






















Updated on:
கிருஷ்ணரின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம், ‘கிருஷ்ணவதாரம்’படத்தை ஹர்திக் கஜ்ஜார் இயக்கியுள்ளார்.
கிருஷ்ணராக, சித்தார்த் குப்தா, சத்யபாமாவாக சம்ஸ்கிருதி ஜெயனா, ராதையாக சுஷ்மிதா பட், ருக்மிணியாக நிவாஷினி கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாத் சாஷ்டே இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இப்படம் கிருஷ்ணரின் சுறுசுறுப்பான, குறும்பான தன்மையையும் அவரது பிரசித்தி பெற்ற லீலைகளையும் பதிவு செய்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தி, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் மே 7-ல் வெளியாகும் இப்படம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் ஆங்கிலத்தில் வெளியாகிறது. இதற்கிடையே இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடல்களை சோனு நிகம், சுனிதி சவுகான், ஷ்ரேயா கோஷால், நீதி மோகன், ஜாவேத் அலி உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。