惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

云风的 BLOG
云风的 BLOG
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
J
Java Code Geeks
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
Engineering at Meta
Engineering at Meta
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
小众软件
小众软件
博客园 - 聂微东
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
月光博客
月光博客
Last Week in AI
Last Week in AI
博客园_首页
I
InfoQ
T
Tailwind CSS Blog
爱范儿
爱范儿
雷峰网
雷峰网
Recent Announcements
Recent Announcements
F
Fortinet All Blogs
B
Blog
WordPress大学
WordPress大学
A
About on SuperTechFans
V
Visual Studio Blog
有赞技术团队
有赞技术团队
P
Proofpoint News Feed

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பள்ளத்தாக்கில் விழுந்து புனே இளைஞர் இறந்த சம்பவத்தில் திர...
செய்திப்பிரிவு · 2026-06-24 · via hindutamil

கேதன் விஷால், சியா கோயல், சேத்தன் சவுத்ரி

Updated on: 

மும்பை: ம​கா​ராஷ்டி​ர மாநிலம் புனே நகருக்கு அரு​கிலுள்ள கஹுஞ்சே பகு​தி​யைச் சேர்ந்​தவர் கேதன் விஷால் (25). இவர் தனது குடும்​பத்​தின் ரியல் எஸ்​டேட் நிறு​வனத்​தில் இயக்​குந​ராக இருந்​தார்.

இவருக்கு சியா கோயல் (20) என்ற பெண்​ணுடன் திரு​மணம் நிச்சயிக்​கப்​பட்டது. இந்​நிலை​யில் கேதன் கடந்த 19-ம் தேதி தனது வருங்​கால மனைவி சியா​வின் பிறந்​த​நாளை கொண்​டாட அவருடன் தங்​கள் பகு​தி​யில் உள்ள லோகா​காட் கோட்​டைக்கு சென்​றிருந்​தார். அங்கு சுமார் 350 அடி ஆழ பள்​ளத்​தாக்​கில் விழுந்து கேதன் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீ​ஸார் கூறிய​தாவது: சேத்தன் சவுத்ரி (22) என்ற இளைஞருடன் சியா காதலில் இருந்துள்ளார். கேதனை திரு​மணம் செய்​து​கொள்ள அவருக்கு விருப்​பமில்​லை. இதனால் கேதனை கொலை செய்ய அவர் திட்டமிட்​டார். அவரது முதல் முயற்சி தோல்வி அடைந்​தது. இரண்டாவது முயற்​சி​யில்​தான் கேதன் கொல்​லப்​பட்​டுள்​ளார்.

இதற்கு முன் ஜூன் 14-ம் தேதி கேதனுடன் லோகா​காட் கோட்டைக்கு சியா மலை​யேற்​றப் பயணம் சென்​றுள்​ளார். அப்போது பாம்பு வந்​து​விட்​டது என்ற பயமுறுத்தி கேதனை கீழேதள்ள முயன்​றுள்​ளார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்​தது. சியா மீது கேதனும் சந்​தேகம் அடைய​வில்​லை.

இதையடுத்து ஜூன் 19-ம் தேதி லோகா​காட்​டிற்கு மற்​றொரு பயணத்​துக்கு சியா திட்​ட​மிட்​டார். இந்​தப் பயணத்​தின்​போது காதலன் சேத்​தன் சவுத்ரி ரகசி​ய​மாக பின்​னால் வரவழைக்கப்பட்டார். பிறகு இரு​வரும் சேர்ந்து கேதனை மலைப்பள்​ளத்​தாக்​கில் தள்ளி கொன்​றுள்​ளனர்.

சியா​விடம் நடத்​திய விசா​ரணை​யில் சந்​தேகம் ஏற்​பட்​ட​தால் அவரது மொபைல் போன் பதிவு​கள், சமூக ஊடக செயல்​பாடு​கள் ஆய்வு செய்​யப்​பட்​டன. இதில் உண்மை தெரிய​வந்​தது. இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்​வாறு போலீ​ஸார் கூறினர். இந்​தச் சம்பவம் கேதன்- சியா திரு​மணத்​திற்​குச் சில நாட்​களுக்கு முன்பு நடந்​துள்​ளது.