惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
B
Blog RSS Feed
Recent Announcements
Recent Announcements
Vercel News
Vercel News
M
MIT News - Artificial intelligence
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Microsoft Security Blog
Microsoft Security Blog
H
Help Net Security
T
The Blog of Author Tim Ferriss
Y
Y Combinator Blog
G
Google Developers Blog
罗磊的独立博客
爱范儿
爱范儿
宝玉的分享
宝玉的分享
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园_首页
S
SegmentFault 最新的问题
WordPress大学
WordPress大学
月光博客
月光博客
人人都是产品经理
人人都是产品经理
Apple Machine Learning Research
Apple Machine Learning Research

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கட்சி நிர்வாகிகளின் கருத்தையே துரை வைகோ பேசியுள்ளார்: வைக...
செய்திப்பிரிவு · 2026-06-03 · via hindutamil

Updated on: 

சென்னை: தனி சின்​னத்​தில் போட்​டி​யிட்டு இருக்​கலாம் என மதி​முக நிர்​வாகி​கள் தங்​கள் ஆதங்​கத்தை வெளிப்​படுத்​தினர். அந்த கருத்​தையே துரை வைகோ பேசி​யா​தாக, வைகோ விளக்​கமளித்​துள்​ளார்.

மேகே​தாட்​டு​வில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசை கண்​டித்து மதி​முக பொதுச்​செய​லாளர் வைகோ தலை​மை​யில் சென்னை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வல​கம் அருகே நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் பல்​வேறு அமைப்​பு​களை சேர்ந்​தவர்​கள் பங்​கேற்​றனர்.

ஆர்​ப்பாட்​டத்​துக்கு பின் வைகோ செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திமுக கூட்​ட​ணி​யில் உறு​தி​யாக இருந்து பரப்​புரை செய்​தேன். திமுக வாக்​கு​களால் தான் இரண்டு தொகு​தி​களில் மதி​முக வெற்றிபெற்​றது.

திமுக வெற்​றிக்​கும் மதி​முக உதவியது. தேமுதிக, விசிக, காங்​கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு திமுக கூட்​ட​ணி​யில் அதிக தொகுதி கொடுத்​தார்​கள்.

மதி​முக​வுக்கு நான்கு தொகு​தி​கள் என்ற நிலை எங்​கள் கட்சி நிர்​வாகி​களுக்கு சங்​கடம் ஏற்​பட்​டது. தனி சின்​னத்​தில் போட்​டி​யிட்டு இருக்​கலாம் என ஆதங்​கத்​தில் கட்​சி​யில் உள்ள நிர்வாகிகள் இருந்​தார்​கள். அதே ஆதங்​கத்தை தான் துரை வைகோ பேசி​யுள்​ளார்.

திமுக ஆதர​வோடு போட்​டி​யிட்டு வெற்றி பெற்ற காங்​கிரஸ் நன்றி கூட சொல்​லாமல் தவெகவுக்கு சென்​று​விட்​டது. காங்​கிரஸ் ராஜ்யச​பா​வில் இடம் வாங்​கி​விட்டு தற்​பொழுது மந்​திரி சபை​யிலும் இடம் வாங்கி விட்​டார்​கள். அவர்​களு​ட​னும், விசிக​வுட​னும் எங்​களை எப்​படி ஒப்​பிட்டு பேச முடி​யும்.

மேலும், தற்​போது வரை​யிலும் நாங்​கள் எந்த முடி​வும் எடுக்​க​வில்லை. அவசரப்​பட்டு எந்த முடி​வும் எடுக்க மாட்​டோம் பொதுக்​குழு​வில் பேசப்​பட்டு அதற்​குப் பிறகு​தான் முடி​வெடுக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்​ன​தாக ஆர்ப்​பாட்​டத்​தின் போது உரை​யாற்​றிய வைகோ, “கர்​நாடகா அரசு தமிழக மக்​களை வஞ்​சிக்க வேண்​டாம், மேகே​தாட்டு அணை கட்​டி​னால் தமிழகத்​தில் ஐந்து கோடி மக்​கள் பாதிப்​புக்கு உள்​ளாக நேரிடும். மத்​திய அரசு அனு​மதி கொடுக்கக் கூடாது.

தமிழக மக்​களை வஞ்​சிக்​கும் சூழலை ஏற்​படுத்த கூடாது. அணை கட்​டும் நடவடிக்கை தொடர்ந்து மேற்​கொண்​டால் அனை​வரும் கடுமை​யாக எதிர்க்க வேண்​டியது அவசி​யம்.

தமிழக முதல்​வர் சட்​டத்​தின் மூலம் தடுக்​க​வும் நினைக்​கலாம். தமிழக அரசு ஒருநாள் கடையடைப்பு செய்​தால் கூட தமிழகம் ஒட்டு மொத்​த​மாக எதிர்க்​கிறது என்ற எண்​ணம் உரு​வாகும். இதற்கு முன் இருந்த ஆளுநர்​களை விட தற்​போது இருக்​கும் ஆளுநர் மோச​மாக இருக்​கிறார்.

திரு​வள்​ளுவர் சாதி, மதம் எது​வும் இல்​லாதவர். அவருக்கு காவி உடை அணி​வித்​ததற்கு எதிர்ப்பு தெரி​வித்து வரும் 7-ம் தேதி ஆளுநர் மாளிகை முற்​றுகை​யிட்டு கருப்பு கொடி ஆர்ப்​பாட்​டம் நடத்த உள்​ளோம்” என்​றார்.