惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

S
SegmentFault 最新的问题
G
Google Developers Blog
Stack Overflow Blog
Stack Overflow Blog
WordPress大学
WordPress大学
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
罗磊的独立博客
月光博客
月光博客
IT之家
IT之家
爱范儿
爱范儿
Google DeepMind News
Google DeepMind News
小众软件
小众软件
C
Check Point Blog
B
Blog RSS Feed
H
Help Net Security
博客园 - 司徒正美
L
LangChain Blog
MongoDB | Blog
MongoDB | Blog
B
Blog
The Cloudflare Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
Microsoft Security Blog
Microsoft Security Blog
M
MIT News - Artificial intelligence
N
Netflix TechBlog - Medium
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
வக்பு வாரியத்துக்கு முதன்மை செயல் அதிகாரியாக ஐஏஎஸ் அதிகார...
2026-04-25 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: தமிழ்​நாடு வக்பு வாரி​யத்​துக்கு இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​தில் உள்ள ஐஏஎஸ் அதி​காரியை முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்​கக்​கோரி தொடரப்​பட்ட வழக்​கில், தமிழக அரசும், வக்பு வாரிய​மும் 4 வார காலத்​துக்​குள் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக வக்பு வாரிய பாது​காப்​புக்​குழு அறக்​கட்​டளை தலை​வ​ரான மதுரை கட்​ரா​பாளை​யத்​தைச் சேர்ந்த எம்​.அஜ்மல்​கான் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், தமிழகம் முழு​வதும் கோடிக்​கணக்​கான ரூபாய் மதிப்​புள்ள வக்பு வாரிய சொத்​துக்​களை கண்​காணித்து பாது​காக்​கும் பொறுப்​பும், கடமை​யும் முதன்மை செயல் அதி​காரிக்கே உள்​ளது.

ஆனால் தமிழ்​நாடு வக்பு வாரி​யத்​தில் பணிபுரிந்த முன்​னாள் முதன்மை செயல் அதி​காரி​கள், கண்​காணிப்​பாளர்​கள், இளநிலை உதவி​யாளர் உள்​ளிட்ட பலர் தங்​களுக்​குள் கூட்​டணி அமைத்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்​புள்ள வக்பு வாரிய சொத்​துக்​களுக்கு சட்​ட​விரோத​மாக தடை​யில்லா சான்று வழங்கி அவற்றை விற்​பனை செய்து மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளது தொடர்​பாக​வும், தவறு செய்த வக்பு அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்​கோரி​யும் ஏற்​கெனவே உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​துள்​ளேன்.

அந்த வழக்​கில் தவறு செய்த அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதி​மன்​ற​மும் உத்​தர​விட்​டுள்​ளது. இந்​நிலை​யில் வக்பு வாரிய திருத்​தச் சட்​டப்​படி மாநில வக்பு வாரி​யத்​துக்கு தமிழக அரசின் இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​துக்கு குறை​யாத ஐஏஎஸ் அதி​காரியை நிரந்தர முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்க வேண்​டும்.

ஆனால் தமிழக அரசு துணைச் செய​லா​ளர் கிரேடு -2 அந்​தஸ்​தில் உள்ள சென்னை மாநக​ராட்​சி​யில் அடை​யாறு மண்டல துணை ஆணை​ய​ராக பணி​யாற்​றிய ஐஏஎஸ் அதி​காரி​யான அப்​தாப் ரசூல் என்ற அதி​காரியை வக்பு வாரி​யத்​தின் முதன்மை செயல் அதி​காரி​யாக கடந்​தாண்டு மே மாதம் நியமித்​துள்​ளது.

இது வக்பு வாரிய சட்​டத்​துக்கு எதி​ரானது என்​ப​தால் அப்​தாப் ரசூல் வக்பு வாரி​யத்​தின் முதன்மை செயல் அதி​காரி​யாக பதவி வகிக்க தடை விதிக்க வேண்​டும்.

அத்​துடன் வக்பு வாரி​யத்​துக்கு இணைச் செய​லா​ளர் அந்​தஸ்​தி்ல் உள்ள ஐஏஎஸ் அதி​காரியை முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்க தமிழக அரசுக்கு உத்​தர​விட வேண்​டும், எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்​.தண்​ட​பாணி முன்​பாக நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் எம். ராமமூர்த்தி ஆஜராகி வாதி்ட்​டார்.

அதையடுத்து நீதிபதி எந்த அடிப்​படை​யில் ஐஏஎஸ் அதி​காரி​யான அப்​தாப் ரசூல் வக்பு வாரி​யத்​தின் முதன்மை செயல் அதி​காரி​யாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார் என்​ப​தற்​கான ஆவணங்​களை 4 வார காலத்​துக்​குள் தாக்​கல் செய்ய தமிழக அரசுக்​கும், வக்பு வாரி​யத்​துக்​கும் உத்​தர​விட்டு விசா​ரணையை தள்ளி வைத்​துள்ளார்.