惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

GbyAI
GbyAI
The GitHub Blog
The GitHub Blog
小众软件
小众软件
美团技术团队
博客园 - 司徒正美
G
Google Developers Blog
Blog — PlanetScale
Blog — PlanetScale
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
大猫的无限游戏
大猫的无限游戏
罗磊的独立博客
Recent Announcements
Recent Announcements
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
D
Docker
J
Java Code Geeks
Last Week in AI
Last Week in AI
V
Visual Studio Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
P
Proofpoint News Feed
V
V2EX
C
Check Point Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
MyScale Blog
MyScale Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 03 மே 2026
2026-05-03 · via hindutamil

Updated on

2 min read

மேஷம்: முன்கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். பங்குதாரர் ஆலோசனைகளை ஏற்கவும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

ரிஷபம்: பணவரவால் பழைய கடனை அடைப்பீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனச் செலவு குறையும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

மிதுனம்: தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுபநிகழ்ச்சி கை கூடி வரும். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள். வெளியூர் பயணம் திருப்தி தரும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

கடகம்: வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகமாகும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்று தீர்ப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.

சிம்மம்: பூர்வீக சொத்தில் மாற்றம் செய்வீர். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தங்கும். செலவுகள் கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயல்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும்.

கன்னி: பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வருந்த வேண்டாம். குடும்பத்தில் நல்லது நடக்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர். பிள்ளைகளின் ஆர்வம் படிப்பில் திரும்பும். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பணப் பற்றாக்குறை நீங்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை ஏற்று செயல்படவும். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வரக்கூடும். கையிருப்பு கரையும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பழைய சரக்கு தேங்கும். புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு: புதியவர்களின் அறிமுகம் கிட்டும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரியின் ஆதரவு உண்டு. அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

மகரம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வாகனம் செலவு வைக்கும். வியாபார ரீதியாக அவசர முடிவுகள் வேண்டாம். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கும்பம்: உறவினர், பழைய நண்பர்கள் தேடி வருவர். தடைபட்ட அரசாங்க வேலைகள் முடியும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் பங்கேற்பீர். பணவரவு உண்டு. வியாபாரத்தில் லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

மீனம்: பூர்வீக சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். கூட்டுத் தொழிலில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர். பங்குதாரரின் ஆலோ சனையை நிராகரிக்காதீர்கள். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.