惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
Y
Y Combinator Blog
云风的 BLOG
云风的 BLOG
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
腾讯CDC
T
The Blog of Author Tim Ferriss
P
Proofpoint News Feed
Hugging Face - Blog
Hugging Face - Blog
博客园_首页
小众软件
小众软件
美团技术团队
Martin Fowler
Martin Fowler
爱范儿
爱范儿
有赞技术团队
有赞技术团队
博客园 - 【当耐特】
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Microsoft Security Blog
Microsoft Security Blog
宝玉的分享
宝玉的分享
J
Java Code Geeks
B
Blog
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
B
Blog RSS Feed
博客园 - Franky

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது...
2026-04-29 · via hindutamil

Updated on

1 min read

டெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில், இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், “இந்தியாவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட வரம்பு உள்ளது. நமது சமூகம் மிகவும் சிக்கலானது. ஒரே மாதிரியான மக்கள் வாழும் சமூகங்களில் கருத்துக் கணிப்புகள் சிறப்பாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்தியாவில் அப்படி அல்ல. நீங்கள் யாரிடம் கருத்துகளை கேட்கிறீர்களோ அவர்கள் உண்மையிலேயே சமூகத்தை பிரதிபலிக்கிறார்கள் என்று உங்களால் ஒருபோதும் அறிய முடியாது.

தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை மற்றவர்களிடம் கூறத் தயங்கும் நிகழ்வு அதிகரித்து வருவதாகக் கருத்துக் கணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். இதில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மே 4-ஆம் தேதி முடிவுகளை அறிந்து கொள்ள ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்தார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாதது குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த சசி தரூர், “கிரணுக்கும் எனக்கும் இடையில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் கேலி செய்துகொண்டிருந்தோம். கூட்டத் தொடர் முடிந்துவிட்டது. நாங்கள் கிளம்பிக் கொண்டிருந்தோம். யாரும் என்னை பெண்களுக்கு எதிரானவர் என்று கருத மாட்டார்கள் என்று நாங்கள் கேலி செய்துகொண்டிருந்தோம், அது உண்மைதான்.

அதேபோல், காங்கிரஸ் கட்சியையும் யாரும் பெண்களுக்கு எதிரானது என்று கருத மாட்டார்கள். நாங்கள் பெண்களால், வலிமையான பெண்களால் வழிநடத்தப்படுகிறோம். 2013-ல் மாநிலங்களவையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றப்பட்டபோதும், அதைத் தொடர்ந்து அந்த அரசு மக்களவையில் நிறைவேற்றப்பட்டபோதும் அதை நாங்கள் வலுவாக ஆதரித்தோம். நாங்கள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு மிகவும் ஆதரவாக இருக்கிறோம்.

தொகுதி மறுவரையறையுடன் அதை இணைப்பதை மட்டுமே நாங்கள் எதிர்த்தோம். அரசு அதை தேவையற்ற அவசரத்தில் திணிப்பதாக நாங்கள் நம்புகிறோம். தொகுதி மறுவரையறையை நிறைவேற்றுவதற்கு மகளிர் இட ஒதுக்கீட்டை ஒரு சாக்காகப் பயன்படுத்துவது நல்லதல்ல. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தனியாக மீண்டும் அறிமுகப்படுத்தப்படுமானால், அதற்கு ஆதரவாக நாளையே நாங்கள் வாக்களிக்கத் தயார்” என தெரிவித்தார்.