惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

爱范儿
爱范儿
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
MongoDB | Blog
MongoDB | Blog
Martin Fowler
Martin Fowler
GbyAI
GbyAI
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
B
Blog
U
Unit 42
B
Blog RSS Feed
D
DataBreaches.Net
Google DeepMind News
Google DeepMind News
人人都是产品经理
人人都是产品经理
腾讯CDC
量子位
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
V
Visual Studio Blog
博客园 - 聂微东
MyScale Blog
MyScale Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
Engineering at Meta
Engineering at Meta

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கேரளாவைக் கைப்பற்றியது காங்கிரஸ்
2026-05-05 · via hindutamil

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. பரவூர் தொகுதியில் போட்டியிட்ட கேரள எதிர்க்கட்சித் தலைவரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான வி.டி.சதீஷன் வெற்றி பெற்றார். அவரை கட்டியணைத்து வாழ்த்து சொல்கிறார் நிர்வாகி ஒருவர். படம்: பிடிஐ

Updated on

3 min read

திருவனந்தபுரம்: கேரள சட்​டப்​பேர​வைக்கு நடை​பெற்ற தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்​க​வுள்​ளது.

கேரள சட்​டப்​பேர​வை​யில் 140 தொகு​தி​கள் உள்​ளன. இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான இடது​சாரி ஜனநாயக முன்​னணிக்​கும்​(எல்​டிஎஃப்), காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்​கும்​(​யுடிஎஃப்) கடும் போட்டி இருந்​தது.

மொத்​த​முள்ள 140 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில், ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்​டன.

இதே​போல் இடது ஜனநாயக முன்​னணி சார்​பில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​களில் கூட்​டணி கட்​சிகள் போட்​டி​யிட்​டன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 115 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. இதர தொகு​தி​கள் அதன் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்​டன.

கேரளா​வில் 140 தொகு​தி​களுக்​கும் கடந்த ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற்​றது. இந்​நிலை​யில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்​ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்​ணிக்​கை​யின் முடி​வில் யுடிஎஃப் கூட்​டணி 97 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது.

காங்​கிரஸ் 63, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 22, கேஇசி 7, ஆர்​எஸ்பி 3, ஆர்​ஜேடி 1, கேஇசி(ஜே) 1 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ளது. அறு​திப் பெரும்​பான்​மைக்கு 71 தொகு​தி​களில் வெற்றி பெற வேண்​டும் எனும் நிலை​யில், காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி 97 இடங்​களைக் கைப்​பற்​றி​யுள்​ள​தால் மீண்​டும் ஆட்​சியை கைப்​பற்ற இருக்​கிறது. கடைசி​யாக காங்​கிரஸ் தலை​மையி​லான யுடிஎஃப் கூட்​டணி ஆட்சி 2011 முதல் 2016 வரை ஆட்​சி​யில் இருந்​தது. அப்​போது உம்​மன் சாண்டி முதல்​வ​ராக இருந்​தார். 10 ஆண்​டு​களுக்​குப் பிறகு அக்​கட்சி மீண்​டும் ஆட்​சி​யில் அமர​வுள்​ளது.

சதீஷன், சென்​னிதலா வெற்றி: கேரள காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரான ரமேஷ் சென்​னிதலா ஹரி​பாட் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் இம்​முறை 68,184 வாக்​கு​கள் பெற்று மீண்​டும் அதே தொகு​தி​யில் வெற்றி பெற்​றார். கட்​சி​யின் மற்​றொரு மூத்த தலை​வ​ரும், எதிர்க்​கட்​சித் தலை​வ​ரு​மான வி.டி.சதீஷன் இம்​முறை பரவூர் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். வாக்கு எண்​ணிக்​கை​யின் முடி​வில், அவர் மொத்​தம் 78,658 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றுள்​ளார்.

மார்க்​சிஸ்ட்: மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மையி​லான எல்​டிஎஃப் 35 இடங்​களைக் கைப்​பற்றி 2-வது இடத்​தைப் பிடித்​துள்​ளது. முதல்​வர் பின​ராயி விஜயன் தர்​மடம் தொகு​தி​யில் போட்​டி​யிட்​டார். அவர் மொத்​தம் 85,614 வாக்​கு​கள் பெற்று வெற்றி பெற்​றார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி 26 இடங்​களை​யும், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்சி 8 இடங்​களை​யும் கைப்​பற்​றி​யுள்​ளது.

3 இடங்​களில் பாஜக வெற்றி: இந்​தத் தேர்​தலில் பாஜக 3 இடங்​களில் வெற்றி பெற்​றது. திரு​வனந்​த​புரத்​தில் உள்ள நெமோன், கழக்​கூட்​டம், சத்​தன்​னூர் ஆகிய மூன்று தொகு​தி​களில் பாஜக வெற்றி பெற்​றுள்​ளது. நெமோன் தொகு​தி​யில், பாஜக​வின் மூத்த தலை​வ​ரும் முன்​னாள் மத்​திய அமைச்​சரு​மான ராஜீவ் சந்​திரசேகர் வெற்றி பெற்​றார். இவர் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வ​ரும் அமைச்​சரு​மான வி. சிவன்​குட்​டியை 3,590 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்​தார்.

மற்​றொரு தொகு​தி​யான கழக்​கூட்​டத்​தில், பாஜக மூத்த தலை​வ​ரும், முன்​னாள் மத்​திய அமைச்​ச​ரான வி. முரளீதரனும் வெற்றி பெற்​றார். இது திரு​வனந்​த​புரம் பகு​தி​யில் பாஜக அடைந்த மற்​றொரு குறிப்​பிடத்​தக்க வெற்​றி​யாக அமைந்​தது.

50 ஆண்​டுக்​குப் பின்​... 50 ஆண்​டு​களுக்​குப் பின்​னர் நாட்​டில் கம்​யூனிஸ்ட் கட்​சி​களின் அரசே இல்​லாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. வழக்​க​மாக மேற்கு வங்​கம், திரிபு​ரா, கேரளா ஆகிய 3 மாநிலங்​களில் ஏதாவது ஒன்​றில் கம்​யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடை​பெறும்.

1977 முதல் மேற்கு வங்​கத்​தில் இடது​சா​ரி​களின் அரசு இருந்து வந்​தது. 2011-ல் மேற்கு வங்​கத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் வீழ்த்​திய திரிண​மூல் காங்​கிரஸ் தலை​வ​ரான மம்தா பானர்ஜி ஆட்சி பீடத்​தில் அமர்ந்​தார். அதன் பின்​னர் அங்கு கம்​யூனிஸ்ட் கட்​சிகளால் ஆட்​சி​யைப் பிடிக்க முடிய​வில்​லை. அதே​போல, திரிபு​ராவை ஆண்ட கம்​யூனிஸ்ட் கட்​சிகளும், 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக​விடம் தோல்வி கண்டு ஆட்​சியை இழந்​தது.

தற்​போதைய நிலை​யில் கேரளா​வில் மட்​டுமே கம்​யூனிஸ்ட் கட்​சி​களின் ஆட்சி நடை​பெற்று வந்​தது. அங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியை இழந்தது.

வி.டி.சதீஷன் அடுத்த முதல்வர்?- கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிக்கட்டிலில் அமரவுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களாக வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், சசி தரூர் ஆகியோர் உள்ளனர். இதில் வி.டி.சதீஷன், ரமேஷ் சென்னிதலா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்று எம்எல்ஏவாகியுள்ளனர்.

முதல்வர் பதவிக்கு போட்டியாக 4 பேர் இருந்தபோதிலும் வி.டி.சதீஷன் இந்தப் போட்டியில் முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சி மேலிடத்தில் வி.டி.சதீஷனுக்கு அதிக செல்வாக்கு இருப்பதால் அவரே முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.