





















Updated on
:
1 min read
சென்னை: பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 23 இடங்களில் போட்டியிட்டது.
அந்தத் தொகுதிகளில் பதிவான 2.50 கோடி வாக்குகளில், பாஜக 49.18 லட்சம் வாக்குகளைப் பெற்றது. இது சராசரியாக 19.62 சதவீதம் ஆகும். தற்போது, நடந்து முடிந்துள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தாமரை சின்னத்தில் 33 தொகுதிகளில் போட்டியிட்டனர்.
அந்தத் தொகுதிகளில் பதிவான 66 லட்சம் வாக்குகளில், பாஜக 14.66 லட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், பாஜகவின் வாக்கு சதவீதம் 22.22 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2024-ல் இருந்த 19.62 சதவீதத்திலிருந்து, தற்போது, 22.22 சதவீதமாக உயர்ந்துள்ளது, 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 133 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, இப்போது வெறும் 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
அதன் வாக்கு வங்கி 48 சதவீதத்திலிருந்து 24 சதவீதமாக சரிந்துள்ளது. தற்போது, பாஜகவை விட வெறும் 1.8 சதவீதம் மட்டுமே திமுக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் தவெக-வை தவிர, தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தியுள்ள ஒரே கட்சி பாஜக மட்டுமே. பாஜகவை மதவாதக் கட்சி என்று விமர்சிக்கும் திமுகதான், உண்மையில் மதவாத அரசியலை முன்னெடுத்து வருகிறது என்பது நிரூபனமாகி உள்ளது என்றார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。