惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

B
Blog RSS Feed
B
Blog
N
Netflix TechBlog - Medium
量子位
月光博客
月光博客
博客园_首页
博客园 - Franky
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
Last Week in AI
Last Week in AI
T
The Blog of Author Tim Ferriss
Hugging Face - Blog
Hugging Face - Blog
雷峰网
雷峰网
M
MIT News - Artificial intelligence
J
Java Code Geeks
大猫的无限游戏
大猫的无限游戏
D
DataBreaches.Net
腾讯CDC
Engineering at Meta
Engineering at Meta
云风的 BLOG
云风的 BLOG
L
LangChain Blog
GbyAI
GbyAI
IT之家
IT之家
Y
Y Combinator Blog
人人都是产品经理
人人都是产品经理

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தி.நகரில் ஒரே இடத்தில் பணியாற்றும் 2 பேர் அடுத்தடுத்து கொலை
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

சென்னை: ​தி.நகரில் ஒரே இடத்​தில் பணி​யாற்​றும் 2 பேர் அடுத்​தடுத்து கொலை செய்​யப்​பட்ட சம்​பவங்​களில் தொடர்​புடைய குற்​ற​வாளி​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். தி.நகர் தியாக​ராய சாலை​யில் நேற்று முன்​தினம் இரவு ஒரு​வர் மயங்​கிய நிலை​யில் கிடந்​தார். இதைக் கண்ட அப்​பகுதி மக்​கள் மாம்​பலம் போலீ​ஸாருக்கு தகவல் கொடுத்​தனர்.

போலீ​ஸார் சென்று பார்த்​த​போது சம்​பந்​தப்​பட்ட நபர் இறந்து கிடந்​தது தெரிந்​தது. இதையடுத்து உடலை மீட்ட போலீ​ஸார் பிரேதப் பரி சோதனைக்​காக அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

தொடர்ந்து நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சடல​மாகக் கிடந்​தவர், தி.நகர் கண்​ணம்​மாபேட்​டையைச் சேர்ந்த ராஜேந்​திரன் (50) என்​பதும், அவர் தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் துப்​புர​வுப் பணி​யாள​ராக வேலை செய்து வந்​ததும் தெரிய​வந்​தது.

மேலும் நேற்று முன்​தினம் மாலை சம்பவ இடத்​துக்கு அரு​கில் உள்ள டாஸ்​மாக் கடை​யில் மது அருந்​தி​ய​போது, அங்கு இருந்த தேனாம்​பேட்டை கங்​கைக்​கரைபுரத்​தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலாஜி​யுடன் (34) ராஜேந்​திரனுக்கு வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

பின்​னர் ராஜேந்​திரன் அங்​கிருந்து சென்​ற​போது, பாலாஜி அவரை வழிமறித்து தாக்​கிய​தாகக் கூறப்​படு​கிறது. இதில் கீழே விழுந்த ராஜேந்​திரனுக்கு தலை​யில் பலத்த காயம் ஏற்​பட்​டு, சுயநினைவை இழந்து பின்​னர் உயி​ரிழந்​த​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இதையடுத்து பாலாஜியை போலீ​ஸார் கைது செய்​தனர்.

துப்​புரவு மேஸ்​திரி

விஜயா மஹால் திருமண மண்​டபத்​தின் பின்​புறத்​தில் ஒரு​வர் தலை​யில் ரத்​தக் காயங்​களு​டன் கிடப்​ப​தாக நேற்று முன்​தினம் இரவு போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்​துக்கு விரைந்த போலீ​ஸார், காயமடைந்த நபரை 108 ஆம்​புலன்ஸ் மூலம் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

விசா​ரணை​யில், காயமடைந்​தவர் ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தைச் சேர்ந்த ரவி​கு​மார் (46) என்​பதும், அவர் இங்கு திருமண நிகழ்ச்​சிகளுக்​கான துப்​புர​வுப் பணி​யாளர்​களை அழைத்து வரும் மேஸ்​திரி​யாக பணி​யாற்றி வந்​ததும் தெரிய​வந்​தது.

விஜயா மஹாலில் நடை​பெற்ற நிகழ்ச்​சிக்​காக பணி​யாளர்​களை அழைத்து வந்து வேலை செய்து கொண்​டிருந்​த​போது, தன்​னிடம் வேலை பார்த்த கன்​னி​யாகுமரி மாவட்​டம், நாகர்​கோ​விலைச் சேர்ந்த மணி என்ற சொர்​ணகு​மாரை (65) வேலை தொடர்​பாக ரவி​கு​மார் பலமுறை கண்​டித்​த​தாக கூறப்​படு​கிறது.

இதனால் ஆத்​திரமடைந்த மணி சம்​பவத்​தன்று வேலை நடை​பெற்​றுக் கொண்​டிருந்​த​போது கட்​டை​யால் ரவி​கு​மாரை தாக்​கி​விட்டு தப்​பிச் சென்​றுள்​ளார். இதையடுத்து கொலை முயற்சி உள்​ளிட்ட பிரிவு​களில் வழக்​குப்​ப​திவு செய்த போலீ​ஸார், மணியை கைது செய்​தனர்.

இந்​நிலை​யில் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வந்த ரவி​கு​மார் சிகிச்சை பலனின்றி நேற்று உயி​ரிழந்​தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்​காக மாற்​றப்​பட்​டுள்​ளது.

கொலை செய்​யப்​பட்ட ராஜேந்​திரன் மற்​றும் ரவி​கு​மார் இரு​வரும் தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் பணி​யாற்றி வந்​தவர்​கள் என்​பது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. ஒரே நாளில் ஒரே பணி​யிடத்​துடன் தொடர்​புடைய 2 பேர் உயி​ரிழந்த சம்​பவம் அப்​பகு​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ உள்​ளது.