惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

Blog — PlanetScale
Blog — PlanetScale
Cyber Security Advisories - MS-ISAC
Cyber Security Advisories - MS-ISAC
Vercel News
Vercel News
B
Blog
腾讯CDC
P
Proofpoint News Feed
Google DeepMind News
Google DeepMind News
N
Netflix TechBlog - Medium
L
LangChain Blog
F
Fortinet All Blogs
T
The Blog of Author Tim Ferriss
人人都是产品经理
人人都是产品经理
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
I
InfoQ
IT之家
IT之家
酷 壳 – CoolShell
酷 壳 – CoolShell
aimingoo的专栏
aimingoo的专栏
D
DataBreaches.Net
Stack Overflow Blog
Stack Overflow Blog
The Cloudflare Blog
Last Week in AI
Last Week in AI
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
博客园 - 三生石上(FineUI控件)
T
Tailwind CSS Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் குஜராத் - இன்ற...
2026-05-16 · via hindutamil

Updated on

2 min read

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்​டன்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்​டங்​களில் விளை​யாடி 4 வெற்​றி, 6 தோல்​வி, ஒரு முடிவு இல்​லாத ஆட்​டம் என 9 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 8-வது இடத்​தில் உள்​ளது. அந்த அணி நடப்பு சீசனில் முதல் வெற்​றியைப் பதிவு செய்ய 7-வது போட்டி வரை காத்​திருக்க வேண்​டி​யிருந்​தது. இந்​தத் தொடர் முழு​வதும் அந்த அணி நிலைத்​தன்மை இல்​லாத அணி​யாகவே இருந்து வரு​கிறது. வீரர் தேர்​வு​கள், பேட்​டிங் வரிசையில் செய்​யப்​பட்ட மாற்​றங்​கள் அணி​யின் சீரான ஆட்டத்தை வெகு​வாகப் பாதித்​திருந்​தது.

முதல் 6 ஆட்​டங்​களில் வெற்றி பெறாத கொல்​கத்தா அணி அதன் பின்​னர் மீண்டு வந்து தொடர்​சி​யாக 4 ஆட்​டங்​களில் வெற்றி கண்டது. ஆனால் கடைசி​யாக ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் மோச​மான ஃபீல்​டிங் மற்​றும் விராட் கோலி​யின் அபார​மான பேட்​டிங் காரண​மாக தோல்வி அடைய நேரிட்​டது. இன்​றைய ஆட்​டம் உட்பட எஞ்​சி​யுள்ள 3 ஆட்​டங்​களி​லும் கொல்கத்தா அணி வெற்றி பெற்​றாலும் அதி​கபட்​ச​மாக 15 புள்ளிகளை மட்​டுமே பெற முடி​யும். இது நிகழ்ந்​தா​லும் அந்த அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேற முடி​யுமா என்​பது சந்தேகம்தான்.

ஏனெனில் மற்ற அணி​களின் வெற்​றி, தோல்வி​களை பொறுத்தே கொல்​கத்தா அணி​யின் அடுத்த கட்ட வாய்ப்பு தெரிய​வரும். ஒரு​வேளை இன்​றைய ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி தோல்வி அடைந்​தால் பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை இழக்க நேரிடும். ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்டத்தில் வருண் சக்​ர​வர்த்தி காயம் காரண​மாக களமிறங்கவில்​லை.

வருண் சக்​ர​வர்த்தி இல்​லாதது அணி​யின் பந்​து​வீச்​சில் எதிரொலித்​தது. இன்​றைய ஆட்​டத்​தில் அவர், களமிறங்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. பேட்​டிங்​கில் அங்​ரிஷ் ரகு​வன்ஷி 4 அரை சதங்​களு​டன் 340 ரன்​கள் சேர்த்​துள்​ளார். இதே​போன்று ரிங்கு சிங் 148.95 ஸ்டிரைக் ரேட்​டில் 2 அரை சதங்​களு​டன் 286 ரன்கள் எடுத்​துள்​ளார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். ஷுப்​மன் கில் தலை​மையி​லான குஜராத் டைட்​டன்ஸ் அணி இந்த சீசனில் முழுமை பெற்ற அணிகளில் ஒன்​றாகக் காட்​சி​யளிக்​கிறது.

தொடர்ச்​சி​யாக ஐந்து போட்​டிகளில் வெற்றி பெற்​றுள்ள அந்த அணி 16 புள்​ளி​களு​டன் பட்​டியலில் 2-வது இடத்​தில் உள்​ளது. 12 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள அந்த அணி 8 வெற்​றி, 4 தோல்விகளை பதிவு செய்​துள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தில் குஜ​ராத் அணி வெற்றி பெறும் பட்​சத்​தில் 18 புள்​ளி​களு​டன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்​னேறும் வாய்ப்பை பலப்​படுத்​திக் கொள்​ளும். குஜராத் டைட்​டன்ஸ் அணி​யின் எழுச்​சிக்​கு, சரி​யான நேரத்​தில் ஒருங்​கிணைந்து செயல்​பட்ட அவர்​களது பந்​து​வீச்சு கூட்​ட​ணியே முக்​கிய காரணம்.

இந்த வெற்​றிப் பயணத்​தின் போது காகிசோ ரபாடா 2 முறை ஆட்ட​நாயகன் விருதுகளைப் பெற்​றுள்​ளார். ஜேசன் ஹோல்​டரும் தனது பங்​குக்கு 2 விருதுகளை வென்றுள்ளார். அதே நேரத்​தில், ரஷித் கான் தனது பழைய மாயாஜால பந்​து​வீச்சை மீட்டெடுத்துள்ளதும் பலம் சேர்த்​துள்​ளது. பேட்​டிங்​கில் டாப் ஆர்டரில் ஷுப்​மன் கில், சாய் சுதர்​சன் வலு​வாக உள்​ளனர். இதில் சாய் சுதர்​சன் நடப்பு சீசனில் 501 ரன்​களை குவித்​துள்​ளார்.

நடப்பு சீசனில் அதிக ரன்​கள் குவித்​துள்ள வீரர்​களின் பட்​டியலில் முதலிடத்​தில் இருக்​கும் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யின் ஹென்​ரிச் கிளாசனை விட வெறும் 7 ரன்​கள் மட்​டுமே சாய் சுதர்​சன் பின்​தங்​கி​யுள்​ளார். தனது கடைசி ஆறு இன்​னிங்​ஸ்​களில் ஒரு சதம் உட்பட ஐந்து அரைசதங்​களை விளாசி​யுள்ள சாய் சுதர்சனிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்​டைவீச்சு வெளிப்படக்கூடும். ஷுப்​மன் கில்​லும் சிறந்த ஃபார்​மில் உள்​ளார். நடு​வரிசை​யில் வாஷிங்​டன் சுந்​தர் தனது அதிரடி​யால் பலம் சேர்த்து வரு​கிறார். இவர்​களு​டன் ஜாஸ் பட்​லரும் மட்​டையை சுழற்​றத்​ தொடங்​கி​னால்​ அணி​யின்​ பலம்​ மேலும்​ அ​திகரிக்கும்.