惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
V2EX
WordPress大学
WordPress大学
U
Unit 42
I
InfoQ
A
About on SuperTechFans
宝玉的分享
宝玉的分享
J
Java Code Geeks
博客园 - 司徒正美
爱范儿
爱范儿
Engineering at Meta
Engineering at Meta
G
Google Developers Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
Hugging Face - Blog
Hugging Face - Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
aimingoo的专栏
aimingoo的专栏
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Last Week in AI
Last Week in AI
腾讯CDC
Recent Announcements
Recent Announcements

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டி முதல்வர் ஸ்டாலின் உற்சாகம்
2026-04-29 · via hindutamil

கொடைக்கானல் நட்சத்திர ஏரியைச் சுற்றி உற்சாகமாக சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலின்.

ஆ.நல்லசிவன்

Updated on

2 min read

கொடைக்கானல்: ​கொடைக்​கானல் நட்​சத்​திர ஏரியைச் சுற்றி முதல்​வர் ஸ்டா​லின் நேற்று காலை உற்சாகமாக சைக்​கிள் ஓட்டினார். இன்று அவர் சென்னை திரும்புகிறார்.

தமிழகத் தேர்​தல் முடிவடைந்​துள்ள நிலை​யில் கொடைக்​கானலில் 5 நாட்​கள் ஓய்​வெடுக்க குடும்​பத்​துடன் முதல்​வர் ஸ்டா​லின் வந்​துள்​ளார். நேற்று காலை நட்​சத்​திர ஏரிப் பகு​தி​யில் நடைப்​ப​யிற்​சி​யில் ஈடு​பட்​டார். அப்​போது, ஆரோக்​கி​யத்​துடன் இருக்க தின​மும் ‘வாக்​கிங் போங்​க…’ என்று பொது​மக்​களுக்கு ஆலோ​சனை வழங்​கி​னார்.

அவருடன் சுற்​றுலாப் பயணி​கள் செல்ஃபி எடுத்து கொண்​டார். சிலர் அவருக்கு மலைப்​பூண்​டு, பூங்​கொத்து வழங்​கினர். அவரைப் பார்க்க தனது தந்​தை​யுடன் வந்​திருந்த சிறுமி ஒரு​வர் ‘ஸ்​டா​லின் தொடரட்​டும், தமிழ்​நாடு வெல்​லட்​டும்’ என்ற திமுக​வின் பிரச்​சா​ரப் பாடலைப் பாடிக் காண்​பித்​தார். உடனே, சிறுமியை கன்னத்​தில் தட்​டிக் கொடுத்து பாராட்​டி​னார். இடை​யில் ஓர் உணவகத்​தில் டீ அருந்​தி​னார்.

பின்​னர், நட்​சத்​திர ஏரியைச் சுற்றி சிறிது தூரம் சைக்​கிள் பயணம் மேற்​கொண்​டார். முதல்​வர் ஸ்டா​லின் சைக்​கிள் பயணம் மேற்​கொள்​வதை அறிந்த ஏராள​மான பொது​மக்​கள் சாலை​யோரம் நின்று அவருக்கு கையசைத்து மகிழ்ச்​சியை வெளிப்​படுத்​தினர். அவரும் பொது​மக்​களைப் பார்த்து கையசைத்​த​வாறே சைக்​கிள் பயணம் மேற்​கொண்​டார். பின்​னர், காரில் ஏறி தங்​கும் விடு​திக்கு திரும்​பி​னார்.

காலை உணவுக்​குப் பிறகு கொடைக்​கானலில் உள்ள தனி​யார் அருங்​காட்​சி​யகத்​துக்​குச் சென்ற முதல்​வர், அங்​கிருந்த பழமை​யான கார்​கள், நாண​யங்​கள், ரேடியோக்​களை பார்​வை​யிட்டு விடுதி திரும்​பி​னார். முதல்​வர் ஓய்​வெடுப்​ப​தற்​காக வந்​த​தால் விடு​தி​யில் அவரைப் பார்க்க கட்சி நிர்​வாகி​கள், முக்​கிய பிர​முகர்​கள் யாருக்​கும் அனு​மதி அளிக்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் நேற்று மாலை திண்​டுக்​கல் மாவட்ட, கட்சி நிர்​வாகி​களை அழைத்து முதல்​வர் ஸ்டா​லின் திடீர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

அதில், அமைச்​சர்​கள் இ.பெரிய​சாமி, அர.சக்​கர​பாணி, எம்​எல்ஏ செந்​தில்​கு​மார் மற்​றும் முக்​கிய நிர்​வாகி​கள் மட்​டுமே பங்​கேற்​றனர். ஒரு மணி நேரத்​துக்​கும் மேலாக நடை​பெற்ற கூட்​டத்​தில் அவர்​களு​டன் தொகு​தி​களில் வாக்​குப்​ப​திவு, வெற்றி வாய்ப்பு நில​வரம், மீண்​டும் ஆட்சி அமைப்​பது, மக்​கள் மனநிலை எப்​படி இருக்​கிறது என்​பது தொடர்​பாக முதல்​வர் ஆலோ​சனை நடத்​தி​னார். அவர்​களும் வெற்​றி​வாய்ப்​புப் பிர​காச​மாக இருக்​கிறது என்று கூறினர்.

தொடர்ந்​து, 2-வது முறை​யாக ஆட்​சி​யைப் பிடித்த கட்சி என்ற பெருமை திமுக​வுக்கு கிடைக்​கும் என்று கூறினர். அதைக் கேட்டு முதல்​வர் மகிழ்ச்சி அடைந்​த​தாக​வும், கொடைக்​கானல் வந்த பிறகு மனதுக்​கும், உடலுக்​கும் புத்​துணர்ச்சி கிடைத்​திருப்​ப​தாக​வும், அதே உத்​வேகத்​துடன் மீண்​டும் திரா​விட மாடல் 2.0 ஆட்சி அமைத்​து, தமிழக மக்​களுக்​குச் சேவை புரி​யும் வாய்ப்பு எனக்​குக் கிடைக்​கும் என்ற நம்​பிக்கை இருப்​ப​தாக​வும் முதல்​வர் கூறிய​தாக திமுக வட்​டாரத்​தில் கூறப்​படு​கிறது.

இதனிடையே 4 நாட்​கள் ஓய்​வுக்​குப்​பிறகு, இன்று (ஏப்​.29) காலை குடும்​பத்​தினருடன் முதல்​வர் கொடைக்​கானலில் இருந்து காரில் புறப்​பட்டு மதுரை சென்​று, அங்​கிருந்​து தனி வி​மானத்​தில்​ சென்​னை திரும்​புகிறார்​.