惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Google DeepMind News
Google DeepMind News
aimingoo的专栏
aimingoo的专栏
爱范儿
爱范儿
D
Docker
I
InfoQ
Microsoft Security Blog
Microsoft Security Blog
G
Google Developers Blog
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Vercel News
Vercel News
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
T
Tailwind CSS Blog
D
DataBreaches.Net
月光博客
月光博客
N
Netflix TechBlog - Medium
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
V
Visual Studio Blog
MyScale Blog
MyScale Blog
B
Blog
阮一峰的网络日志
阮一峰的网络日志
L
LangChain Blog
Recent Announcements
Recent Announcements
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
WordPress大学
WordPress大学

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“2 மணி நேரம் கூட வெயிலில் நிற்க முடியாத விஜய் மக்களுக்கு ...
2026-04-23 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: “2 மணி நேரம்கூட வெயிலில் நிற்க முடியாதவர் விஜய். இவரால் மக்களுக்கு எப்படி பணியாற்ற முடியும்?. எனவே, சுகவாசிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, விராலிமலை, அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,683 வாக்குச்சாவடிகளில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 13.09 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

அதில், திருமயம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சருமான எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு 3-ம் வீதியில் உள்ள ராணியார் அரசு உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார்.

இதேபோல, ஆலங்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் தனது சொந்த ஊரான மறமடக்கி அரசுப் பள்ளியில் தனது வாக்கை செலுத்தினார். விராலிமலை தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கை பதிவு செய்தார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியதாவது: தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படாமல் ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்பட்டு வருகிறது. தேர்தலில் எத்தனை முனை போட்டியாக இருந்தாலும் களம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. எஸ்ஐஆர் பணிக்குப் பிறகும் இரட்டைப் பதிவு, இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்ததால் வாக்குப்பதிவு 10 சதவீதம் குறையும். அதேசயம், கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு அதிகரிக்கும்.

இளம் வாக்காளர்களை கவரும் வகையில், அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கி பிரச்சாரம் செய்துள்ளோம். நடிகர் எம்ஐிஆர் என்பவர் வேறு. விஜய் என்பவர் வேறு என்பதை வித்தியாசப்படுத்தி இருக்கிறோம். 2 மணி நேரம் கூட வெயிலில் நிற்க முடியாதவர் விஜய்.

இவரால் மக்களுக்கு எப்படி பணியாற்ற முடியும்?. எனவே, சுகவாசிகளை மக்கள் ஏற்க மாட்டார்கள்.அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஏற்கெனவே செல்வாக்கை இழந்து விட்டார். இத்தேர்தலிலும் தோல்வியை சந்திப்பார்,” என்று அவர் தெரிவித்தார்.