




















Updated on:
வருண் தவான், மிருணாள் தாக்குர், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்துள்ள, இந்தி ரொமான்டிக் காமெடி திரைப்படம், ‘ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை’.
டேவிட் தவான் இயக்கியுள்ள இப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக இருக்கிறது. 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘பிவி நம்பர் 1’ என்ற படத்தில் இடம்பெற்ற “சுன்னரி சுன்னரி” மற்றும் “இஷ்க் சோனா ஹை” ஆகிய பாடல்களை அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்துள்ளனர்.
‘பிவி நம்பர் 1’ படத்தை இயக்கியது டேவிட் தவான் என்றாலும் அப்படத்தைத் தயாரித்த பூஜா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் வாசு பகனானி, அனுமதியின்றி இப்பாடலைப் படத்தில் பயன்படுத்தியதாகக் கூறி, மும்பை உயர் நீதிமன்றத்தில் ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இயக்குநர் டேவிட் தவான், டிப்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் தயாரிப்பாளர்கள் ரமேஷ், குமார் தவுரானி ஆகியோருக்கு எதிராக இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்தப் பாடல்களின் ஆடியோ உரிமைகள் மட்டுமே டிப்ஸ் மியூசிக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதாகவும், அதன் வீடியோ மற்றும் மறு உருவாக்க உரிமைகளை தங்கள் நிறுவனமே வைத்துள்ளதாகவும் பக்னானி அம்மனுவில் கூறியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டை நிறுத்த வேண்டும் என்றும் அந்தப் பாடல்களைப் படத்திலிருந்தும், அனைத்து விளம்பரங்களில் இருந்தும் நீக்க வேண்டும் என்றும் இந்த கோரிக்கைகளை ஏற்கத் தவறினால், கூடுதலாக ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。