惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

I
InfoQ
S
SegmentFault 最新的问题
N
Netflix TechBlog - Medium
B
Blog
Jina AI
Jina AI
人人都是产品经理
人人都是产品经理
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
V
V2EX
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
大猫的无限游戏
大猫的无限游戏
U
Unit 42
J
Java Code Geeks
IT之家
IT之家
aimingoo的专栏
aimingoo的专栏
博客园 - 叶小钗
T
The Blog of Author Tim Ferriss
博客园 - 【当耐特】
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
腾讯CDC

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பஞ்சாப் கிங்ஸ் அணியை சமாளிக்குமா டெல்லி? - அருண் ஜேட்லி ம...
2026-04-25 · via hindutamil

Updated on

2 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் இன்று பிற்​கல் 3.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

அக்​சர் படேல் தலை​மையி​லான டெல்லி கேப்​பிடல்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 3 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 47 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யிடம் தோல்வி அடைந்​திருந்​தது.

டெல்​லி​யின் மிகப்​பெரிய கவலையே அவர்​களின் சீரற்ற பேட்​டிங் தான். கே.எல்​.​ராகுல், டேவிட் மில்​லர், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், சமீர் ரிஸ்வி ஆகியோர் அவ்​வப்​போது தங்​களின் பங்​களிப்பை அளித்​தா​லும், ஒரு குழு​வாகச் சேர்ந்து செயல்பட அந்த அணி தவறி உள்​ளது. தொடக்க வீர​ரான நிசங்​கா​வின் ஆட்​டம் டெல்லி அணிக்கு பலவீன​மாக மாறி​யுள்​ளது. ஆட்​டத்தை சிறப்​பாக தொடங்​கி​னாலும் அதை பெரிய ஸ்கோ​ராக மாற்ற அவர் தவறி​விடு​கிறார். இதனால் மிடில் ஆர்​டர் பேட்​டர்​கள் மீதான அழுத்​தம் அதி​கரிக்​கிறது.

குறிப்​பாக, பவர்​பிளே ஓவர்​களில் நிசங்கா விக்​கெட்டை இழப்​பது அல்​லது ரன் வேகத்தை உயர்த்​தத் தவறு​வது, பின்​வரிசை​யில் வரும் வீரர்​களை இக்​கட்​டான சூழ்​நிலைக்​குத் தள்​ளுகிறது. இதுஒரு புறம் இருக்க கேப்​டன் அக்​சர் படேல் கடந்த போட்​டி​யில் களத்​தில் கையாண்ட சில உத்​தி​கள் சார்ந்த கடும் விமர்​சனத்​திற்கு உள்​ளாயின. அதிரடி​யாக ஆடிக்​கொண்​டிருந்த அபிஷேக் சர்​மா​விற்கு எதி​ராக, அக்​சர் படேல் பகு​திநேர ஆஃப்​-ஸ்​பின்​ன​ரான நிதிஷ் ராணாவையே தொடர்ந்து பந்​து​வீச வைத்​தார். ஆனால், ராணா​வால் எந்​தவொரு தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்த முடிய​வில்​லை.

அதே சமயம் குல்​தீப் யாதவ் போன்ற முன்​னணி பந்​து​வீச்​சாளர்​களை சிறப்​பாக கையாள​வில்​லை. டெல்லி அணி​யின் இந்​தச் செயல்​பாடு நெருக்​கடி​யான நேரங்​களில் அவர்​களிடம் மாற்​றுத் திட்​டம் ஏது​மில்லை என்​ப​தை​யும், சூழலுக்கு ஏற்ப மாறும் தன்​மை​யும் அவர்​களிடம் குறை​வாக இருப்​பதை வெளிச்​சம் போட்​டுக் காட்​டி​யுள்​ளது. பேட்​டிங் வரிசையை விட பந்​து​வீச்​சுப் பிரிவு சற்று சிறப்​பாகச் செயல்​பட்​டிருந்​தா​லும், எதிரணி வீரர்​களை முழு​மை​யாகக் கட்​டுப்​படுத்​தத் தேவை​யான ஆக்​ரோஷ​மும் துல்​லிய​மும் அவர்​களிடம் குறை​வாகவே உள்​ளது.

ஸ்ரேயஸ் ஐயர் தலை​மையி​லான பஞ்​சாப் கிங்ஸ் அணி 6 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, ஒரு முடி​வில்​லாத ஆட்​டம் என 11 புள்​ளி​களை குவித்து பட்​டியலில் முதலிடத்​தில் உள்​ளது. நடப்பு தொடரில் அந்த அணி மட்​டுமே தோல்​வியை சந்​திக்​காமல் வலம் வரு​கிறது. பஞ்​சாப் அணி தனது கடைசி ஆட்​டத்​தில் லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதி​ராக 254 ரன்​களை வேட்​டை​யாடி இருந்​தது. நடப்பு சீசனில் இது அதி​கபட்ச ஸ்கோ​ராக​வும் அமைந்​திருந்​தது.

நடப்பு சீசனில் தொடக்க வீர​ரான பிரப்​சிம்​ரன் சிங் 211 ரன்​களைக் குவித்​துள்​ளார். மற்​றொரு தொடக்க வீர​ரான பிரியன்ஸ் ஆர்யா 211 ரன்​களும், கூப்​பர் கானொலி 223 ரன்​களை​யும் வேட்​டை​யாடி உள்​ளனர். ஸ்ரேயஸ் ஐயர் 182.45 ஸ்டிரைக் ரேட்​டில் 208 ரன்​கள் விளாசி உள்​ளார். சிறந்த பார்​மில் உள்ள இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்​படக்​கூடும். பஞ்​சாப் அணி​யின் பந்​து​வீச்​சாளர்​களும் ஒருங்​கிணைந்த குழு​வாகச் சிறப்​பாகச் செயல்​பட்டு வரு​கின்​றனர்.

அர்​ஷ்தீப் சிங், யுவேந்​திர சாஹல், மார்கோ யான்​சன், விஜய்​கு​மார் வைஷாக், சேவியர் பார்ட்​லெட் ஆகியோர் தொடர்ந்து சிறப்​பான பங்​களிப்பை அளித்து வருகின்றனர். புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் இருக்​கும் பஞ்​சாப் அணி​யின் வெற்றி வேட்​டையை தடுத்து நிறுத்​தி, தங்​கள் அணி​யின் பயணத்தை மீண்​டும் சரி​யான பாதைக்​குக் கொண்​டுவர வேண்​டுமெனில் டெல்லி கேப்​பிடல்​ஸ் அணி மிகச்​சிறந்​த ஆட்​டத்​தை வெளிப்படுத்த வேண்​டியது அவசிய​மாகும்.