



























Updated on:
சென்னை: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஓம்’ என தலைப்பு வைத்துள்ளது படக்குழு. பிரத்யேக டைட்டில் டீசர் மூலம் இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தை வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். இதில் தனுஷ் உடன் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த படத்தை இயக்குகிறார். இதில் அவருடன் ஏற்கெனவே அமரன் படத்தில் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவி நடிக்கிறார். தனுஷ், சாய் பல்லவி இணைந்து ‘மாரி 2’ படம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சுமார் 2.25 நிமிடம் ரன் டைம் கொண்ட டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை குறித்த கதை அம்சத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் காடும் காடு சார்ந்த இடமும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படம் வெவ்வேறு பாகங்களாக வெளியாகும் என தெரிகிறது. அதை குறிப்பிடும் வகையில் ‘உதிரம்: தி பிளேட் வுட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。