




















கேரள முதல்வர் வி.டி.சதீசன் உடன் காங்கிரஸ் கட்சியின் 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், கூட்டணி கட்சியான ஐயூஎம்எல் கட்சியின் 5 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஆர்எஸ்பி, சிஎம்பி கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்களில் 14 பேர் புதியவர்கள்.
இந்த விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், கேரள மாநில பாஜக எம்எல்ஏ ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், ஆளும் காங்கிரஸ் கூட்டணி கட்சியின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。