惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 司徒正美
Last Week in AI
Last Week in AI
Recent Announcements
Recent Announcements
Y
Y Combinator Blog
博客园 - 聂微东
M
MIT News - Artificial intelligence
博客园_首页
Jina AI
Jina AI
博客园 - 叶小钗
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
J
Java Code Geeks
F
Fortinet All Blogs
aimingoo的专栏
aimingoo的专栏
小众软件
小众软件
Vercel News
Vercel News
The Cloudflare Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
云风的 BLOG
云风的 BLOG
N
Netflix TechBlog - Medium
B
Blog
Google DeepMind News
Google DeepMind News
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்ப...
செய்திப்பிரிவு · 2026-05-29 · via hindutamil

Updated on: 

சென்னை: ‘நீ​தித் துறை​யில் ஊழல் இல்லை என யாரும் மறுக்க முடி​யாது; அதே​போல நீதிப​தி​களை புனிதர்​களாகச் சித்​தரிக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை’ என்று கருப்பு படத்​துக்கு தடை கோரிய வழக்கை தள்​ளு​படி செய்​து, சென்னை உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர்.

‘நடிகரும், இயக்​குநரு​மான ஆர்​.ஜே.​பாலாஜி இயக்​கத்​தில் நடிகர் சூர்​யா, நடிகை த்ரிஷா நடித்து சமீபத்​தில் வெளிவந்​துள்ள ‘கருப்​பு’ திரைப்​படத்​தில் நீதித் ​துறையை​யும், நீதிப​தி​களை​யும் அவம​திக்​கும் வகை​யில் காட்​சிகள் எடுக்​கப்​பட்​டுள்​ள​தால் அப்​படத்​துக்கு தடை விதிக்க வேண்​டும்’ எனக் கோரி கோடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த வழக்​கறிஞர் ஆர்​.எஸ்​.தமிழ்​வேந்​தன், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கை தள்​ளு​படி செய்து நீதிப​தி​கள் ஜி.ஆர்​.சு​வாமி​நாதன், வி.லட்​சுமி நாராயணன் பிறப்​பித்​துள்ள உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: ‘கருப்பு’ திரைப்​படத்​தின் கதைக்​களம் முழுக்க, முழுக்க நீதித்​துறை​யின் செயல்​பாடு​களை மைய​மாக வைத்து எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அப்​படத்​தில் வரும் நீதிபதி ஊழல்​வா​தி​யாக​வும், செல்​வாக்​குமிக்க வழக்​கறிஞர் நீதி​மன்ற நடை​முறை​களில் அதீத அதி​காரம் செலுத்​தும் மையப்​புள்​ளி​யாக திகழ்​வ​தாக​வும் காட்​சிகள் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளன.

நீதித்​துறை​யில் ஊழல் இல்லை என்று யாரும் இங்கு மறுக்க முடி​யாது. ஊழல் நீதிப​தி​கள் நேற்​றும் இருந்​தார்​கள். இன்​றும் இருக்​கிறார்​கள். அதே​போல், நீதிப​தி​களை புனிதர்​களாகச் சித்​தரிக்க வேண்​டிய அவசி​ய​மும் இல்​லை.

நாட்​டில் உள்ள 20 சதவீத நீதிப​தி​கள் ஊழல்​வா​தி​கள் என்​பதை உச்ச நீதி​மன்ற முன்​னாள் நீதிபதி பருச்சா கேரளா​வில் நடை​பெற்ற ஒரு சட்ட கருத்​தரங்​கில் வெளிப்​படை​யாகவே தெரி​வித்​துள்​ளார்.

மும்பை உயர் நீதி​மன்​றம் தொடர்​பான ஒரு வழக்​கில், ஊழல் என்​னும் புற்​று​நோய் செல்​கள் நீதித்​துறை​யின் உயிர் நாடிகளுக்​குள் தொடர்ந்து ஊடுருவி வரு​வ​தாக உச்ச நீதி​மன்​ற​மும் கருத்து தெரி​வித்​துள்​ளது.

நீதித்​துறை அந்த அபாயகர​மான செல்​களை அறுவை சிகிச்​சை​யின் மூலம் வேரோடு களைய வேண்​டும் என்​றும், சீர்​திருத்த நடவடிக்​கைகள் மூல​மாக நீதித்​துறை சுயபரிசோதனை செய்து கொள்​ள வேண்​டிய அவசி​யம் குறித்​தும் உச்ச நீதி​மன்​றம் அந்த தீ்ர்ப்​பில் எடுத்​துரைத்​துள்​ளது.

வழக்​கறிஞர்​கள் சிலர் ஊழல்​ வா​தி​களு​டன் தொடர்பு கொள்​ளாமல் நீதித்​துறை​யில் ஊழல் நடை​பெற வாய்ப்பு கிடை​யாது. நீதித்​துறை​யில் நடை​பெறும் ஊழல் நிகழ்​வு​களை நாங்​களும் அறிவோம். அதே​நேரம் அந்த கூற்றை முழு​மை​யாக ஆதரிக்க மாட்​டோம்.

சென்னை உயர் நீதி​மன்​றத்​தின் முழு நீதிப​தி​கள் அமர்வு அவ்​வப்​போது இது​போன்ற கருப்பு ஆடு​களை களை​யெடுத்​துக் கொண்​டு​தான் இருக்​கிறது. ‘கருப்​பு’ திரைப்​படத்​தில் வரும் காட்​சிகள் மிகைப்​படுத்தி எடுக்​கப்​பட்​டுள்ளன என்​பது உண்​மை​தான் என்​றாலும், அதை முழு​வது​மாக மறுக்க முடிய​வில்​லை.

கருத்து சுதந்​திரத்தை வெளிப்​படுத்​தும் சுதந்​திரம், படைப்​பாளி​யான திரைப்பட கலைஞர்​களுக்​கும் பொருந்​தும். தனது அதீத கற்​பனை​யால் அரசி​யல் ரீதி​யாக கருத்து சித்​திரம் வெளி​யிடும் ஒரு கார்ட்​டூனிஸ்​டுக்கு என்ன பரந்த உரிமை உள்​ளதோ அதே உரிமை திரைப்​படக் கலைஞர்​களுக்​கும் உள்​ளது.

‘கருப்​பு’ திரைப்​படத்​துக்கு தணிக்கை வாரியமே சான்று அளித்​திருக்​கும்​போது, நீதி​மன்​றம் அதன் கருத்தை மாற்​றியமைக்க முடி​யாது. நாம் இப்​போது சமூக ஊடகங்​களின் யுகத்​தில் இருக்​கிறோம். யார் வேண்​டுமென்​றாலும் எதை​யும் சொல்லி எளி​தாக தப்​பி​விடலாம். கூற்று கொஞ்​சம் கொடூர​மான​தாக இருந்​தா​லும் அதை புறக்​கணித்து நீதித்​துறை​யின் பயணம் முன்​னோக்​கிச் செல்ல வேண்​டும்.

இந்​தப் படத்​தில் ஏழுகிணறு நீதி​மன்​றம் என கற்​பனை​யாக சித்​தரிக்​கப்​பட்டு அங்கு ஊழல் நடக்​கிறது என படத்​தில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளதேயன்​றி, ஒட்​டுமொத்த நீதித்​துறையை​யும் அந்​தப்​படம் கேள்விக்​குறி​யாக்​க​வில்​லை.

மேலும் ஏழுகிணறு நீதி​மன்​றம் என்ற பெயரில் சென்​னை​யில் எந்த நீதி​மன்​ற​மும் இல்லை என்​ப​தால் இந்த வழக்​கில் நீதி​மன்ற அவம​திப்பு இருப்​ப​தாகக் கருதி படத்​தின் இயக்​குநர் மீதும், படத்​தில் நடித்த நடிகர்​கள் மீதும் எந்த நடவடிக்​கை​யும்​ எடுக்​க முடி​யாது. இவ்​வாறு உத்​தர​விட்​டு வழக்​கை தள்​ளு​படி செய்​துள்​ளனர்​.