惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
U
Unit 42
Google DeepMind News
Google DeepMind News
博客园 - 司徒正美
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
云风的 BLOG
云风的 BLOG
T
Tailwind CSS Blog
G
Google Developers Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
罗磊的独立博客
D
DataBreaches.Net
T
The Blog of Author Tim Ferriss
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
MyScale Blog
MyScale Blog
N
Netflix TechBlog - Medium
Microsoft Security Blog
Microsoft Security Blog
GbyAI
GbyAI
P
Proofpoint News Feed
Jina AI
Jina AI
B
Blog RSS Feed
腾讯CDC
阮一峰的网络日志
阮一峰的网络日志
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்ச...
2026-05-03 · via hindutamil

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். உடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர்.

Updated on

1 min read

மதுரை: தமிழகத்​தில் தேசிய ஜனநாயகக் கூட்​டணி பெரும்​பான்​மை​யைப் பெற்று ஆட்சி அமைக்​கும் என மதுரை​யில் நடை​பெற்ற பாஜக ஆலோ​சனைக் கூட்​டத்​தில் மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் உறு​தி​யுடன் தெரி​வித்​தார்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்கு எண்​ணிக்கை நாளை (மே 4) நடை​பெறு​வதை முன்​னிட்​டு, பாஜக வாக்கு எண்​ணிக்கை முகவர்​களுக்​கான ஆலோ​சனைக் கூட்​டம், மதுரை விமான நிலை​யம் பின்​புறம் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் நேற்று நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​துக்​கு, மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை வகித்​தார். மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் சிறப்பு அழைப்​பாள​ராகப் பங்​கேற்று கட்​சி​யினருக்கு ஆலோ​சனை வழங்​கி​னார்.

இக்​கூட்​டத்​தில், தென் மாவட்​டத்​தில் உள்ள 17 பாஜக வேட்​பாளர்​கள், வாக்கு எண்​ணிக்கை தலைமை முகவர்​கள், அனைத்து வாக்கு எண்​ணிக்கை முகவர்​கள் என 17 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களைச் சேர்ந்​தவர்​கள் பங்​கேற்​றனர். பின்​னர், மத்​திய அமைச்​சர் பியூஷ் கோயல் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தேசிய ஜனநாயகக் கூட்​டணி உறு​தி​யான வெற்​றியை நோக்​கிச் சென்​று​கொண்​டிருக்​கிறது.

தமிழகத்​தின் வளர்ச்​சிக்​காக உழைக்​கக்​கூடிய, தமிழ் மக்​களின் பெருமை மற்​றும் கலாச்​சா​ரத்​தைப் பாது​காக்​கக்​கூடிய, பெண்​களின் நலன் மற்​றும் கண்​ணி​யத்தை உறுதி செய்​யக்​கூடிய ஒரு அரசாங்​கம் அமை​யும். இந்த வெற்​றி​யில் எனக்​குப் பெரிய நம்​பிக்கை உள்​ளது.

தேர்​தலுக்​குப் பிந்​தைய கருத்​துக் கணிப்​பாளர்​கள், அவர்​கள் தங்​களது வேலை​யைச் செய்​கின்​றனர். நாங்​கள் எங்​கள் வேலை​யைச் செய்​கிறோம். ஒட்​டுமொத்த தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் குடும்​ப​மும் மிகச்​சிறந்த பிரச்​சா​ரத்தை மேற்​கொண்​டது. நாம் ஒரு வசதி​யான பெரும்​பான்​மை​யைப் பெற்று ஆட்சி அமைப்​போம். இதில் ஏதேனும் சந்​தேகம் இருந்​திருந்​தால், நான் டெல்​லியி​லிருந்து இவ்​வளவு தொலைவு வந்​திருக்க மாட்​டேன் என்​றார்.

மையத்​தில் சர்ச்சை: மதுரை விமான நிலை​யம் பின்​புறம் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் நேற்று முதுகலை மருத்​து​வப் படிப்பு மாணவர்​களுக்​கான நீட் தேர்வு நடை​பெற்​றது. இதே வளாகத்​தில், பாஜக கட்சி ஆலோ​சனைக் கூட்​டமும் நடை​பெற்​ற​தால், கல்​லூரி நிர்​வாகத்​திடம் மாணவர்​களின் பெற்​றோர் கடும் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டனர். இது​போன்ற கட்சி நிகழ்ச்​சிகளை நடத்த அரசு அனு​ம​தித்​திருப்​பது வேதனை அளிப்​ப​தாக பெற்​றோர்​கள் தெரி​வித்​தனர்.