惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
博客园_首页
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
大猫的无限游戏
大猫的无限游戏
月光博客
月光博客
IT之家
IT之家
WordPress大学
WordPress大学
N
Netflix TechBlog - Medium
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
The GitHub Blog
The GitHub Blog
C
Check Point Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
博客园 - Franky
G
Google Developers Blog
V
V2EX
雷峰网
雷峰网
美团技术团队
博客园 - 【当耐特】
人人都是产品经理
人人都是产品经理
有赞技术团队
有赞技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
V
Visual Studio Blog
J
Java Code Geeks

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
‘தமிழ்த் திரையுலகின் பொக்கிஷமாக திகழ்ந்தவர் பாக்யராஜ்’ - ...
செய்திப்பிரிவு · 2026-06-28 · via hindutamil

Updated on: 

திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின்: ஆசான் மறைந்த சில வாரங்​களி​லேயே அவரது மாணவரை​யும் இழந்​து​விட்​டது தமிழ்த் திரை​யுல​கம். இந்​திய சினி​மா​வில் முடிசூ​டாத் திரைக்​கதை மன்​ன​ராக, அனை​வரை​யும் ஈர்த்த யதார்த்த நாயக​னாக, சிக்​கலான சூழலை​யும் சிறிய வசனத்​தில் கடத்​தி​விடும் ஆற்​றல் பெற்ற எழுத்​தாள​ராக என எல்​லா​வற்​றி​லும் வெற்​றி​பெற்ற அசாத்​திய இயக்​குந​ராக வலம் வந்​தவர் பாக்​ய​ராஜ்.​ திரைத்​துறை​யில் இன்​னும் பல ஆண்​டு​கள் பங்​களிக்​கும் வாய்ப்​பை​யும் ஆற்​றலை​யும் பெற்​றிருந்த அவர், தம் வாழ்வை நிறைவு செய்து கொண்​டு​விட்​டது பெரும் இழப்​பு.

அவரை இழந்து தவிக்​கும் பூர்​ணிமா பாக்​ய​ராஜ், சாந்​தனு, சரண்யா உள்​ளிட்ட குடும்​பத்​தினருக்​கும் திரைத்​துறை நண்​பர்​களுக்​கும் எனது ஆழ்ந்த இரங்​கல்​. தமது படைப்​பு​களால் என்​றென்​றும் தமிழ்​நாட்டு மக்​களின் பிரிக்க முடி​யாத அங்​க​மாகத் தொடர்ந்து வாழ்​வார்.

பழனி​சாமி (அதி​முக): பன்முகத்​திறமை​யாள​ராக விளங்​கிய பாக்​ய​ராஜ், எம்​.ஜி.ஆர் மீது பேரன்பு கொண்​டிருந்​தவர். இந்​திய திரை​யுல​கின் தன்​னிகரற்ற திரைக்​கதை ஆசிரியர் என்ற பெரு​மைக்​குரிய அவர் மறைவு, ஈடு செய்ய முடி​யாத பேரிழப்​பு. அவர் குடும்​பத்​தினருக்​கும் திரைத்​துறை​யினருக்​கும் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​கிறேன்.

பிரேமலதா (தே​மு​தி​க): தமிழ்த் திரை​யுல​கின் பொக்​கிஷ​மாகத் திகழ்ந்த பாக்​ய​ராஜ், திரைக்​கதை, வசனம், இயக்​கம், நடிப்பு எனப் பல்​வேறு துறை​களில் தனித்​து​வ​மான திறமையை வெளிப்​படுத்​தி​ய​வர். அவர் இயக்​கிய மற்​றும் நடித்த திரைப்​படங்​கள் மக்​கள் மத்​தி​யில் பெரும் வரவேற்​பைப் பெற்​று,பல வெள்ளி விழா திரைப்​படங்​களாக அமைந்​துள்​ளன. அவரது மறைவு தமிழ்த் திரை​யுல​கிற்கு ஈடு​செய்ய முடி​யாத பேரிழப்​பாகும். தேமு​திக சார்​பில் ஆழ்ந்த இரங்​கலைத் தெரி​வித்​துக் கொள்​கிறோம்.

அன்​புமணி ராம​தாஸ் (பாமக): திரைத்​துறை​யின் அனைத்​துப் பிரிவு​களி​லும் வல்​லமை பெற்று பன்​முகக் கலைஞ​ராகத் திகழ்ந்​தவர். இலக்​கி​யத்​தில் ஈடு​பாடு கொண்​ட​வர். திரை​யுல​கில் எவரும் பேசத் துணி​யாத பல உண்​மை​களை எவர் மனமும் புண்​ப​டாத​வாறு நகைச்​சுவை​யுடன் திரைமொழி​யாகப் பேசி​ய​வர். திரைப்​படங்​களின் வாயி​லாக சமூக சீர்​திருத்​தக் கருத்​துகளை​யும் கூறிய​வர். அவரை இழந்து வாடும் அனை​வருக்​கும் ஆழ்ந்த இரங்​கல்​.

பெ.சண்​முகம் (மார்க்​சிஸ்ட் கம்​யூ): கிராமிய வாழ்க்​கையை மைய​மாகக் கொண்ட கதை​யி​னாலும், இயல்​பான நகைச்​சுவை​யி​னாலும், குடும்ப பாங்​கான நடிப்​பாலும் தமிழக மக்​களின் இதயத்​தில் இடம் பிடித்​தவர். அரசி​யலிலும், வார இதழின் ஆசிரிய​ராக​வும் தனது திறமையை வெளிப்​படுத்​தி​ய​வர். பல திரைப்பட இயக்​குநர்​களை உரு​வாக்​கிய​தி​லும் முக்​கிய பங்​காற்​றிய​வர். அவரது மறைவு தமிழ்த் திரை​யுல​கிற்கு ஏற்​பட்ட பேரிழப்​பாகும்.

மு.வீர​பாண்​டியன் (இந்​திய கம்​யூ): திரைத்​துறை​யில் மட்​டும் அல்​லாமல், அரசி​யலிலும் கால்​ப​தித்து நடை​போட்​ட​வர். அ​தி​முக உறுப்​பின​ராக இணைந்து செயல்​பட்​ட​வர். அவரது இயல்​பான பேச்சு பலரை​யும் பரவலான ரசிகர் வட்​டத்தை உரு​வாக்​கித் தந்​தது. அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்​கல். நடிகரும், எம்​பி​யு​மான கமல்​ஹாசன்: கே. பாக்​ய​ராஜ் என்ற (எனக்கு 50 வருடங்​களுக்கு முன் அறி​முக​மான) ராஜன் இன்று இல்​லை. ஒரே மாதத்​துக்​குள் 2 ராஜாக்​களை இழந்து விட்​டது தமிழ் கூறும் நம் சினி​மா.

டாக்​டர் எம்​ஜிஆர் பல்​கலைக்​கழக வேந்​தர் ஏ.சி.சண்​முகம்: டாக்​டர் எம்​ஜிஆர் பல்​கலைக்​கழகத்​தால் டாக்​டர் பட்​டம் வழங்​கப்​பட்ட கே.​பாக்​ய​ராஜ் மறைவுச் செய்தி துயரத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. குடும்ப பாசம், பெண்​கள் முன்​னேற்​றம், சமூகப் பொறுப்​பு, கல்வி மற்​றும் மனிதநேயம் போன்ற உயர்ந்த கருத்​துகளை தனது படைப்​பு​களில் மக்​களுக்கு எளிமை​யாக எடுத்​துச்​ சென்​றவர்​. அவரது மறைவு திரையுலகுக்​கும்​ கலை உலகுக்​கும்​ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.