
























Updated on:
சென்னை: உலக அளவில் பார்வையாளர்களையும், வசூலையும் குவித்து வருகிறது Obsession திரைப்படம். இந்தியாவில் இந்தப் படம் கடந்த 29-ம் தேதி வெளியானது.
கேரி பேக்கர் இயக்கத்தில் இந்தப் படம் வெளியானது. ஹாரர் ஜானரில் வெளிவந்துள்ள இந்தப் படத்தின் ரன் டைம் 1 மணி நேரம் 49 நிமிடங்கள். விமர்சன ரீதியாகவும் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை இந்தப் படம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடிகை இண்டி நவராட்டே (நிக்கி) மற்றும் நடிகர் மைக்கேல் ஜான்ஸ்டன் (பேரான் என்கிற Bear) ஆகியோர் நடித்துள்ளனர். இதன் கதையை மிக எளிதானதாக எழுதியுள்ளார் இயக்குநர் கேரி பேக்கர்.
தன்னுடன் பணியாற்றும் நிக்கி மீது காதல் வயப்படுகிறார் Bear. தன் பிரியசகிக்காக பரிசு பொருளை வாங்குகிறார். அவர் வாங்கும் அந்த பரிசு பொருளால் நடப்பது என்ன என்பதுதான் கதை. பேயே இல்லாமல் பார்வையாளர்களை கிலியூட்டுகிறார் இயக்குநர் கேரி பேக்கர். அவரது கதைக்கு வலு சேர்க்கின்றனர் ஒளிப்பதிவு, எடிட்டிங், சவுண்ட் டிசைன், லைட்டிங் என தொழில்நுட்ப கலைஞர்கள்.
இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 1 மில்லியன் டாலர் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், இந்த படம் உலக அளவில் இதுவரை சுமார் 148 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்தியாவில் இந்த படம் வெளியாகி ஐந்து நாளான நிலையில் இதுவரை ரூ.12 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。