惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
G
Google Developers Blog
雷峰网
雷峰网
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
人人都是产品经理
人人都是产品经理
U
Unit 42
B
Blog RSS Feed
博客园 - 【当耐特】
T
Tailwind CSS Blog
V
V2EX
S
SegmentFault 最新的问题
美团技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Y
Y Combinator Blog
M
MIT News - Artificial intelligence
量子位
aimingoo的专栏
aimingoo的专栏
Stack Overflow Blog
Stack Overflow Blog
Engineering at Meta
Engineering at Meta
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
D
DataBreaches.Net
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
A
About on SuperTechFans

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“எனக்கு ‘மிஸ்டர் எக்ஸ்’ கற்றுத் தந்த பாடங்கள்...” - இயக்க...
ஸ்டார்க்கர் · 2026-05-23 · via hindutamil

Updated on: 

‘மிஸ்டர் எக்ஸ்’ எதிர்பார்த்த அல்லது நம்பிய அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை என்று இயக்குநர் மனு ஆனந்த் தெரிவித்துள்ளார்.

மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மிஸ்டர் எக்ஸ்’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனிடையே இப்படம் தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மனு ஆனந்த்.

அந்த அறிக்கையில் மனு ஆனந்த், “‘Mr X’ படத்தை பார்த்த, ஆதரித்த அதைப் பற்றி விவாதித்த மற்றும் விமர்சித்த அனைவரிடமும் இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க சில நிமிடங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

‘Mr X’ என்பது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் உருவான திரைப்படம். பொதுமக்கள் ரசிக்கும் வணிக சினிமாவின் பிரம்மாண்டத்தையும் பரபரப்பையும் தக்க வைத்துக் கொண்டு, சற்று மாறுபட்ட குரலில் ஒரு கதையை சொல்ல முயன்ற ஒரு படைப்பு. ஆரம்பத்திலிருந்தே, தனித்துவமாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும், பார்வையாளர்களை முழுமையாக ஈர்க்கும் ஒரு திரையரங்கு அனுபவத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது.

2026 ஏப்ரல் 17 அன்று உலகம் முழுவதும் படம் வெளியானபோது, தமிழ்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநிலத் தேர்தலின் மிகப்பெரிய போட்டி நிறைந்த வாரத்தில் நாங்கள் களமிறங்கியுள்ளோம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். படம் பல தரப்பிலிருந்து நல்ல விமர்சனங்களையும், நேர்மறையான பார்வையாளர் கருத்துகளையும் பெற்றிருந்தாலும், நாங்கள் எதிர்பார்த்த அல்லது நம்பிய அளவுக்கு வசூலில் வெற்றி பெறவில்லை.

திரைப்படக் கலைஞர்களாக ஒரு படம் ஏன் பெரிய அளவில் மக்களுடன் இணைகிறது அல்லது ஏன் வணிக ரீதியாக குறைவாக செயல்படுகிறது என்பதை பற்றிய பல கோணங்களில் ஆய்வு செய்யலாம். நீங்கள் யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து பதில்களும் மாறலாம். ஆனால் இறுதியில், ‘Mr X’ படத்தின் எழுத்தாளரும் இயக்குநருமான நான், அதன் முழுப் பொறுப்பும் என்னுடையதே என்று நம்புகிறேன். அதை முழு பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

சினிமா என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு ஊடகம், அதே நேரத்தில் கணிக்க முடியாத ஒன்றும் கூட. ஒவ்வொரு படமும் உங்களுக்கு மதிப்புமிக்க ஏதோ ஒன்றை கற்றுத் தருகிறது. கதை சொல்லலைப் பற்றி, பார்வையாளர்களைப் பற்றி, சரியான நேரத்தைப் பற்றி, உங்களைப் பற்றியும், ‘Mr X’ என் தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் அனுபவங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. அந்தப் பாடங்களை நான் மிகுந்த மரியாதையுடனும் நன்றியுடனும் எடுத்துச் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிக்கையில் ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் மனு ஆனந்த்.