惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

月光博客
月光博客
IT之家
IT之家
Hugging Face - Blog
Hugging Face - Blog
J
Java Code Geeks
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
博客园 - 叶小钗
MyScale Blog
MyScale Blog
G
Google Developers Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
大猫的无限游戏
大猫的无限游戏
博客园 - 三生石上(FineUI控件)
Google DeepMind News
Google DeepMind News
Engineering at Meta
Engineering at Meta
The Cloudflare Blog
Martin Fowler
Martin Fowler
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
N
Netflix TechBlog - Medium
MongoDB | Blog
MongoDB | Blog
I
InfoQ
WordPress大学
WordPress大学
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
H
Help Net Security

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரியில் மீண்டும் என்டிஏ கூட்டணி ஆட்சி: 5-வது முறைய...
2026-05-05 · via hindutamil

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற முதல்வர் ரங்கசாமி, தேர்தல் அலுவலரிடம் இருந்து வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார். படம்: எம்.சாம்ராஜ்

Updated on

2 min read

புதுச்சேரி: புதுச்​சேரி​யில் மீண்​டும் தேசிய ஜனநாயகக் கூட்​டணி (என்​டிஏ) ஆட்சி அமை​கிறது. ஐந்​தாவது முறை​யாக ரங்​க​சாமி முதல்​வ​ராகிறார்.

புதுச்​சேரி​யில் புதுச்​சேரி, காரைக்​கால், மாஹே, ஏனாம் என 4 பிராந்​தி​யங்​கள் உள்​ளன. இதற்​கான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்​.9-ம் தேதி

நடை​பெற்​றது. இங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக்​கும் இண்​டியா கூட்​ட​ணிக்​கும் இடையே கடும் போட்டி நில​வியது. என்​டிஏ கூட்​ட​ணி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ், பாஜக, அதி​முக, புதி​தாக உரு​வான லட்​சிய ஜனநாயகக் கட்சி உள்​ளிட்​டவை இடம்​பெற்​றன.

இண்​டியா கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் - திமுக இடையே ஏற்​பட்ட மோதலால் தொடக்​கம் முதலே பெரும் குழப்​பம் நில​வியது. திமுக போட்​டி​யிட்ட 5 தொகு​தி​களில் காங்​கிரஸ் வேட்​பாளர்​களும் நிறுத்​தப்​பட்​டனர். அத்​துடன் இடது​சா​ரி​கள் தனித்​துப் போட்​டி​யிட்​டன. விசிக​வுக்கு ஒதுக்​கிய தொகு​தி​யில் காங்​கிரஸ், இடது​சா​ரி​கள் போட்​டி​யிட்​டன.

இந்​நிலை​யில், தமிழகம், புதுச்​சேரி உட்பட 5 மாநிலங்​களில் பதி​வான வாக்​கு​கள் நேற்று எண்​ணப்​பட்​டன. புதுச்​சேரி​யில் தொடக்​கம் முதலே என்​டிஏ கூட்​டணி முன்​னிலை வகித்​தது. முதல் சுற்றில் 17 தொகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்தட்​டாஞ்​சாவடி​யில் என்​.ஆர்​.​காங்​கிரஸ் நிறு​வனர் ரங்​க​சாமி, முத்​தி​யால்​பேட்​டை​யில் வையாபுரி மணி​கண்​டன், ஏனாமில் மல்​லாடி கிருஷ்ணா​ராவ், அரி​யாங்​குப்​பத்​தில் அய்​யப்​பன், நெட்​டப்​பாக்​கத்​தில் பேர​வைத் துணைத் தலை​வர் ராஜவேலு, வில்​லியனூரில் ரவிக்​கு​மார், ஏம்​பலத்​தில் மோகன் தாஸ்,காரைக்​கால் வடக்​கில் அமைச்​சர் திரு​முரு​கன் , லாஸ்​பேட்​டை​யில் சிவக்​கொழுந்து ஆகியோர் வென்றனர்.

மண்​ணாடிப்​பட்​டில் பாஜக வேட்​பாளர் அமைச்​சர் நமச்​சி​வா​யம், நிரவி டி.ஆர்​.பட்​டிணத்​தில் மீனாட்சி சுந்​தரம் ஆகியோர் வென்​றனர். உப்​பளம் தொகு​தி​யில் அதி​முக மாநில செய​லா​ளர் அன்​பழகன் வென்​றார். காங்​கிரஸ் கட்​சி​யில் ஊசுடு தொகு​தி​யில் கார்த்​தி​கேயன் வென்​றார். நெல்​லித்​தோப்​பில் திமுக வேட்​பாளர் கார்த்​தி​கேயன் வென்​றார்.

சுயேச்சை​களில் மாஹே​யில் அசோக்​கு​மார், நெடுங்​காட்​டில் விக்​னேஷ்வரன், கதிர்​காமத்​தில் அழகு ( எ) அழகானந்​தம் ஆகியோர் வென்​றனர்.

இதைத்​தொடர்ந்து 2-வது சுற்று வாக்கு எண்​ணிக்கை 13 தொகு​தி​களில் நடைபெற்றது. அதி​லும் என்​டிஏ கூட்​ட​ணியே முன்​னிலை பெற்​றது. இக்​கூட்​ட​ணி​யில் என்​.ஆர். காங்​கிரஸில் மங்​கலம் தொகு​தி​யில் ரங்​க​சாமி, உழவர் கரை​யில் நாராயண​சாமி, இந்​திரா நகரில் ஏகேடி ஆறு​முகம் வெற்றி பெற்​றனர். பாஜக​வில் முதலி​யார் பேட்​டை​யில் ஜான்​கு​மார், திருநள்​ளாறில் ஜிஎன்​எஸ் ராஜசேகரன் ஆகியோர் வெற்றி பெற்​றனர். காம​ராஜ் நகரில் லஜக தலை​வர் ஜோஸ் சார்​லஸ் மார்ட்​டின் வென்​றார்.

இண்​டியா கூட்​ட​ணி​யில் திமுக​வில் காரைக்​கால் தெற்​கில் நாஜிம், பாகூரில் செந்​தில்​கு​மார், காலாப்​பட்​டில் செந்​தில், ராஜ்பவனில் விக்​னேஷ் கண்​ணன் ஆகியோர் வென்​றனர். மணவெளி தொகு​தி​யில் ராமு, திரு​புவனை​யில் சாய் சரவணன் ஜெ குமார் ஆகியோர் தவெக சார்​பில் போட்​டி​யிட்டு வெற்றி பெற்​றனர். தவெக கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றுள்ள நேயம் மக்​கள் கழகத்​தின் தலை​வர் நேரு உருளை​யன்​பேட்​டை​யில் வெற்றி பெற்​றார்.

என்​.ஆர்​.​காங்​கிரஸ் 12, பாஜக 4, அதி​முக 1, லஜக 1 என 18 தொகு​தி​களில் வெற்றி பெற்​றதன் மூலம் மீண்​டும் என்​டிஏ கூட்​டணி ஆட்​சி​யமைக்​கிறது. கூட்​டணி தலை​வர் ரங்​க​சாமி 5-வது முறை​யாக முதல்​வ​ராகிறார்.

திமுக 5 தொகு​தி​களில் வெற்றி பெற்று எதிர்க்​கட்​சி​யாகிறது. காங்​கிரஸ் ஒரு இடத்​தில் மட்​டுமே வென்​றுள்​ளது. வெற்றி பெற்ற 3 சுயேச்​சைகளில் 2 பேர் என்​டிஏ கூட்​ட​ணிக்கு நெருக்​க​மானவர்​கள். அதனால் இக்​கூட்​ட​ணிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்​புள்​ளது. முதல்​வர் ரங்​க​சாமி தட்​டாஞ்​சாவடி, மங்​கலம் ஆகிய இரு தொகு​தி​களி​லும் வென்​றுள்​ளார்.