惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
博客园 - 聂微东
J
Java Code Geeks
Engineering at Meta
Engineering at Meta
Jina AI
Jina AI
D
Docker
B
Blog
S
SegmentFault 最新的问题
宝玉的分享
宝玉的分享
D
DataBreaches.Net
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Y
Y Combinator Blog
N
Netflix TechBlog - Medium
月光博客
月光博客
F
Fortinet All Blogs
爱范儿
爱范儿
H
Help Net Security
腾讯CDC
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
WordPress大学
WordPress大学
The Cloudflare Blog
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
U
Unit 42

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
திருவிக நகரில் ரவுடிகளை இறக்கி பணப்​ பட்டுவாடா: பொற்கொடி ...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: திருவிக நகர் தொகு​தி​யில் ரவுடிகளை இறக்கி பணப்​ பட்​டு​வாடா செய்​த​தாக பொற்கொடி ஆம்​ஸ்ட்​ராங் மீது திமுக வேட்​பாளர் புகார் மனு அளித்​துள்​ளார்.

திருவிக நகர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங், வெளியூர்​களில் இருந்து ரவுடிகளை இறக்கி வாக்​காளர்​களை மிரட்​டு​வ​தாக​வும், போலி டோக்​கன்​கள் மற்​றும் பணம் விநி​யோகித்து தேர்​தல் நடத்தை விதி​களை மீறு​வ​தாக​வும் குற்​றம்​சாட்​டி, அத்​தொகு​தி​யின் திமுக வேட்​பாளர் கே.எஸ்​.ர​விச்​சந்​திரன் இந்​திய தலை​மைத் தேர்​தல் ஆணை​யர், தமிழக தலை​மைத் தேர்​தல் அதி​காரி மற்​றும் சென்னை காவல் ஆணை​யர் ஆகியோ​ருக்கு புகார் மனு அளித்​துள்​ளார்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: திருவிக நகர் தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் பொற்​கொடி ஆம்​ஸ்ட்​ராங், தேர்​தல் நடத்தை விதி​களை முற்​றி​லு​மாக மீறி செயல்​பட்டு வரு​கிறார்.

குறிப்​பாக வெளி மாவட்​டங்​களி​லிருந்து ரவுடி கும்​பலை தொகு​திக்​குள் இறக்​கி, அவர்​கள் மூலம் மற்ற வேட்​பாளர்​களை பிரச்​சா​ரம் செய்​ய​வி​டா​மல் மிரட்டியதுடன், பெரம்​பூர் பாரதி நகரில் உள்ள திருமண மண்​டபத்​தில் இந்த வெளியூர் நபர்​களை தங்​க​வைத்​து, அங்​கிருந்து பொது​மக்​களுக்கு பணப்​பட்​டு​வாடா செய்து வரு​கிறார்.

அதி​முக வேட்​பாளர் தரப்​பில் 71, 72-வது வார்​டு​களில் வாக்​காளர் குடும்​பங்​களுக்கு மாதந்​தோறும் ரூ.10 ஆயிரம் மற்​றும் குல​விளக்கு திட்​டத்​தின் கீழ் ரூ.2 ஆயிரம் வழங்​கப்​படும் என அதி​முக சின்​னம் அச்​சிடப்​பட்ட போலி செக் டோக்​கன்​கள் விநி​யோகிக்​கப்​பட்டு மக்​கள் தவறாக வழிநடத்​தப்​படு​கிறார்​கள்.

தண்​ணீர் குடங்​கள் மூல​மாக ரகசி​ய​மாக பணப்​பட்​டு​வாடா நடை​பெற்​றுள்​ளது. நீதி​மன்ற விசா​ரணை​யில் உள்ள தனது கணவர் மரண வழக்கை பயன்​படுத்​தி, தனது 3 வயது குழந்​தை​யுடன் பிரச்​சா​ரம் செய்து பெண் வாக்​காளர்​களிடம் அதி​முக வேட்​பாளர் அனு​தாபம் தேட முயல்​கிறார்.

அதே​போல் தொகுதி முழு​வதும் பொது இடங்​கள், மின்​சா​ரப் பெட்​டிகள் மற்​றும் அரசு சுவர்​களில் தேர்​தல் ஆணை​யத்​தின் அனு​ம​தி​யின்றி போஸ்​டர்​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன. பிரச்​சா​ரத்​துக்கு உரிய அனு​ம​தி​யின்றி வெளி​மாவட்ட வாக​னங்​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

திருவிக நகர் தொகு​தி​யில் தேர்​தல் நேர்​மை​யாக​வும், சுதந்​திர​மாக​வும் நடை​பெறு​வதை உறுதி செய்ய, அடுத்த 48 மணி நேரத்​துக்​குள் தொகு​தி​யில் தங்​கி​யிருக்​கும் வெளியூர் நபர்​களை​யும், ரவுடிகளை​யும் அப்​புறப்​படுத்த வேண்​டும். அதி​முக வேட்​பாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.