


























Updated on:
சிவராஜ்குமார் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் அபிஷன் ஜீவிந்த்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து ‘வித் லவ்’ படத்திலும் நாயகனாக நடித்திருந்தார். மீண்டும் இயக்குநராக எப்போது களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
தற்போது மீண்டும் நடிகராக தொடர உள்ளார் அபிஷன் ஜீவிந்த். இந்த புதிய படத்தில் அவருக்கு அப்பாவாக சிவராஜ்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்பா – மகன் கதையாக இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்தை ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் இணை இயக்குநராக பணிபுரிந்த கெளதம் சிவராமன் இயக்கவுள்ளார்.
இந்தப் புதிய படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இதர நடிகர்கள் உள்ளிட்ட விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால், இந்த புதிய படத்தின் பணிகள் சிறிய படப்பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த புதிய படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。