惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
GbyAI
GbyAI
Stack Overflow Blog
Stack Overflow Blog
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
The Cloudflare Blog
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
F
Fortinet All Blogs
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 聂微东
L
LangChain Blog
云风的 BLOG
云风的 BLOG
Jina AI
Jina AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
I
InfoQ
大猫的无限游戏
大猫的无限游戏
MyScale Blog
MyScale Blog
人人都是产品经理
人人都是产品经理
小众软件
小众软件
量子位
The GitHub Blog
The GitHub Blog
博客园 - 【当耐特】

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
அமெரிக்கா - ஈரான் போரின் தாக்கத்தால் வணிக சிலிண்டர் விலை ...
2026-05-02 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி/ சென்னை: ஈரான் போர்ச் சூழலால் சர்வதேச சந்தையில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு ரூ.993 உயர்த்தியுள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் வணிக சிலிண்டர் விலை 81 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், ஓட்டல்களில் உணவு மற்றும் தேநீர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதால் உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு நேற்று ரூ.993 வரை உயர்த்தியுள்ளது.

இதனால், சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ. 990.50 அதிரிகரித்து ரூ.3,237-க்கு விற்பனையாகும். தலைநகர் டெல்லியில் ரூ.2,078.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர், இனி ரூ.3,071.50-க்கு விற்பனை செய்யப்படும். மும்பையில் ரூ.2,031-ல் இருந்து ரூ.3,024 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் போர் தொடங்கியதில் இருந்து வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்படுவது இது 3-வது முறை. மார்ச் மாதத்தில் ரூ.144, ஏப்ரல் 1-ல் ரூ.200 என உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் விலை அதிகரித்துள்ளது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள் மற்றும் சிறு தொழில்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த சுமையை மக்கள் மீது சுமத்தும் வகையில் உணவுப் பண்டங்கள், தேநீர் விலை மற்றும் உணவுப் பொருள் டெலிவரி கட்டணத்தை ஓட்டல்கள் மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து பொருளாதாரப் பேராசிரியர் விகாஸ் பிரகாஷ் சிங் கூறும்போது, “ஈரான் போரின் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்று தெரிகிறது.

உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை மேலும் உயர்ந்து, பில்கள் அதிர்ச்சி தரக்கூடும். சிறிய சிலிண்டர்களை நிரப்ப முடியாத நிலை, ஏழை எளிய மக்களை கவலையடையச் செய்துள்ளது” என்றார்.

வீட்டு சிலிண்டர் விலை உயரவில்லை: வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ள போதிலும், வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்படவில்லை. இது சாமானிய மக்களுக்குப் பெரும் நிவாரணமாகக் கருதப்படுகிறது. அதே நேரம், சர்வதேச விமான எரிபொருள்விலை 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதால் சர்வதேச விமான பயணத்துக்கான கட்டணம் கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

உலகளாவிய எண்ணெய் விலை உயர்ந்த போதிலும், சுமார் 4 ஆண்டுகளாக பெட்ரோல் விலை மாற்றமின்றி இருப்பதால், அரசுக்குச் சொந்தமான எரிபொருள் நிலையங்கள், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.20 மற்றும் டீசலுக்கு ரூ.100 நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய சூழலில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 முதல் ரூ.28 வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக சந்தைஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தேர்தலுக்கு முன்பே கணித்தது

போல, தேர்தல் முடிந்ததும் சமையல் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த

போது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசியப் போர் என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சங்க நிர்வாகிகள் கருத்து: சென்னை ஓட்டல் அசோசியேஷன் தலைவர் எம்.ரவி: மிகவும் அதிகமான விலையேற்றம் இது. இதனால் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே பெரும்பாலான இடங்களில் 50 சதவீத சிலிண்டர்கள் தான் கிடைக்கின்றன. இந்நிலையில் இல்லாத சிலிண்டருக்கு இவ்வளவு விலை கொடுப்பது நியாயமற்றது. ஏற்கெனவே வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் தமிழகம் முழுவதும் 25 சதவீத சிறிய கடைகள் மூடப்பட்ட நிலையில், அதில் இருந்து தற்போது தான் மீண்டு வந்து கொண்டிருந்தோம். இந்த நேரத்தில் மீண்டும் விலையேற்றம் அதிர்ச்சி அளிக்கிறது.

சென்னை பெருநகர டீக்கடை உரிமையாளர் சங்க செயலாளர் சுந்தரம்: அமெரிக்கா - ஈரான் போர் சூழல் நிலவி வருவதால் டீக்கடைகளுக்கு வணிக சிலிண்டர்கள் விநியோகம் செய்வதை ஏஜென்சிகள் நிறுத்திவிட்டன. ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் கொடுத்துகள்ள சந்தையில்தான் வணிக சிலிண்டர் வாங்கி வியாபாரம் செய்து வருகிறோம். இவ்வாறு ஏஜென்சிகளேகூட கூடுதல் விலைக்கு சிலிண்டர்களை விற்று அதிக லாபம் பார்க்கின்றனர். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஏற்கெனவே சென்னையில் 10 சதவீத டீக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. ஓட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து விட்டது. இந்த சூழலில், மீண்டும் ஆயிரம் ரூபாய் விலையேற்றம் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.