惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Jina AI
Jina AI
博客园 - 【当耐特】
量子位
C
Check Point Blog
博客园 - 叶小钗
博客园 - 聂微东
博客园 - 三生石上(FineUI控件)
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
Hugging Face - Blog
Hugging Face - Blog
美团技术团队
The Cloudflare Blog
T
Tailwind CSS Blog
人人都是产品经理
人人都是产品经理
月光博客
月光博客
V
V2EX
Last Week in AI
Last Week in AI
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
IT之家
IT之家
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
Apple Machine Learning Research
Apple Machine Learning Research
S
SegmentFault 最新的问题
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
சுவிட்சர்லாந்து முதல் மொராக்கோ வரை: நாக்-அவுட் சுற்றுக்கு...
செய்திப்பிரிவு · 2026-06-26 · via hindutamil

Updated on: 

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் கனடாவை வென்றது. பி பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த நிலையில் சுவிட்சர்லாந்து, கனடா அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

வான்கூவரிலுள்ள பிசி பிளேஸ் மைதானத்தில் இந்த ஆட்டம் நேற்று அதிகாலை 12.30 மணிக்கு நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியின் சார்பில் 46-வது நிமிடத்தில் ரூபன் வர்காஸும், 57-வது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பியும் தலா ஒரு கோலடித்தனர். கனடா அணிக்காக பிராமிஸ் டேவிட் 76-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். லீக் சுற்றின் முடிவில் பி பிரிவில் சுவிட்சர்லாந்து 7 புள்ளிகளுடன் முதலிடமும், கனடா 4 புள்ளிகளுடன் 2-ம் இடமும் பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறின.

போஸ்னியா அபாரம்

சியாட்டிலில் உள்ள லூமன் ஃபீல்ட் மைதானத்தில் பி பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போஸ்னியா & ஹெர்சகோவினா அணி 3-1 என்ற கோல் கணக்கில் கத்தார் அணியைத் தோற்கடித்தது. போஸ்னியா அணி சார்பில் கெரிம் அலாஜ்பேகோவிக் (29-வது நிமிடம்), எர்மின் மஹ்மிக் (80-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

இதில் கத்தார் அணி வீரர் மஹ்மூத் அபுனடா 34-வது நிமிடத்தில் சுய கோலடித்தார். கத்தார் அணி சார்பில் ஹசன் அல் ஹய்டோஸ் 42-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார்.

மொராக்கோ வெற்றி

சி பிரிவில் அட்லாண்டாவின் மெர்சிடிஸ் பென்ஸ் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மொராக்கோ அணி 4-2 என்ற கோல் கணக்கில் ஹைதி அணியை வென்றது. மொராக்கோ அணி சார்பில் அச்ரப் ஹகிமி (39-வது நிமிடம்), இஸ்மாயில் சைபாரி (45+1-வது நிமிடம்), சவுபியான் ரஹிமி (78-வது நிமிடம்), கெஸ்ஸிமி யாசின் (99-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.

மொராக்கோ அணியின் யாசின் பவுனு ( 10-வது நிமிடம்) சுய கோலடித்ததார். வில்சன் இசிடோர் 43-வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். லீக் சுற்றின் முடிவில் சி பிரிவிலிருந்து பிரேசில், மொராக்கோ அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

தென் ஆப்பிரிக்கா தகுதி

குரூப் ஏ பிரிவில் மான்டேரியிலுள்ள எஸ்டாடியோ பிபிவிஏ மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரிய அணியைத் தோற்கடித்தது.

தென் ஆப்பிரிக்க அணி வீரர் தப்பேலோ மாசெக்கோ 63- வது நிமிடத்தில் ஒரு கோலடித்தார். இதன்மூலம் குரூப் ஏ பிரிவில் மெக்சிகோ 9 புள்ளிகளும், தென் ஆப்பிரிக்கா 4 புள்ளிகளும் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.