惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

小众软件
小众软件
博客园 - Franky
罗磊的独立博客
G
Google Developers Blog
The GitHub Blog
The GitHub Blog
P
Proofpoint News Feed
Recent Announcements
Recent Announcements
V
V2EX
F
Fortinet All Blogs
阮一峰的网络日志
阮一峰的网络日志
Blog — PlanetScale
Blog — PlanetScale
月光博客
月光博客
U
Unit 42
GbyAI
GbyAI
A
About on SuperTechFans
WordPress大学
WordPress大学
Engineering at Meta
Engineering at Meta
雷峰网
雷峰网
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Martin Fowler
Martin Fowler
D
DataBreaches.Net
The Cloudflare Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
MongoDB | Blog
MongoDB | Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“நாங்கள் தோல்வி அடையவில்லை; முதல்வர் பதவியை ராஜினாமா செய்...
2026-05-06 · via hindutamil

கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி. உடன் கட்சி எம்.பி.யும், மம்தாவின் மருமகனுமான அபிஷேக் பானர்ஜி.படம்: பிடிஐ

Updated on

2 min read

கொல்கத்தா: மேற்கு வங்க சட்​டப்​பேரவை தேர்​தலில் நாங்​கள் தோல்வி அடைய​வில்​லை. எங்​கள் வெற்றி களவாடப்​பட்​டது. நான் ராஜி​னாமா செய்​யப் போவ​தில்லை என்று திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சித் தலை​வர் மம்தா பானர்ஜி தெரி​வித்​துள்​ளார்.

மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் 200-க்​கும் மேற்​பட்ட இடங்​களைக் கைப்​பற்றி பாஜக அமோக வெற்றி பெற்​றுள்​ளது. திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி 80 இடங்​களைக் கைப்​பற்​றியது. இந்​நிலை​யில், திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சித் தலை​வ​ரான மம்தா பானர்ஜி நேற்று செய்​தி​யாளர்​களைச் சந்​தித்​து கூறிய​தாவது: நான் முதல்​வர் பதவியை ராஜி​னாமா செய்​யப்​போவ​தில்​லை. நாங்​கள் இந்​தத் தேர்​தலில் தோற்​க​வில்​லை; மாறாக எங்​கள் வெற்றி களவாடப்​பட்​டது. நான் ராஜி​னாமா செய்ய மாட்​டேன். அடுத்​தக்​கட்ட நகர்வு குறித்து எனது கட்​சி​யினர் ஒன்​றுகூடி ஒரு​மித்த முடிவை எட்​டு​வோம்.

தேர்​தலில் பெரியள​வில் வன்​முறை நடந்​துள்​ளது. காவல்​துறை, தேர்​தல் ஆணை​யம் என அமைப்பு ரீதியி​லான தாக்​குதல்​கள் நடந்​துள்​ளன. இந்​தத் தேர்​தலில் திரிண​மூல் காங்​கிரஸ் தார்​மிக வெற்றி பெற்​றிருக்​கிறது. எங்​களு​டைய போட்டி பாஜக​வுக்கு எதி​ரானது அல்ல. அது தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ரானது. இந்​தத் தேர்​தலில் அவர்​கள் நியாய​மான வெற்​றியைப் பெற்​றிருப்​பார்​கள் என்​றால் நான் புலம்​பி​யிருக்க மாட்​டேன்.

வாக்​காளர் பட்​டியலிலேயே அவர்​கள் குளறு​படிகளை ஆரம்​பித்​து​விட்​டனர். 90 லட்​சம் வாக்​காளர்​கள் பெயர்​களை நீக்​கி​யிருந்​தனர். நாங்​கள் நீதி​மன்​றம் சென்று 32 லட்​சம் வாக்​காளர்​கள்பெயரை மீட்​டெடுத்​தோம். அதன் பின்​னர் 7 லட்​சம் வாக்​காளர்​கள் பெயர்​கள் இணைக்​கப்​பட்​டன. அது எப்​படி என்று இது​வரை யாருக்​கும் தெரி​யாது.

நான் என் வாழ்​நாளில் இத்​தகைய தேர்​தலை சந்​தித்​த​தில்​லை. 2004-க்​குப் பின்​னர் இது​போன்ற அராஜகங்​களைப் பார்த்​ததும் இல்​லை. வாக்கு எண்​ணிக்​கை​யின் போது பரவலாக வன்​முறைச் சம்​பவங்​கள் நடந்​தன. முதல் சுற்று முடி​விலேயே ஊடகங்​கள் பல பாஜக இத்​தனை இடங்​களைப் பெறக்​கூடும் என்று கூறின. அதன் பின்​னர் வாக்​குச்​சாவடிகளை பாஜக கைக்​குள் கொண்டு வந்​தது.

காவல் துறை​யும், மத்​தி​யப் படைகளும் என்​னை​ சுதந்​திர​மாக நடமாட​விட​வில்​லை. என்னை அடிவ​யிற்​றி​லும், பின்​புறத்​தி​லும் எட்டி உதைத்​தனர். என்னை வாக்கு எண்​ணும் மையத்​திலிருந்து தூக்கி வீசினர். ஒரு பெண்​ணான என்​னிடம் அவர்​கள் தகாத முறை​யில் நடந்து கொண்​டனர். ஆனால் இதைப் பற்​றியெல்​லாம் நாங்​கள் யாரிடம் புகார் செய்​வோம். எல்லா அமைப்​பு​களும் பாஜக​வால் விலைக்கு வாங்​கப்​பட்​டு​விட்​டன.

ஆனாலும், இந்​தத் தோல்​வியி​லிருந்து நாங்​கள் மீண்​டெழு​வோம். நாங்​கள் புலியைப் போல் போராடினோம்; இனி​யும் போராடு​வோம். எனக்கு நாற்​காலி, அதி​காரம் பற்றி கவலை​யில்​லை. எனக்கு மக்​கள் மீது​தான் அக்​கறை. இண்​டியா கூட்​ட​ணித் தலை​வர்​கள் தேர்​தல் முடிவுக்​குப் பின்​னர் என்​னுடன் பேசினர்.

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, ராகுல் காந்​தி, டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வால், மகா​ராஷ்டிர முன்​னாள் முதல்​வர் உத்​தவ் தாக்​கரே, ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன், பிஹார் முன்​னாள் துணை முதல்​வர் தேஜஸ்வி யாதவ் என்னை அழைத்​துப் பேசினர். அவர்​கள் எல்​லோரும் என்னை ஆதரிக்​கின்​றனர். அகிலேஷ் யாதவ் நாளை வரு​கிறார். பின்​னர் ஒவ்​வொரு​வ​ராக எனைக் காண வரு​வார்​கள்.

இனிமேல் எனது கவனம் இண்​டியா கூட்​ட​ணியை வலிமைப்​படுத்​து​வ​தில் தான் இருக்​கும். இப்​போது எனக்கு முதல்​வர் நாற்​காலி கட்​டுப்​பாடு​கள் இல்​லை. நான் இனி ஒரு சாமானியர். சுதந்​திரப் பறவை. தேர்​தல் வன்​முறை​கள், குளறு​படிகள் குறித்து ஆராய உண்மை கண்​டறி​யும் குழு ஒன்றை அமைத்​துள்​ளேன். 10 பேர் கொண்ட இந்​தக் குழு, வன்​முறை நடந்த இடங்​களுக்கு எல்​லாம் சென்று ஆய்வு செய்​யும்.

ஆனால் பாஜக​வுக்கு ஒரு விஷ​யத்தை எச்​சரிக்​கை​யாக சொல்ல விரும்​பு​கிறேன். நீங்​கள் மத்​தி​யில் அதி​காரத்​தில் இல்​லாத போது இதே மாதிரி​யான நிலை​மையை எதிர்​கொள்ள நேரிடும். உங்​களது தேவையெல்​லாம் நாடு முழு​வதும் ஒற்​றைக் கட்சி ஆட்​சி. எதிர்க்​கட்​சியே இருக்​கக் கூடாது என்று நினைக்​கிறீர்​கள். இதுவே தொடர்ந்​தால் உங்​களது பிம்​பம் உடைபடும். ஜனநாயகத்​தின் மாண்பை மறந்​து​விட்​டீர்​கள். நாங்​கள் தொடர்ந்து போராடு​வோம். மிரட்​டலுக்கு அஞ்​ச​மாட்​டோம். இவ்​வாறு மம்தா பானர்ஜி தெரிவித்​தார்.