப்​பட்ட கே.​பாக்​ய​ராஜ், 1989-ம் ஆண்டு எம்​.ஜி.ஆர்​.மக்​கள் முன்​னேற்​றக் கழகம் என்ற அரசி​யல் கட்​சி​யைத் தொடங்​கி​னார். பின்​னர் அக்​கட்​சியை கலைத்​து​விட்டு அதி​முக​வில் இணைந்​தார். பிறகு அதிலிருந்து வில​கி, 2006-ம் ஆண்டு தி.​மு.க​வில் சேர்ந்​தார்.

திரு​மணம்:

நடிகை பிர​வீணாவை காதலித்து 1981-ம் ஆண்டு திரு​மணம் செய்து கொண்​டார் கே.​பாக்​ய​ராஜ். மஞ்​சள் கா​மாலை நோய் காரண​மாக 1983-ம் ஆண்டு பிர​வீணா மறைந்​தார். பின்​னர் பாக்​ய​ராஜின், ‘டார்​லிங் டார்​லிங் டார்​லிங்’ திரைப்​படத்​தில் நாயகி​யாக நடித்த பூர்​ணிமா ஜெய​ராமை 1984-ம்​ ஆண்​டு திரு​மணம்​ செய்​து​கொண்​டார்​. இவர்​களுக்​கு, சரண்​யா என்​ற மகளு​ம்​ ​சாந்​தனு என்ற மகனும் உள்ளனர்.

படப்​பிடிப்பு ரத்து:

கே.​பாக்​ய​ராஜின் மறைவை அடுத்து இன்று படப்​பிடிப்​பு​கள் ரத்து செய்​யப்​படு​வ​தாக தமிழ்த் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கம் அறி​வித்​துள்​ளது. இன்று (ஜுன் 28) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படப்​பிடிப்​பு​கள் நடை​பெறாது என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.