惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

WordPress大学
WordPress大学
H
Help Net Security
Jina AI
Jina AI
V
V2EX
G
Google Developers Blog
B
Blog
GbyAI
GbyAI
U
Unit 42
爱范儿
爱范儿
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
博客园 - 三生石上(FineUI控件)
宝玉的分享
宝玉的分享
小众软件
小众软件
D
DataBreaches.Net
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
博客园 - Franky
博客园 - 聂微东
The Cloudflare Blog
I
InfoQ
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
Hugging Face - Blog
Hugging Face - Blog
大猫的无限游戏
大猫的无限游戏

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள் @ ஏப்.30 - மே 6
2026-04-29 · via hindutamil

Updated on

4 min read

துலாம்:

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- பஞ்சம ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சனி - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சாரம் இருக்கிறார். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்கள் சாதகமாக நடைபெறும். பண தேவை உண்டாகும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் டென்ஷனும் வீண் அலைச்சலும் இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமதம் ஏற்படலாம். பண வரத்து எதிர்பார்த்ததை விட குறையக் கூடும்.

கடன் விஷயங்களை தள்ளிபோடுவது நல்லது. புதிய நபர்களுக்கு பொருட்களை சப்ளை செய்யும் போது கவனம் தேவை. எதைப் பேசுவதாக இருந்தாலும் பேச்சில் நிதானம் தேவை. வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் டென்ஷன் உண்டாகலாம். பெண்களுக்கு எதிர்பார்க்கும் தகவல் தாமதப்படலாம்.

கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் அகலும். அரசியல்வாதிகளுக்கு சிக்கல்கள் தீர்வதில் இருந்த தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். பின் தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.

சுவாதி: இந்த வாரம் உங்களுடைய உடல் நலத்தை பொறுத்தவரை உஷ்ணம் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப் புழக்கம் இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன் விவாதங்களைத் தவிர்க்கவும். பிள்ளைகள் பாராட்டைப் பெற்று பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தருவார்கள்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் தம்பதிகள் இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை.

பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

விருச்சிகம்:

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மன நிறைவு உண்டாகும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும்.

பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பெண்களுக்கு பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

கலைத்துறையினருக்கு யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் ஒருமுறைக்கு இரு முறை விசாரித்து பொருட்களை வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் அன்னியோன்னியமாக இருப்பர். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும். மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும்.

அனுஷம்: இந்த வாரம் வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக்குவீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு. இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை பலம் ஏற்படும்.

கேட்டை: இந்த வாரம் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம்.

பரிகாரம்: செவ்வாய் கிழமையில் நவகிரகத்தில் செவ்வாய்க்கு தீபம் ஏற்றி வணங்க எல்லா காரியங்களும் வெற்றி பெறும். மனத் துணிவு உண்டாகும்.

தனுசு:

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சனி - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேல் அதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்தில் இருந்து வந்த இறுக்க நிலை மாறும். பெண்களுக்கு காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

கலைத் துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

மூலம்: இந்த வாரம் அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். இதுவரை தொல்லை கொடுத்துவந்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

பூராடம்: இந்த வாரம் எதிலும் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. வெளிநாடு செல்லும் திட்டம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் கெட்ட கனவுகள் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களை விட்டு விலகி செல்லலாம். மனதில் நிலையான எண்ணம் இருக்காது. பண நெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கு பதில் விமர்சனம் கிடைக்கும்.

பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர மனதில் தைரியம் கூடும். காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

<div class="paragraphs"><p><em>இந்த வார கிரகங்களின் நிலை</em></p></div>

இந்த வார கிரகங்களின் நிலை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.