惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
G
Google Developers Blog
B
Blog RSS Feed
A
About on SuperTechFans
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
V
V2EX
Stack Overflow Blog
Stack Overflow Blog
C
Check Point Blog
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
Engineering at Meta
Engineering at Meta
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
博客园 - 司徒正美
D
Docker
F
Fortinet All Blogs
Hugging Face - Blog
Hugging Face - Blog
Last Week in AI
Last Week in AI
H
Help Net Security
WordPress大学
WordPress大学
MyScale Blog
MyScale Blog
博客园 - Franky
人人都是产品经理
人人都是产品经理
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
Blog — PlanetScale
Blog — PlanetScale
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தவெகவை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரை கண்டித்து தமிழகம் முழு...
செய்திப்பிரிவு · 2026-05-09 · via hindutamil

தவெக ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செல்வப்பெருந்தகை, தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் நேற்று நடைபெற்றது. | படம்: ம.பிரபு |

Updated on: 

சென்னை: தவெகவை ஆட்​சி​யமைக்க அழைக்​காத ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை கண்​டித்​து, தமிழகம் முழு​வதும் காங்கிரஸ் சார்​பில் ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக தனிப்​பெரும் கட்​சி​யாக 108 இடங்​களில் வெற்றி பெற்​றது. ஆட்​சி​யமைக்க 118 எம்​எல்​ஏக்​களின் ஆதரவு தேவை. இந்​நிலை​யில், ஆட்​சி​யமைக்க அழைக்​கு​மாறு தவெக தலை​வர் விஜய், ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகரை நேரில் சந்​தித்து கோரிக்கை விடுத்​தார்.

அதை ஆளுநர் ஏற்​காமல், 118 எம்​எல்​ஏக்​கள் ஆதரவு இருந்​தால் மட்​டுமே அழைக்க முடி​யும் என திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், எம்​எல்​ஏக்​களின் ஆதரவை நிரூபிக்க வேண்​டியது சட்​டப்​பேரவை தான்.

ஆளுநரிடம் நிரூபிக்க வேண்​டிய அவசி​யமில்​லை. தவெக ஆட்​சி​யமைப்​பதை விரும்​பாமல், பாஜக செய்​யும் சதி என அரசி​யல் கட்​சிகள் விமர்​சித்து வந்​தன.

இந்​நிலை​யில், இந்​திய அரசி​யல் சட்​டத்​துக்கு எதி​ராக தவெக ஆட்​சி​யமைக் கூடாது என்று பாஜக அரசின் கைப்​பாவை​யாக ஆளுநர் ஆர்​.​வி.அர்​லேகர் செயல்​படு​வ​தாக குற்​றம்​சாட்டி காங்​கிரஸ் சார்​பில், தமிழகம் முழு​வதும் மாவட்ட தலைநகரங்​களில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது.

சென்னை அண்ணா சாலை​யில், தமிழ்​நாடு காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தலை​மை​யில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில், தமிழக மேலிட பொறுப்​பாளர் கிரிஷ் சோடங்​கர் பங்​கேற்​று, ஆளுநர் மற்​றும் மத்​திய பாஜக​வுக்கு எதி​ராக கண்ட கோஷங்​கள் எழுப்​பி​னார்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் செல்​வப் பெருந்​தகை பேசும்​போது, “தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தனிப்​பெரும் கட்​சி​யாக தவெக வெற்றி பெற்​றுள்​ளது. ஆனாலும், தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்​கத்​தில், இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ராக பாஜக மற்​றும் அவர்​களின் கைப்​பாவை​யாக ஆளுநர் செயல்​படு​கிறார்.

அவர்​களின் இந்த செயல்​பாட்டை கண்​டித்து மாவட்ட தலைநகரங்​களில் காங்​கிரஸ் சார்​பில் மாபெரும் கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படு​கிறது” என்​றார். ஆர்ப்​பாட்​டத்​தின் முடி​வில் கிரிஷ் சோடங்​கர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் மக்​களால் வழங்​கப்​பட்ட தீர்ப்பு ஆளுநர் மற்​றும் பாஜக​வால் சிதைக்​கப்​பட்​டுள்​ளது.

இது இந்​திய அரசமைப்பு சட்​டம், மக்​களாட்சி மீதான தாக்​குதல். இதை அனு​ம​திக்க முடி​யாது. தமிழக மக்​களின் தீர்ப்​புக்கு காங்​கிரஸ் ஆதர​வாக இருக்​கும். அதற்​காகவே காங்​கிரஸ், தவெக​வுக்கு ஆதரவு அளிக்​கிறது.

சமூக விரோத சக்​தி​கள் தமிழகத்​தில் நேரடி​யாகவோ, மறை​முக​மாகவோ நுழைய அனு​ம​திக்க மாட்​டோம். காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் யாரும் விலை போக​வில்லை அனை​வரும் ஒற்​றுமை​யாக தவெக​வுக்கு ஆதர​வாக இருக்​கிறார்​கள்” என்​றார்.

இந்த ஆர்ப்​பாட்​டத்​தில் மாநில முன்​னாள் தலை​வர் கே.​வி.தங்​க​பாலு. துணைத் தலை​வர் சொர்ணா சேது​ராமன், அமைப்பு செய​லா​ளர் ராம்​மோகன், மாவட்ட தலை​வர்​ கராத்​தே செல்​வம்​ உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.