




















தெலுங்கு நடிகரான சர்வானந்த், ‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘கணம்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ‘பைக்கர்’ என்ற படம் சமீபத்தில் வெளியானது.
இவர், கடந்த 2023ம் ஆண்டு தனது காதலி ரக் ஷிதா ரெட்டியை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமண வரவேற்பில் சிரஞ்சீவி, நாக சைதன்யா உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் கலந்துகொண்டனர். இந்த தம்பதிக்கு கடந்த 2024ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.
சமீபகாலமாக இருவரும் விவாகரத்து பெறும் முடிவில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதை உறுதி செய்யும் வகையில், இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் திருமணப் புகைப்படங்களை நீக்கியுள்ளனர். விரைவில் விவாகரத்து மனு தாக்கல் செய்ய உள்ளதாகத் தெலுங்கு சினிமாவில் கூறி வருகின்றனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。