惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

The Cloudflare Blog
U
Unit 42
F
Fortinet All Blogs
雷峰网
雷峰网
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
月光博客
月光博客
Y
Y Combinator Blog
罗磊的独立博客
V
Visual Studio Blog
大猫的无限游戏
大猫的无限游戏
J
Java Code Geeks
量子位
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
爱范儿
爱范儿
B
Blog RSS Feed
aimingoo的专栏
aimingoo的专栏
有赞技术团队
有赞技术团队
T
Tailwind CSS Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
L
LangChain Blog
I
InfoQ
博客园 - 叶小钗
博客园 - 聂微东
Last Week in AI
Last Week in AI

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
மேகேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அ...
தமிழினி · 2026-06-21 · via hindutamil

Updated on: 

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தனி நடுவர் மன்றம் குறித்த பகுதிகளை உரிய பேரவை விதிகளை பின்பற்றி நீக்கி விட்டு, அதன்பிறகே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதால் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட அரசினர் தீர்மானத்தில் சேர்க்கப்பட்டிருப்பதற்கு உழவர் அமைப்புகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேகேதாட்டு அணை சிக்கலில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருக்கும் நிலையில், அதை வலியுறுத்தாமல் மத்திய அரசை மத்தியஸ்தம் செய்யக் கோருவது தமிழகத்தின் உரிமைகளை நாமே அடகு வைப்பதாக அமைந்து விடும்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தீர்மானம் ஒன்றை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். மேகேதாட்டு அணைக்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் என எவ்வித அனுமதியும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்றும், காவிரி படுகையில் எவ்வித நீர் தேக்கத்தையும் கர்நாடக அரசு கட்டக் கூடாது என்று அம்மாநிலத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பா.ம.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீர்மானத்திற்கு முழு ஆதரவு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசும் போது,‘‘மேகேதாட்டு பிரச்னைகளுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்த வேண்டும்’’ என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் விஜய் பேரவைத் தலைவரை கேட்டுக் கொண்டதையடுத்து மேகேதாட்டு அணை சிக்கலுக்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் சேர்த்து அனைத்துக் கட்சி ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டுவதை என்ன விலை கொடுத்தாவது தடுத்து நிறுத்த வேண்டும்; மேகேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும், சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த 5 கோடி மக்களுக்கு குடிநீர் கிடைக்காது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். இதற்காக அரசுத் தரப்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து சரியான சட்ட, அரசியல் முயற்சிகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கும்.

அதே நேரத்தில், மேகேதாட்டு அணை விவகாரத்திற்காக தனி நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற அரசின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. மேகேதாட்டு அணை சிக்கலுக்கு தனி நடுவர் மன்றம் தான் தீர்வு என்று எந்த அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை கூறினார்; அந்த ஆலோசனையை முதல்வர் விஜய் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொண்டார் என்பது தெரியவில்லை.

மேகேதாட்டு அணை சிக்கலைத் தீர்க்க ஆக்கப்பூர்வமான யோசனை எதையாவது வழங்க வேண்டும் என்ற ஆர்வத்தில், அதனால் ஏற்படும் பின்னடைவுகள் குறித்து அறியாமல், எதிர்க்கட்சித் தலைவர் இந்த யோசனையை வழங்கியிருக்கலாம்; அவை நாகரிகம் மற்றும் ஜனநாயக மாண்புகளை மதித்து இந்த யோசனையை முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால், தனி நடுவர் மன்றம் நிலைமை மேலும் மோசமாக்கும் என்பதே எதார்த்தம்.

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அளித்தத் தீர்ப்பின் 4 ஆம் தொகுதியின் 173, 174, 175 ஆகிய பக்கங்களில் கர்நாடகத்தின் பாசனப் பரப்பு தொடர்பாக கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர், சுவர்ணவதி, அக்ராவதி உள்ளிட்ட அணைகளின் நீரைக் கொண்டு செயல்படுத்தப்படும் 28 திட்டங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், அந்தத் தீர்ப்பின் மூன்றாம் தொகுதியின் 98, 99, 100 ஆகிய பக்கங்களில் கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் 1972 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஒரு டி.எம்.சிக்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்கள், 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டப்பட்ட ஒரு டி.எம்.சிக்கும் அதிக கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கங்கள், எதிர்காலத்தில் கட்டப்படுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள் என முறையே 13, 13, 8 திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இவற்றில் எதிலுமே மேகேதாட்டு அணை குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக புதிதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 8 திட்டங்களும் கேரளத்தில் கபினி நீர்ப்பிடிப்பு பகுதியில் தான் உள்ளனவே தவிர கர்நாடகத்தில் எந்தத் திட்டமும் இல்லை.

அவ்வாறு இருக்கும் போது, புதிதாக எந்த பாசனத் திட்டத்தையும் மேற்கொள்ள முடியாது என்ற தீர்ப்பின் அடிப்படையில் மேகேதாட்டு அணை உள்ளிட்ட எந்தத் திட்டத்தையும் கர்நாடக அரசால் செயல்படுத்த முடியாது. மேலும் மேல்மடை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் ஆகியவற்றில் எந்த கட்டுமானங்களை மேற்கொள்வதாக இருந்தாலும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி அவசியம் என்று காவிரி நடுவர் மன்றமும், உச்சநீதிமன்றமும் தெளிவாக தீர்ப்பளித்துள்ளன.

அவ்வாறு இருக்கும் போது, மேகேதாட்டு அணை விவகாரத்திற்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோருவது தேவையில்லாத சிக்கல்களை ஏற்படுத்தும்; நாமே தமது தலையை தேவையில்லாமல் முதலையின் வாயில் கொடுப்பதற்கு ஒப்பாகி விடும்.

மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை சட்டப்போராட்டம் மற்றும் அரசியல் அழுத்தத்தின் மூலமும் தான் பாதுகாக்க முடியும். இதற்கான தமிழக அரசின் முயற்சிகளுக்கு பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவாகத் தான் உள்ளன. இத்தகைய சூழலில் மேகேதாட்டு அணை சிக்கலுக்கு தீர்வு காண தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோருவதன் மூலம் கர்நாடகத்திற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தி விடக் கூடாது.

எனவே, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தனி நடுவர் மன்றம் குறித்த பகுதிகளை உரிய பேரவை விதிகளை பின்பற்றி நீக்கி விட்டு, அதன்பிறகே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.