

























Updated on
:
1 min read
நாகப்பட்டினம்: நாகை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-27 இளநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு மே15 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 10 உறுப்பு கல்லூரிகள் மற்றும் ஒரு இணைப்பு தனியார் கல்லூரி மூலம் 8 இளநிலைப் படிப்புகள், 5 தொழில்முறை மற்றும் 3 துணைத் தொழில்முறை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், இந்த கல்வியாண்டில் உறுப்பு கல்லூரிகளில் 416 மாணவர்களும், இணைப்பு தனியார் கல்லூரியில் 60 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர். மீனவர் சமூக ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 5 சதவீதம் சேர்க்கை பெறும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மீனவர் நல வாரியம் ஏற்கும். www.admission.tnfu.ac.in என்ற இணையதளத்தில் மே 15 முதல் ஜூன் 14-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எஸ்சி,எஸ்சிஏ, எஸ்.டி மாணவர்களுக்கு ரூ.250, பிற பிரிவினருக்கு ரூ.500. மேல்நிலைத் தேர்வில் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். கலந்தாய்வு இணைய வழியில் நடைபெறும். சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெறும்.அதன் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。