惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

U
Unit 42
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Engineering at Meta
Engineering at Meta
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
WordPress大学
WordPress大学
有赞技术团队
有赞技术团队
Blog — PlanetScale
Blog — PlanetScale
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
Jina AI
Jina AI
小众软件
小众软件
博客园 - 叶小钗
MongoDB | Blog
MongoDB | Blog
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 聂微东
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
I
InfoQ
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Martin Fowler
Martin Fowler
P
Proofpoint News Feed
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாய...
2026-04-27 · via hindutamil

Updated on

1 min read

‘கருப்பு’ படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன் என்று இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசியுள்ளார்.

‘கருப்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் த்ரிஷா தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் பாடல்களை நேரலையில் சாய் அபயங்கர் தனது குழுவினருடன் பாடினார். இந்த விழாவில் பின்பு படக்குழுவினர் அனைவருமே ‘கருப்பு’ படம் குறித்து பேசினார்கள்.

இறுதியாக சூர்யா பேசும்போது, “எனக்கு மதுரை எப்போதுமே ஸ்பெஷல். சாப்பாடு, அரசியல், பெண் தெய்வம் என பெரும் மரியாதை வைத்துள்ளேன். இந்த மதுரை மண்ணுக்கு நான் கடன்பட்டுள்ளேன். இங்கு நிறைய படம் பண்ணியிருக்கேன். 28 ஆண்டுகளாக என்னை ஒரு நாயகனாக ஆக்கியதற்கு, இந்த அன்பும், பாசம் உள்ளிட்டவை மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. மதுரை சித்திரை திருவிழாவுக்கு 5 லட்சம் பேர் வருவார்கள். அந்த மாதிரி இந்த ‘கருப்பு’ இசை வெளியீட்டு விழாவினை இன்னொரு சித்திரை திருவிழாவாக பார்க்கிறேன்.

இப்படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ் மிகவும் திறமையானர். அவர் பல்வேறு வகையான படங்களில் நடித்து வருகிறார். அவர் மிகவும் ஊக்கமளிப்பவர். நான்காம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் தற்போது ஏழாம் வகுப்பு தேர்வை முடித்துள்ளார். அவருடைய அர்ப்பணிபுக்கு எல்லையே இல்லை. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மிகவும் திறமைசாலி. உங்கள் முன்னால் ஒரு பெரிய எதிர்காலம் உள்ளது. நான் அவரை முதலில் பார்த்த போது, அவர் ஒரு நாளைக்கு 1000 டியூன்களை உருவாக்குகிறார் என்றார்கள். இந்தப் படம் திரைக்கு வரும் போது, இசை வகையில் ஒரு பெரிய அனுபவமாக இருக்கும்.

’கருப்பு’ படம் இவ்வளவு தூரம் வருவதற்கு கருப்புசாமி கடவுள் தான் காரணம் என நினைக்கிறேன். கடவுள் ஒருவருக்குள் வரும்போது ஏற்படும் விளைவை உண்மையில் பார்க்கிறேன். நம்பிக்கை இருக்கும் இடத்தில் கண்டிப்பாக அதிசயம் நடக்கும்.

ஒரு படம் வந்ததால், ஆர்.ஜே.பாலாஜி அப்படிச் சொன்னார், இப்படி சொன்னார் என்பார்கள். ஆனால், அவர் உண்மையில் பன்முகத் திறமைசாலி. நான் என்னை சூர்யாவாக பார்க்கிறேன்.

ஆனால், அவர் தன்னை இயக்குநர், நடிகர், வர்ணனையாளராக பார்க்கிறேன். இந்தப் படத்தில் நான் நாயகன் அல்ல, கருப்புசாமி தான் நாயகன். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்து, என்னை இப்படி நடிக்க வைத்ததற்கு என் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

படம் பார்த்தவர்கள் முதல் பாதி ரொம்ப எமோஷனலாக இருக்கிறது, இரண்டாம் பாதி திரையரங்கில் கொண்டாடும் தருணங்கள் அதிகமாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். மே 14-ம் தேதி இப்படம் உங்கள் கையில் தான் இருக்கும். நிச்சயமாக உங்களுக்கு பிடிக்கும்” என்று பேசினார் சூர்யா.